Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, January 21, 2014

சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையும் ரத்து செய்யப்படும்: வைகோ நம்பிக்கை

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது: "இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம், நீதியரசர்கள் ரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்திசிங் ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும். தமிழர்கள் நால்வர் வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு அவர்கள் தந்த கருணை மனு, ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் 15 பேரின் தூக்கு ரத்து உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் காலின் கொன்சால்வ்ஸ், மும்பை வழக்கறிஞர் யுக்மொகித் சௌத்ரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். இந்த நால்வரும் உண்மையில் நிரபராதிகள் ஆவார்கள். இன்று உச்ச நீதிமன்றத்தில் இப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த 15 பேர் தொடுத்த வழக்கில், 13 பேருக்கு கருணை மனு மீதான முடிவை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. உடல்நிலை கெட்டு, மனநலம் பாதிக்கப்பட்ட காரணம் காட்டி மகன்லால், சுந்தர்சிங் ஆகிய இருவரின் தூக்குத் தண்டனையும் ரத்து ஆகி உள்ளது பேரறிவாளன், முருகன், சாந்தன் இந்தியாவிலும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு ஆகும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், திருபெரும்புதூர் சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகள் ஆவர். மரண தண்டனையை எதிர்நோக்கியவாறு, 23 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடியில் மரணத்தை விடக் கொடிய சித்ரவதையை அனுபவித்து வருகிறார்கள். 11 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களுடைய கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பிறகு அவர்களது கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து, அவர்களைத் தூக்கில் போடுவதற்கு 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது ராம்ஜெத்மலானி வழக்கு இதன்பிறகு, 2011 ஆகஸ்ட் 30 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாடியபோது, உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீது, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மூவரின் தூக்கு ரத்து மூன்று தமிழரின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில், வருகிற ஜனவரி 29 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இன்றைய தீர்ப்பின் அடிப்படையில், அவர்களது மரண தண்டனையும் உறுதியாக ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அமெரிக்கா

தேவாலயங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. தேவாலயங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் குற்றச் செயல்களிலிருந்து தப்பித்த்தக் கொள்வதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் ஹி;க்கடுவ பிரதேசத்தில் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், தேசிய கிறிஸ்தவ வேதாலய பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தூதரகப் பேச்சாளர் ஜூலியானா ஸ்பவன் தெரிவித்துள்ளார். மதவழிபாட்டுத் தளங்களின் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து தப்பித்து சுதந்திரமாக உலவும் கலாச்சாரம் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் செயல்பாடு குறித்து

பிரதமர் மன்மோகன்சிங்கின் செயல்பாடு குறித்து பீகார் மாநில மக்களில் 70% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 24% மட்டுமே திருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் பிரதமராக யாருக்கு ஆதரவு?

பிரதமர் பதவிக்கு யாருக்கு பீகார் மாநில மக்களின் ஆதரவு என்ற கேள்விக்கு மோடி-39%. ராகுல்- 9%, சோனியா-3%. மன்மோகன்சிங், அத்வானி- தலா 1%. நிதீஷ்குமார்-15%, , ராம்விலாஸ் பஸ்வான், கேஜ்ரிவால் ஆகியோருக்கு தலா 3% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரக மண்ணில் தாவரம் வளர்க்கலாம்... மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்

லண்டன்: செவ்வாய்கிரகத்தில் பல்வேறு தாவர இனங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளனர். பால்வெளி, அங்குள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் துணைக் கிரகங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்கென பல விண்கலங்கள் விண்ணில் ஏவப் பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் தாவரங்கள், குறிப்பாக உணவு தானியங்களை பயிர் செய்யலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து டச்சு பல்கலைகழகத்தை சேர்ந்த சுற்று சூழல் விஞ்ஞானி விஜ்ஜர் வேம்லிங் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
50 நாட்கள் ... இந்த சோதனை 50 நாட்கள் நடைபெற்றது. மொத்தம் 840 பானைகளில் 4,200 விதைகள் பயிரிடப்பட்டன.
ஆச்சர்யம்... ஆனாக், உண்மை ஆச்சரியப்படதக்க வகையில் சில தானியங்கள் 24 மணி நேரத்தில் வளர்ந்து இருந்தது. சில இனங்கள் பூத்து குலுங்கின. தக்காளி மற்றும் கேரட் இனங்கள் வளர்ந்து இருந்தன. சில விதைகள் முளைவிட்டு இருந்தன. எரிமலை மண்.... இது போல அரிசோனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை மண்ணிலும் சோதனை நடத்தப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்

