Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, December 18, 2013

காங்கிரஸ் அல்லது பா.ஜனதா ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைக்கலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறார், கெஜ்ரிவால்

புதுடெல்லி, டிச.18- டெல்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது. அதைத் தொடர்ந்து 2-வது பெரிய கட்சியான ஆம்ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்குமாறு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அழைப்பு விடுத்தார். ஆனால் அந்தக் கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தனக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறினார். இருப்பினும் அவர் 10 நாட்கள் அவகாசம் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதிரடி திருப்பமாக, ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்தது. இருப்பினும் இதில் சந்தேகங்களை எழுப்பிய கெஜ்ரிவால், ‘நாங்கள் ஆட்சி அமைப்பதில் 18 முக்கிய பிரச்சினைகளில் உங்கள் நிலை என்ன?’ என்று கேட்டு, அவற்றைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதினார். அவற்றுக்கு சாதகமான பதில்கள் வரவில்லை. இதற்கிடையே இரு முக்கிய கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வராதது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு துணைநிலை கவர்னர் நஜீப் ஜங் அறிக்கை அளித்தார். அதில் அவர் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் ஆட்சி அமைக்க இன்றுடன் ‘கெடு’ முடிகிறது. எனவே இது தொடர்பாக எந்த நேரத்திலும் முடிவு எடுத்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் நேற்று தனது கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர்களை கூட்டி அவசர ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்றைய கூட்டத்தில் சில தலைவர்கள் ஆட்சி அமைக்கலாம், ஆட்சியை கவிழ்ப்பதற்கு முன்பாக 2 அல்லது 3 நல்ல காரியங்களை செய்து விடலாம் என்றனர். இன்னும் சிலரோ அதிகாரத்துக்கு வர வேண்டாம் என்றனர். எங்களது 18 நிபந்தனைகள் தொடர்பாக காங்கிரஸ் பதில் கடிதம் எழுதி உள்ளது. இதில் 16 நிபந்தனைகள் அரசு நிர்வாகம் தொடர்பானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாரதிய ஜனதா பதில் கடிதம் எழுதவில்லை. இன்னும் 6 மாதத்திற்கு பிறகு ஆட்சியை காங்கிரஸ் நிச்சயம் கவிழ்த்துவிடும் என்ற நிலையில், எப்படி அவர்களின் ஆதரவை பெற முடியும்? டெல்லியில் நாங்கள் ஆட்சி அமைப்பது குறித்து (காங்கிரஸ் - பாரதிய ஜனதா ஆதரவைப் பெறுவது பற்றி) மக்களின் கருத்துக்களை அறிய 25 லட்சம் கடிதங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இது தொடர்பாக மக்களின் பதில்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பெறப்படும். பொதுமக்கள் தங்கள் பதிலை குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வழியாக 08806110335 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்திற்குள் போயும் பதிவு செய்யலாம். அதைத் தொடர்ந்து எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை 23-ந்தேதி பகிரங்கமாக அறிவிப்போம். துணை நிலை கவர்னருக்கும் தெரிவிப்போம்.

