Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, November 14, 2013

ராணுவத்தில் இலவச பி.இ. பயிற்சியுடன் வேலை பிளஸ் 2 தகுதி

இந்திய ராணுவத்தில் 10 + 2 Technical Entry Scheme திட்டத்தின் 31வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் பொறியியல் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிப்பிரிவு: 10 +2 Technical Entry Scheme Course 31. மொத்த காலியிடங்கள்: 85. கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவில் 70 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.11.2013.

தேசிய நீர் மின்சார கழகத்தில் பயிற்சி இன்ஜினியர்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய நீர்மின்கழகம் 12 மற்றும் 13வது ஐந்தாண்டு திட்டங்களில் பல நீர்மின் சக்தி திட்டங்கள் தொடங்க இருப்பதால் இந்தியா முழுவதும் உள்ள நீர்மின்சக்தி நிலையங்களுக்கு பயிற்சி இன்ஜினியர்களை தேசிய நீர்மின் கழகம் தேர்வு செய்ய உள்ளது. 1. பயிற்சி இன்ஜினியர்: சிவில்- 15 2. பயிற்சி இன்ஜி னியர்: எலக்ட்ரிக்கல்- 13 3. பயிற்சி இன்ஜினி யர்: மெக்கானிக்கல்- 6 4. பயிற்சி அதிகாரி: சுற்றுப்புறச்சூழல்- 4 5. பயிற்சி அதிகாரி: மனிதவளம்- 8 இடங்கள் 6. பயிற்சி அதிகாரி: (நிதி) 14 இடங்கள் 7. பயிற்சி அதிகாரி: 3 8. பயிற்சி அதிகாரி: (புவி இயற்பியல்): 3 9. மருத்துவ அதிகாரி: 4 இடங்கள் 10. அசிஸ்டென்ட் ராஜபாஷா ஆபீசர்: 6 11. இந்தி மொழி பெயர்ப்பாளர்: 5 தகுதி மற்றும் விவரங்களுக்கு http://www.nhpcindia.com/ இணைய தளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2013. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 26.11.2013.

அரசு அச்சகத்தில் பல்வேறு பணிகள் 10ம் வகுப்பு/பிளஸ் 2/ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