மதுவை விட அபாயகரமானது அல்ல கஞ்சா': அதிபர் ஒபாமா

மதுவை விட அபாயகரமான போதைப் பொருளாக கஞ்சாவை (மரிவானா) தான் கருதவில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால் தனது பிள்ளைகள் அதனைப் புகைப்பதை ஊக்குவிக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை, கஞ்சாவை சட்டபூர்வமாக்குவது பல சமூகப் பிரச்சனைகளுக்கும் சர்வரோக நிவாரணியாகும் என்று சிந்திப்பது தவறு என்றும் அவர் எச்சரித்துள்ளார். கஞ்சா பாவனைக்காக வறிய மக்களே, பொருத்தமற்ற தண்டனைகளுக்கு உள்ளாவதாக ஒபாமா கூறுகிறார். ஆனால் வசதிபடைத்தவர்கள் கடுமையான தண்டனைகளிலிருந்து அனேகமாக தப்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். த நியு யோர்க்கர் சஞ்சிகைக்காக அளித்த தொடர் நேர்காணல்களின் தொடர்ச்சியாகவே அதிபர் ஒபாமா இந்த விடயம் பற்றியும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்க சட்டம்: அமைச்சர்

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார். தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த சட்டவரைவு, சில நாட்களில் அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 'பாரம்பரிய மருத்துவ உலகில் கஞ்சாவுக்கு 'மூவுலகையும் வென்ற மூலிகை' என்ற பெயர் இருக்கிறது. தேசிய பாரம்பரிய மருத்துவ முறைக்கு உகந்த விதத்தில் கஞ்சா செய்கை அமைய வேண்டும் என்கின்ற விதிமுறைகளை நாங்கள் எங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்குகிறோம்' என்றார் அமைச்சர். வெறும் கஞ்சா வளர்ப்பு அனுமதிக்கான சட்டமாக மட்டும் வராமல் முழுமையான ஆயுர்வேத மருத்துவச் சட்டமாக புதிய சட்டம் உருவாகும் என்றும் சாலிந்த திசாநாயக்க கூறினார். இலங்கையில் ஹெரோயின் போதைப்பொருள் விவகாரம் ஏற்கனவே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அரசியல்வாதிகளும் அதன் பின்புலத்தில் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில், இப்படியாக கஞ்சா செய்கைக்கு கிடைக்கும் சட்ட அங்கீகாரம் பல வழிகளிலும் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் அல்லவா என்று தமிழோசை அமைச்சரிடம் வினவியது.

கெஜ்ரிவால் கேள்வி , எப்படி ஷிண்டே உங்களால் நிம்மதியாக தூங்க முடிகிறது?

அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி சாலையில் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வரும் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லியில் என்ன நடக்கிறது என்று ஷிண்டேவுக்குத் தெரியுமா. டெல்லி: டெல்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் . குற்ற் செயல்கள் நடைபெறுவது அவருக்குத் தெரியுமா.. குற்றச் செயல்கள் அதிகரித்தபடி உள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. ஆனால் நிம்மதியாகத் தூங்குகிறார் ஷிண்டே. எப்படி அவரால் தூங்க முடிகிறது என்று தெரியவில்லை.
இது பலசரக்குக் கடை இல்லை. நாங்கள் பேரம் பேச விரும்பவில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடைபெறும். போராட்டம் நடைபெறும் பகுதிக்கு குடிநீர், உணவு கொண்டு வர போலீஸார் தடுத்து வருகின்றனர். அனைவரும் குடிக்க தண்ணீரில்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் சாகட்டும் என்று கூற விரும்புகிறதா மத்திய அரசு. மக்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர். ஆனால் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்துகிறது போலீஸ். மேலும் மக்களை தேர்வு செய்து பஸ்சில் ஏற்றி சரமாரியாக அடித்து உதைக்கின்றனர் போலீஸார். இதுதான் ஜனநாயகமா... என்றார் கெஜ்ரிவால்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் - சீனா