அதிகரிக்கிறது சர்வதேச நெருக்கடி சரிவடைகிறது மகிந்தவின் செல்வாக்கு

கடும் முறுக்கு தெறிக்கும்’ என்பது முதுமொழி. மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் செய்யும் பித்தலாட்டத்திற்கெல்லாம் ஒரு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டமாதிரியான ஒரு உணர்வு பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே துளிர்விட்டுள்ளதை அவதானிக்கலாம். இதற்கு, ஜேர்மனியில் மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் ‘ஈழத்தில் நடைப்பெற்றது இனப்படுகொலையே, இந்தியா உதவியது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல’ என ஜேர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கியுள்ளமை ஒவ்வொரு தமிழரையும் நெஞ்சாறச் செய்துள்ளது. அதிலும், தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில், 1) சிங்கள அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது. 2) தமிழீழ இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள் சிங்கள அரசுக்கு துணைபோயுள்ளன. 3) தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல. என்று கூறியுள்ளதுடன், சிறீலங்கா அரசாங்கம் பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. சிறீலங்காவின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human Rights Association) மற்றும் சிறீலங்கா சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) இந்த தீர்ப்பினால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு எதிர்காலத்தில் பாரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. இது இவ்வாறாயிருக்கத்தக்கதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் பாரிய முரண்பாடுகள் வெட்டுக்குத்துக்கள் ஆரம்பித்துவிட்டது. மகிந்த அரசாங்கத்தின் முடிவுரை பந்தியை எங்கிருந்து தொடங்குவது என்று எதிர்பார்த்திருந்த சிங்கள மக்களுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஒரு தக்க துரும்பாக மாட்டிக் கொண்டதென்றே கூறவேண்டும். பாதீட்டு வாசிப்புக்கள் முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, மகிந்த அரசுக்கு முடிவுரை எழுதும் பந்தியை விவசாயிகள் கோவணத்துடன் சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஆரம்பித்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறைந்தது நான்கு ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டாம் முறையாகவும் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கெஸ்பேவ நகர சபையின் வரவு-செலவுத்திட்டமும் இரண்டாம் முறையாக தோற்கடிக்கப்பட்டது. ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மதவாச்சி பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அதிகாரத்திற்கு உட்பட்ட ஹங்குராங்கெத்த பிரதேச சபை மற்றும் வத்தேகம நகர சபை என்பவற்றின் வரவு-செலவுத்திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 13 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கண்டி, வத்தேகம நகர சபையின் வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 4 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டது தோற்கடிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டமும் நான்கு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு விடயத்தை அவதானிக்க வேண்டும், ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை இந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சியை நன்கு புலப்படுத்துகிறது. ஒரு அரசாங்கத்தை ஆட்டம் காணவைக்கும் அதிகாரம் ஒரு கீழ் மட்டத்தில் இருந்துதான் உருவெடுக்கின்றது. அந்தவகையில் மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஏழரைச் சனியன் தொட்டுவிட்டது என்றுதான் கூறவேண்டும். உள்நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்புக்களைச் சமாளிக்கத் திணறும் மகிந்த கும்பலுக்கு வெளிநாடுகளிலிருந்தும் அழுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு அமைவாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிறீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றமை மற்றும் மனித உரிமைகள் மீறப்படுகின்றமை குறித்து அவ்வப்போது தகவல்கள் பதிவாவதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் உலக நாடுகளினால் மதிக்கப்படும் பெரும் அமைப்பு அந்த அமைப்பில் தீர்மானங்கள் நிறைவேற்றபப்டுகின்றமை பெரும் மதிப்புக்குறியது. தாயகத்தில் சிந்திய குருதிக்கும், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் இரவு, பகலாக உழைத்த உழைப்புக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நன்மைகளை அனுபவிக்கும் காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், எமது தாகமான ஈழத்தை அடைவதற்கு இன்னும் வேகமாக உழைக்க வேண்டும். அதேவேளை, சிறீலங்கா அரசாங்கம் யுத்த முனைப்புகளுடன்தான் தமிழர் தரப்பை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்னும் யுத்த மேகம்தான் மூண்டுள்ளதைக் காணலாம். குறிப்பாக, வட பகுதிக்கான பயணத்தை மேற்கொள்ளும் போது அதனை அதிகளவில் அவதானிக்கலாம். இராணுவக் காவலரண்களும், ஆயுதப் படைகளின் பிரசன்னங்களும் அங்கு அதிகம் காணப்படுகிறது. அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்புடன் ஒரு இனத்தைப் படுகொலை செய்து யுத்தத்தை வெற்றி பெற்றுள்ளதாக சிங்களம் தனது மக்களிடையே காண்பிப்பதற்கான தமிழர் தாயகப் பகுதிகளில் கண்காட்சிகளை நடாத்திவருகின்றது. கடந்த வாரம் கூட ஆனையிறவு பகுதியில் பெருந்திரளான சிங்கள மக்கள் சென்று பார்வையிடத்தக்கதாக காட்சிகளை நடாத்தியிருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக பகைமையான உணர்வுகளை ஏற்படுத்துவதுடன், சந்தேகப் பார்வைகளையே ஏற்படுத்தும். அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு உரமுட்டுவது போன்று, வெளிநாடுகளின் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவதும் நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கப் போவதில்லை. அண்மையில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் மொஹமட் அசீஸ் சண்டிலா உள்ளிட்ட மூவரடங்கிய பிரதிநிதிகள் குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிறீலங்கா சென்றனர். சிறீலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயின் அழைப்பின் பேரில், இந்தக் குழுவினர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இராணுவ மற்றும் விமானப் படைகளின் தளபதிகளையும், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியையும் சந்திக்கவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இது உண்மையில், ஒன்றுக்கான மற்றொன்றை இழப்பதாகவோ அல்லது பெறுவதாகவோ அமையும் சந்தர்ப்பமாகக் கூட இது இருக்கலாம். எவ்வாறாயினும், சாமாதானம் ஏற்பட்டுவிட்டது, மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் எனக் கூறிக் கொண்டு மறுபுறத்தில் யுத்தக் கப்பல்களையும், போர் விமானங்களையும் கனரக இராணுவத் தளபாடங்களையும் கொள்வனவு செய்வதில் சிறீலங்காவின் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரம் காட்டிவருகின்றனர். சிறீலங்கா அரசாங்கம் யாருக்கு எததைக் கூறினாலும், தான் செய்த குற்றத்திற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதனால், அதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஒரு சில தமிழ், சிங்கள கூலிப் படைகளின் துணையுடன் சதித் திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றமை நன்கு புலப்படுகிறது. இந்நிலையில், தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒரு குடையின் ஒன்றிணைந்து, அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இனவாத சிங்களத்திற்கு எதிராக செயற்படுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதுடன், எமது தாயகக் கனவையும் அடையமுடியம் என்பது திண்ணம். - தாயகத்தில் இருந்து எழுவான்