கேரளா, திரிச்சூர் மாவட்டத்தில் கொரட்டியில் உள்ள இந்திய அரசு அச்சகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 1. நர்ஸ் : 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நர்சிங்கில் ஏ கிரேடு. 2. கேன்டீன் கிளார்க்: 2 இடங்கள். தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன். 3. கேன்டீன் அட்டென்டென்ட்: 3. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி 4. அசிஸ்டென்ட் பைன்டர்: 31. தகுதி:10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சி. 5. காப்பி ஹோல்டர்: 4 இடங்கள். தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பிரபல அச்சகத்தில் புருப் ரீடிங் பணியில் 2 வருட அனுபவம். 6. மெக்கானிக்: 5இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோவுடன் அச்சக இயந்திரங்களை பராமரித்தல் / பழுதுபார்ப்பதில் 2 வருட பணி அனுபவம். 7. அசிஸ்டென்ட் மெக்கானிக் : 5 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோவுடன் அச்சக இயந்திரங்களை பராமரிப்பது/பழுது பார்ப்பதில் ஒரு வருட பணி அனுபவம். 8. எலக்ட்ரீசியன்: 1 இடம். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோவுடன் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 9. வயர்மேன்: 2 இடங்கள். தகுதி: எலக் ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ள மோவுடன் மின்பணியாளர் தகுதி சான்று. 10. வெல்டர்: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டிங் டிரேடில் ஐடிஐயுடன் 3 வருட பணி அனுபவம். 11. கார்பென்டர்: 1 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் டிரேடில் ஐடிஐ மற்றும் 3 வருட பணி அனுபவம். 12. சீனியர் ஆர்ட்டிஸ்ட்: 1 தகுதி: பைன் ஆர்ட்ஸ்/ கமர்ஷியல் ஆர்ட்ஸ்/ கிராபிக் டிசைன் பிரிவில் பட்டப்படிப்புடன் கமர்ஷியல் டிசைனிங், கிராபிக் டிசைனிங், லே அவுட் மேக்சிங்கில் 2 வருட பணி அனுபவம் 13. ஜூனியர் ஆர்டிஸ்ட்: 1 இடம் தகுதி: பைன் ஆர்ட்ஸ்/கமர்சியல் ஆர்ட்ஸ் கிராபிக் டிசைன் பிரிவில் பட்டப்படிப்புடன் கமர்ஷியல்/கிராபிக் டிசைனிங்கில் ஒரு வருட பணிஅனுபவம். 14. ஆர்ட்டிஸ்ட் ரீடச்சர்: 1 இடம் தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்தபின் 2 வருட பணிஅனுபவம். 15. அசிஸ்டென்ட் ஆர்டிஸ்ட் ரீடச்சர்: 1 தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் பட்டப்படிப்பு முடித்த பின் ஒரு வருட பணிஅனுபவம். 16.கேமராமேன்: 1. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் புராசஸ் காமிரா பணியில் 3 வருட பணிஅனுபவம். 17. டார்க் ரூம் அசிஸ்டென்ட்: 2. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் 2 வருட பணிஅனுபவம். 18. பிளேட் மேக்கர்: 2 (பொது) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ அல்லது பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சியுடன் வருட பணி அனுபவம். 19. அசிஸ்டென்ட் பிளேட் மேக்கர் (ஆப்செட்): 1 (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்சசிக்குப் பின் பிளேட் மேக்கிங் டிரே டில் ஐடிஐயுடன் 3 வருட அனுபவம் அல்லது பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டிஸ் பயிற்சியுடன் 5 வருட பணிஅனுபவம். 20. டிடிபி ஆபரேட்டர்: 2. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் கம்ப்யூட்டர் இயக்குவதில் 3 வருட பணி அனுபவம் மற்றும் இந்தி, ஆங்கிலம் டைப்பிங்கில் அனுபவம். 21. ஆப்செட் மிஷின் மேன்: 25. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி ஆப்செட்டில் டிப்ளமோவுடன் சிங்கிள் மற்றும் மல்டி கலர் ஆப்செட் பிரின்டிங் மிஷினில் 5 வருட பணி அனுபவம். 22. ஆப்செட் மிஷின் அசிஸ்டென்ட்: 17. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் சிங்கிள் மற்றும் மல்டிகலர் ஆப்செட் பிரின்டிங் மெஷினில் 3 வருட பணிஅனுபவம். 23. ஆப்சென்ட் மிஷின் அட்டென்டென்ட்: 19. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டீசுடன் ஆப்செட் மிஷினில் 3 வருட பணி அனுபவம். 24. அட்டென்டென்ட் (ஆப்செட்) 3. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஆப்செட் பிரின்டிங், பிளேட் மேக்கிங் டிரேடில் அப்ரன்டீசுடன் ஆப்செட் மிஷினில் 3 வருட பணி அனுபவம். 25. ரிசோகிராப் ஆபரேட்டர்: 2 (பொது) தகுதி: பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோவுடன் 2 வருட பணிஅனுபவம். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.dop.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2013.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை கண்டன ஆர்ப்பாட்டம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து நவம்பர் 16 இல் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.

பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு!

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன் உட்பட்ட 83 பேரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

சிகரத்துக்கு கிடைத்த கவுரவங்கள்

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இதன் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக உயிருடன் இருக்கும் நபருக்கு தபால்தலை வெளியிடப்பட்ட பெருமையை பெற்றவர் அன்னை தெரசா மட்டுமே (1980 ஆகஸ்ட் 27). இதற்கு அடுத்தபடியாக சச்சின் இப்பெருமையை பெறுகிறார். * 1999ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வென்றார். * விஸ்டனின் உலக லெவன் நிரந்தர கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே சாரும். * விமானப்படையின் பின்னணி இல்லாமல், குரூப் கேப்டன் என்ற கவுரவ பதவியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சச்சினுக்கே கிடைத்துள்ளது. * டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடனான போட்டியில், குறைந்தபட்சம் 2 செஞ்சூரிகளை அடித்த இந்தியர் என்று பெருமை. * டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமை பெற்ற இந்தியர்.