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான சீனத்தூதுவர் வூ ஜியன்காவோ இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளக முரண்பாடுகளின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்களை சீனா வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். சீனா, இலங்கையின் நேச நாடு எனவும் என்றென்னும் நட்புடன் திகழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சொந்த தேசத்தில் நாடற்றவர்களாக வாழும் தமிழர். - கோ.நாதன்

கடந்த 30 ஆண்டு காலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் 60 வீதம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது.இவர்களில் பெரும் பன்மையானோர் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் அரைப் பங்கிற்கு குறைவானவர்களே மீளத் தமது இடங்களுக்கு திருப்பியுள்ளனர். திரும்பி தத்தமது இடங்களுக்கு செல்வது தான் உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களைப் பொறுத்தவரையில் அதிகம் விரும்பப்படும் தெளிவான விருப்பமாகும்.இவ்வாறு பெரும்பாலானோர் தமது இடங்களுக்கு மீளத் திரும்பி செல்ல முடியாமல் இன்னும் அகதிக் கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நிலை விரக்தியும், சலிப்புத் தன்மையும் மிக முக்கிய காரணியாக விளங்குகின்றது. தொடர்ச்சியான முகாம் வாழ்வு சோர்வு நிலைக்கு தள்ளியுள்ளது.

முள்ளி வாய்க்காலில் மூழ்கி கரை தேடி அலையும் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படும் அபத்தம் தொடர்கிறது:-

இறுதி யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் காணாமல் போகடிக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலையும் மக்களின் இயலாமைகளின் மேல் இலங்கை அரசாங்கத்தினதும் புலனாய்வுத் துறையினதும் சவாரி தொடர்கிறது. அந்த வகையில் பிள்ளைகளையும் உறவினர்களையும் பறிகொடுத்த மக்கள் மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அருகில் ஏமாற்றப்படும் அடுத்த அத்தியாயம் நேற்று (20.01.14) மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.இன்று காலை முதல் கிளிநொச்சியில் நீதிமன்றத்திற்கு பக்கத்தில் வங்கிக்கு அருகில் தனியான கொட்டகை அமைத்து ரீஐடியினர் மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து மக்கள் சிலர் தெரிவித்தனர். ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசாரணை என ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட மக்களுக்கு காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதல்களை வழங்க இலங்கைப் படையினரும் புலனாய்வாரள்களும் முனைந்து கொண்டு இருக்கின்றனர்.அத்துடன் இவர்களின் வங்கிப் புத்தகங்களில் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வைப்பில் இட முனைந்துள்ளதாக அங்கு சென்று திரும்பிய மக்கள்தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளனர். ரோக்குண் கொடுத்து ஏமாற்றப்பட்டு அழைக்கப்பட்ட தம்மிடம் புலிகள் பலவந்தமாக ஆட்களைச் சேர்த்து போராட்டத்தில் ஈடுபடுத்தியமையினால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு அவர்களுக்காண இறப்புச் சான்றிதலும் பணமும் கொடுத்து கதையை முடிக்க அரசாங்கம் முனைவதாக மக்கள் கடுமையான கோபம் அடைந்துள்ளனர்.இதேவேளை குடும்பங்களாக சரணடைந்து இப்போ படையினரும் அரசாங்கமும் கைவிரித்துள்ள, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் செயற்பாட்டாளர்கள் சிலரின் உறவினர்கள் தமது பதிவை மேற்கொள்ள சென்ற போது அதனை படையினர் ஏற்க மறுத்துள்ளனர். திருமணம் முடித்த குடும்பங்கள் தனியானவர்கள் எனவும் அவர்களின் தாய் தந்தையர்கள், மாமன் மாமி என உறவினர்கள் பதிய முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.