அசாமில் கடந்த 8 ஆண்டுகளில் 14 ஆயிரம் பெண்கள் பலாத்காரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அசாம் சட்டமன்றத்தில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வனத்துறை அமைச்சர் ராக்கிபுல் உசேன் பேசியபோது, ‘’ அசாமில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை 40 ஆயிரத்து 96 பெண்கள் பலவகையான தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 13 ஆயிரத்து 798 பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 69 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சூனியக்காரி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 72 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். வரதட்சணை கொடுமை காரணமாக 1148 பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்த குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 37 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரத்து 943 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2386 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பலாத்கார குற்றம் தொடர்பாக 11 ஆயிரத்து 995 பேர் கைது செய்யப்பட்டனர். 4472 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 1466 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டில் நிருபிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை குற்றம் தொடர்பாக 1237 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 249 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ. 8 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 488 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,811-க்கு விற்கிறது.

ராகுல்காந்தி, ப.சிதம்பரம்,அமீர்கான் அவர்களின் உருவபொம்மையை எரித்தனர்.

சென்னை சத்யமூர்த்திபவன் முன்பு இன்று இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடபெற்றது. ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ராகுல்காந்தி, ப.சிதம்பரம், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து கோசம் எழுப்பப்பட்டது. மேலும், அவர்களின் உருவபொம்மையை எரித்தனர்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வீட்டில் ரெய்டு

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது அலுவலகம் உள்ளிட்ட மேலும் இடங்களிலும் சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

14-வது நிதிக்குழுவிடம் விஜயகாந்த் வைத்த கோரிக்கைகள்

ஒய்.வி. ரெட்டி தலைமையிலான 14-வது நிதிக்குழு தமிழகத்தில் முகாமிட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இக்குழுவிடம் தேமுதிக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்த கருத்துக்கள்: ’’3,500 மெகாவாட் மின் பற்றாக்குறை காரணமாக சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கான மாற்றுத் திட்டமாக மத்திய அரசு அறிவித்த சூர்ய மின்சக்தி திட்டத்துக்காக தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். சம்பிரதாயத்துக்காக ஒன்று அல்லது இரண்டு சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்காமல் மாநிலங்களின் வளர்ச்சிக்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும். தனிநபர் மொத்த வருவாய் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுவதால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நிதி ஒதுக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி பகிர்மானத்தை தீர்மானிக்கிற அதிகாரத்தை நிதிக்குழுவுக்கு வழங்க வேண்டும். நாட்டின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநில அரசுகளுக்கு நிதி கொள்கைகளை வகுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்வது மிக அதிகமாக இருப்பதால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் அரசியல் லாபங்களுக்காக சில மாநிலங்களுக்கு அதிகமாகவும், சில மாநிலங்களுக்கு குறைவாகவும் நிதி ஒதுக்குவது மாற வேண்டும். நிதிக்குழுவின் ஒப்புதலோடு மட்டுமே மாநில வளர்ச்சி நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இலவசத் திட்டங்களுக்கு செயல்படும் நிதி முறையாக மக்களை சென்றடைகிறதா என்பதைக் கண்டறிந்து, கவர்ச்சித் திட்டங்களை ஒழித்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க கடல் நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அதிக நிதி ஒதுக்க வேண்டும். அதுபோல கல்வி வளர்ச்சிக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும்’’

