Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, April 9, 2014

தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!-நேற்றைய பதிப்பின் தொடர்ச்சியும் முடிவும்.

தஞ்சை பெரிய கோவிலின் மர்ம சக்தி...! முன் கதையும், இன்றையக் கதையும்!-நேற்றைய பதிப்பின் தொடர்ச்சியும் முடிவும். --------------------------------------------------------------------------------- தி.மு.க., ஆட்சி பறிபோன பரிதாபம் : தஞ்சை பெரிய கோவில் சென்டிமென்ட் (தினமலர் செய்தி) --------------------------------------------------------------------------------- தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலுக்குள் பதவியில் இருப்பவர்கள் வந்து சென்றால், பதவி பறிபோகும் என்பது, இந்த தேர்தல் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
"தஞ்சை பெரிய கோவிலுக்கு வி.ஐ.பி.,க்கள் வந்து சென்றால், அவர்கள் பதவி பறிபோகும்; உயிர் போகும்' என, பல கருத்துக்கள் நிலவுகின்றன. இதனால், இங்கு வரும் பெரும்பாலான வி.ஐ.பி.,க்கள், பெரிய கோவிலுக்குள் செல்வதை தவிர்ப்பர்.இதற்கு, பிரதமராக இருந்த இந்திரா, முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., போன்றோரை உதாரணமாகக் கூறுவர். தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில், 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இச்சம்பவம் அறிந்து அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, கோவிலின் நேர் வழியாக வராமல் பக்கவாட்டு வாசல் வழியாக வந்து, கோவிலுக்குள் செல்லாமல், சம்பவ இடத்தை மட்டும் பார்வையிட்டுச் சென்றார். இதுபோல, பல உதாரணங்களை கூறலாம். --------------------------------------------------------------------------------- கடந்த செப்., 22 முதல் 26ம் தேதி வரை, தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரமாவது ஆண்டு விழா நடந்தது. 25ம் தேதியன்று கோவிலுக்குள் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பட்டு வேட்டி, சட்டை சகிதமாக வந்த கருணாநிதி, பிரதான வாயில் வழியாக வராமல், சிவகங்கை பூங்கா வழியாக, தெற்குப்புற வாயில் வழியாக வந்து, மூலஸ்தானத்துக்கு பக்கவாட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தார். பெரிய கோவிலுக்குள் முதல்வர் வந்து சென்றதால், பெரிய கோவில் சென்டிமென்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பலரும் கருதினர். அடுத்த நாள் நிறைவு விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேசுகையில், "இந்த நாள் கணக்கு பார்க்கும் நாள்; கணக்கு தீர்க்கும் நாள். ராஜராஜன் காலத்தில் சதுர்வேதி மங்கலங்களை உருவாக்கினார். ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கி, அவர் காலத்தைச் சேர்ந்த ஆதிக்க கணக்கை கருணாநிதி தீர்த்துள்ளார்' என பேசிச் சென்றார். --------------------------------------------------------------------------------- கடந்த நவம்பரில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கிய ராஜா, பதவி இழந்து, கைதாகி இன்று வரை வெளியே வர இயலாத வகையில் டில்லி திகார் சிறையில் சிக்கித் தவிக்கிறார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் பிரச்னையால், காங்., - தி.மு.க., உறவும் பல கட்ட பிரச்னைகளை சந்தித்து, கனிமொழி, தயாளு போன்றோரிடம் சி.பி.ஐ., விசாரணை, கலைஞர் "டிவி' அலுவலகத்தில் ரெய்டு, குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர், தொடர் விசாரணை, எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை, தேர்தல் கூட்டணியில் இழுபறி என தொடர்ந்த சிக்கல், பெரிய கோவில் சென்டிமென்டை மீண்டும் நிரூபித்துள்ளது. --------------------------------------------------------------------------------- தேர்தல் துவங்கியது முதல், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை வைத்து கணித்த அனைவரும், இரு கட்சிகளும் சம பலத்தில் வருவர், கூட்டணி ஆட்சி நடக்கும் என, பல யூகங்களை தெரிவித்தனர்.இதனால், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும், மத்தியில் அங்கம் வகிப்பதால் தங்களை அ.தி.மு.க.,விடம் இருந்து காத்துக் கொள்ளலாம் என எண்ணிய தி.மு.க.,வுக்கு, தேர்தல் ரிசல்ட் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. --------------------------------------------------------------------------------- எதிர்க்கட்சியாகக் கூட அமர இயலாத அளவுக்கு, தஞ்சை பெரிய கோவில், "சென்டிமென்ட்' தன் வேலையை காட்டியுள்ளது என்பது, இந்த சென்டிமென்ட் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களை மீண்டும் முணுமுணுக்க வைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய உறுப்பினர் கைது

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் செயல்பட்டதாகக் கூறப்படும் முக்கிய உறுப்பினர் சுப்ரமணியம் கபிலன் என்பவரை இலங்கைப் போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.
இது குறித்து இலங்கைப் போலிஸ் துறைக்காகப் பேசவல்ல அஜித் ரோஹன பேசுகையில், நந்தகோபன் என்று விடுதலைப்புலிகளால் அழைக்கப்பட்ட, சுப்ரமணியம் கபிலன் , யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றார்.