குடிக்க பணம் தர மறுத்த தாய் அடித்து கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் மகன் பூபதி(35) . திருமணம் ஆகவில்லை. பூபதியின் தாய் நல்லம்மாள்,67, அரசால் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையான முதியோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயை இன்று பெற்றதாக தெரிகிறது. இதனையறிந்த பூபதி, இன்று மதியம் 3 மணியளவில் குடிபோதையில் தாய் நல்லம்மாளிடம் குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நல்லம்மாள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பூபதி, நல்லம்மாளை கட்டையால் சரமாரியாக தாக்கியதால் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நல்லம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவாஜி சிலையை அகற்றக்கோரிய வழக்கு : தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் 12-7-2006 அன்று சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அகற்றக்கோரி திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்த போக்குவரத்து போலீசார், 'சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த சிலையினால் வாகன விபத்துக்குள் ஏற்படுகிறது' என்று கூறியிருந்தனர். இதையடுத்து இந்த சிலையை அகற்றக்கூடாது என்று நடிகர் சிவாஜி சமூகநல பேரவை, தமிழ் சங்க பலகை அமைப்பின் நிறுவனர் எம்.சி.தமிழ்பித்தன் உட்பட பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்திரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெரனல் ஏ.எல்.சோமயாஜி, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி, ஏ.எம்.சலீம் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

மத்திய அரசின், வங்கி சீர்திருத்தத்தைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள், இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், "தமிழகத்தில் உள்ள, தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளின், 8,000 கிளைகள் இயங்காது' என, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகிறது. இந்நிலையில், வங்கி நிர்வாகங்கள் அளித்த, புதிய ஊதிய உயர்வு போதுமானதாக இல்லை. எனவே, ஊதிய விகிதத்தை உயர்த்த வேண்டும். வங்கிகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வங்கி சீர்திருத்தத்தை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. வேலை நிறுத்தத்தை கைவிட, தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன், திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஏற்கனவே அறிவித்தபடி, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின், ஒருநாள் வேலைநிறுத்தும் இன்று நடக்கிறது. இதுகுறித்து, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க, தமிழக பொதுச்செயலர், சீனிவாசன் கூறியதாவது: இரு அம்ச கோரிக்கையை முன்வைத்து, ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். தமிழகத்தில், ஒன்பது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும், 12 தனியார் வங்கிகளின், கிளை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 1 லட்சம் பேர், வேலைநிறுத்தத்தில் பங்கேற்பர். இதனால், தமிழகத்தில் உள்ள, 8,000 வங்கிக் கிளைகள் இயங்காது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., போன்ற தனியார் வங்கிகள் பங்கேற்கவில்லை. இதனால், இவ்வங்கிகள் வழக்கம் போல் இன்று இயங்கும்.

ரயில்வே ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 36 கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.,) சார்பில், வரும், 20 மற்றும் 21ம் தேதிகளில், ஊழியர்களின் ரகசிய ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதை ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் விதமாக, இன்று, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன், எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில் அதன், பொது செயலர் கண்ணையா தலைமையில், மதியம், 1:00 மணி முதல், 1:45 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில், 36 அம்ச கோரிக்கைகள் குறித்து கண்ணையா பேசுகிறார். தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யூ., மட்டுமே அதிகாரப்பூர்வ சங்கமாக உள்ளது. இந்த சங்கம் சார்பில் தான், ஊழியர்கள் கோரிக்கைகள், ரயில்வே அமைச்சகம் மற்றும் வாரியத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. சங்கத்தின் சில நியாயமான கோரிக்கைகள், பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு ரயில்வே ஊழியர்கள் எதிர்ப்பை தெரிவிக்கவும், தாமதம் இன்றி கோரிக்கைகளை வலியுறுத்தவும், தேசிய அளவில், வரும், 20 மற்றும் 21ம் தேதிகளில், ஊழியர்களின் ரகசிய ஓட்டெடுப்பு (ஸ்டிரைக் பேலட்) நடக்க உள்ளது. இதையடுத்து, வேலை நிறுத்தம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

நாகை மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, நாகை மீனவர்கள், சாகும்வரை உண்ணாவிரதத்தில், ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாகை தாலுகா, அக்கரைப் பேட்டை கிராமத்தில், மீனவர்களின் கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, வரும், 21ம் தேதி முதல், நாகை தலைமை தபால் அலுவலகம் முன், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது, மீனவர்கள் விடுதலையாகும் வரை, உண்ணாவிரதத்தை கைவிடுவதில்லை என்பது உள்ளிட்ட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.