ரே பரேலியின் ஆம் ஆத்மி வேட்பாளராக எதிர்பார்க்கப்பட்ட பக்ருதீன் விலகல்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ரே பரேலி தொகுதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் பக்ருதீன் இந்த தேர்தலில் போடியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ------------------------------------------------------------------------ மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான பக்ருதீன் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஆம் ஆத்மி முன்னர் கூறியிருந்தது. ------------------------------------------------------------------------ ஆனால் தான் போட்டியிடப்பொவதில்லை என்று பக்ருதீன் கூறியதை அடுத்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. மிசோரம் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு ------------------------------------------------------------------------ இதற்கிடையில் மிசோரம் மாநிலத்தில் 9ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவதாக இருந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ------------------------------------------------------------------------ பிரிவினை பிரச்சனை காரணமாக மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ப்ரூ பழங்குடியினர் ஆயிரக்கணக்கானோர் திரிபுராவில் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். ------------------------------------------------------------------------ இந்த தேர்தலில் அவர்கள் மிசோரம் மாநிலத்தில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து மிசோரம் மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. ------------------------------------------------------------------------ தன்னார்வ அமைப்புகளும், மாணவர்கள் கூட்டமைப்புகள் என்று பல்வேறு அமைப்புகள் நேற்று துவங்கி 3 நாட்கள் ‘பந்த்’ அறிவித்திருந்தது. எனவே வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பில் 20 பேர் பலி

பாகிஸ்தானிய தலைநகர் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு பழ மற்றும் காய்கறிச் சந்தையில் இடபெற்ற ஒரு வெடிப்பில் குறைந்தபட்சம் 20 பேராவது கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் அதில் காயமடைந்தனர். ---------------------------------------------------------------------------- குண்டு ஒரு பழக் கூடையில் மறைத்து வைக்கப்படிருந்திருக்கிறது. கடந்த 6 வருடங்களில் இஸ்லாமாபாத்தில் நடந்த மிகவும் கோரமான தாக்குதல் இதுவாகும். அரசாங்கத்துடன் தற்போது மோதல் நிறுத்தத்தில் இருக்கும் பாகிஸ்தானிய தலிபான்கள், தமக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு கிடையாது என்றும், பொதுமக்களை இலக்கு வைத்துத் தாக்குவது இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணானவை என்றும் கூறியுள்ளனர். நாட்டை ஸ்திரமிழக்கச் செய்வதற்கான பாகிஸ்தானின் எதிரிகளின் நடவடிக்கை இது என்று அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

சாரயதொழில் சாலையை கொண்டுவரும் TR.பாலு

வடசேரி மக்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கிறது வகையில் சாரயதொழில் சாலையை கொண்டுவரும் TR.பாலுமுயற்சியை முறியடிக்க முயற்ற கிராம மக்களை தடியடி நடந்த நாளான இன்று கிராம மக்களின் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அந்த பேரணியில். நமது வெற்றி வேட்பாளர். கருப்பு அவர்கள்

நாளைய தஞ்சை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாவீரன் கருப்பு(எ)முருகானந்தம் அவர்கள்

நாளைய தஞ்சை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் மாவீரன் கருப்பு(எ)முருகானந்தம் அவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் உள்ளார். மாற்றத்தை எதிர் பார்க்கும் மாற்றுத்திறனாலிகள், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் பெறுபவர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், இஸ்லாமியர்கள் என பல்வேறு தரப்பினரும் அண்ணன் Karuppu Muruganadham அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அண்ணனின் வெற்றி உறுதி செய்யப்பட்டது என்றாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதே தஞ்சை மக்களின் எதிர்பார்ப்பு.

வாக்கு செலுத்தும் அந்த நிமிடம் இந்த விடியோவை மனதில் நினைத்துகொள்ளவும்

வாக்கு செலுத்தும் அந்த நிமிடம் இந்த விடியோவை மனதில் நினைத்துகொள்ளவும்... எதிரியை விட துரோகிதான் முதலில் அழிக்கப்பட வேண்டியவர்கள்...