Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 27, 2014
சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள்! தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்!
யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------
கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 29 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-----------------------------------------------------------------------------------------------
இவரது உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடுப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன.
-----------------------------------------------------------------------------------------------
இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தமிழ் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-----------------------------------------------------------------------------------------------
அப்பெண்ணின் உடலை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பொழுது அவரது உடலில் இருந்த இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை
சிறீலங்காவில் 2013ம் ஆண்டு துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் 500 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்
--------------------------------------------------------------------------------------
யாழ். தலைமைப் காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
-----------------------------------------------------------------------------------
2012ம் ஆண்டு 700 பேரும், 2013ஆம் ஆண்டு 500 பேரும் கொலை துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் மிதக்கும் கோத்தாபயவின் ஆயுத களஞ்சியம்! – இந்தியக் கடற்படைத்தளபதி அதிருப்தி.
Date 12/9/2013
கடற்கொள்ளையர்களை அடக்கும் நோக்கம் என்று கூறி நாடு ஒன்றின் சட்ட எல்லைக்கு புறம்பாக இந்து சமுத்திரத்தில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இந்திய கடற்படைத் தளபதி அத்மிரல் டி.கே. ஜோஷி டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையிடம் கூறியுள்ளார். சர்வதேச கடல்சார் அமைப்பு இந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்து சமுத்திரத்தில் இடம்பெறும் மிகப் பெரிய சட்டவிரோத நடவடிக்கையாக இது மாறிவிடும். அது மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
-------------------------------------------------------------------------------------
அண்மையில் எம்.பீ. சீமன்காட் ஒஹியோ என்ற கப்பல் கைது செய்யப்பட்டது. அதில் நான்கு இனங்களை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 25 பேர் இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளையும் தோட்டக்களையும் சட்டவிரோதமாக தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தனர். இந்த நபர்கள் வர்த்தக கப்பல்களை கடற்கொள்ளையர்களிடம் இது பாதுகாக்கும் நிறுவனம் என்று கூறப்படும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். இப்படியான சில நிறுவனங்கள் இந்து சமுத்திரத்தில் இயங்கி வருகின்றன. இவர்கள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக குறிக்கப்பட்ட கடமை நேரத்தில் கப்பல்களில் ஏறி இறங்குகின்றனர். அவற்றில் அரசு சாரத தனியார் பாதுகாப்பாளர்களும் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------
எந்தொரு நாட்டின் துறைமுகத்திலும் இவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை. இது மும்பாய் மீது தாக்குதல் நடத்தை போன்ற தாக்குதலை நடத்த பயங்கரவாதிகளுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். இந்து சமுத்திரத்தின் பொருளாதார பிராந்தியத்தில் இப்படியான எத்தனை கப்பல்கள் இருக்கின்றன?. அவற்றில் இருக்கும் ஆயுதங்கள் என்ன?. என்பது பற்றிய சர்வதேச தரங்களுக்கு அமைவான விபரங்கள் தேவை. இந்திய கடற்படை, கேரளா லட்சதீவுகளுக்கு அருகில் கடற்கொள்ளையர்களின் 4 படகுகளை மூழ்கடித்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் இருந்து 450 கடல் மைல் தொலைவு வரை கடற்கொள்ளையர்களின் எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை. இதனால் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தேவையில்லை என்றார்.
-------------------------------------------------------------------------------------
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக தெரிவித்து, இலங்கையின் காலிக்கு அப்பால் தொலைவில் உள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் இயங்கி வருகிறது. இதனை நடத்தி வரும் முக்கிய நபர்களில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்வும் ஒருவர். அவருக்கு சொந்தமான தனியார் பாதுகாப்பு நிறுவனம் இதன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் கடற்படைத் தளபதி சோமதிலக திஸநாயக்கவும் இந்த நிறுவனத்தில் தான் சேவையாற்றி வருகிறார்.
-------------------------------------------------------------------------------------
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வகிக்கும் அரச அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனங்களை நடத்த முடியாது என்ற போதும் பாதுகாப்புச் செயலாளர் சில தனியார் நிறுவனங்களை நடத்தி வருகிறார் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!
இன்று தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனக்கொலைக் குற்றங்கள் மீதான தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு ஒன்றை நடத்த வேண்டும். ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும். என்று மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர இந்திய அரசை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------------
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் இயக்கத்தின் சென்னை மாவட்ட செயலாளர் தோழர் இளையராஜா தலைமை தாங்கினார் தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ்வேலன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் தீரவிடர் கழகத்தின் பொது செயலாளர் தோழர் கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு கட்சிகளின், இயக்கங்களின் தலவர்களும், பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோரிக்கையை வழியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வழியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
ஈழம் ரஞ்சன்
மே17 இயக்கத்தின் போராட நிதி பற்றாக்குறை பற்றிய அறிக்கை. தோழர் திருமுருகன் காந்தி!!
தொடர்ச்சியான போராட்டங்களுக்கு கடந்த மாதம் நிதி உதவி கேட்டு கோரிக்கை வைத்திருந்தோம். 3.50 லட்சம் கடன் தொகையிலிருந்து 3.90 லட்சத்திற்கு வளர்ந்திருக்கிறோம். கடந்த மாதம் கிடைத்த உதவி மதுரையில் நிகழ்ந்த கூட்டத்திற்கும் (ரத்துசெய்யப்பட்ட) இதர செலவினங்களுக்கு போதுமானதாய் இருந்து விட்டது. இதற்கு மேல் கடன் கொடுக்க யாரும் முன்வராத காரணத்தினால் , வருகின்ற போராட்டங்களை நடத்த முடியாத நெருக்கடியில் இருக்கிறோம்.
--------------------------------------------------------------------------------------
வரும் மார்ச்2 ஆம் தேதி நிகழ்வும் இதனால் முடக்கப்படுமோ என்கிற அச்சத்தில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். இதைத் தவிர, மூன்று புத்தகங்கள் அச்சிடுவது, ஆவணப்படங்கள் இரண்டு, ஆறு பிரச்சாரக் கூட்டங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். இவற்றினை செய்து முடிப்பதுவும், கடன் தொகைகளை அடைப்பதுவும் எங்கள் முன் நிற்கும் பெரும் போராட்டம். இதில் எங்களுடன் கைகோர்த்து உதவுவீர்கள் என நம்புகிறோம். கடன் தொகையை அடைக்கவும், வருகின்ற நிகழ்வுகளுக்கு உதவவும் உங்களது தொடர்ச்சியான மாதாந்திர பங்களிப்பினை எதிர்பார்க்கிறோம்.
--------------------------------------------------------------------------------------
விருப்பமுள்ள தோழர்கள் பின்வரும் வங்கிக்கணக்கில் பங்களிப்பினை செய்யலாம் அல்லது நேரில் தோழர்கள் சந்தித்து பெற்றுக்கொள்வார்கள். உடனடி மற்றும் மாதாந்திர உதவியை எதிர்பார்க்கிறோம். உதவித் தொகை பற்றிய விவரங்களை மின்னஞ்சலுக்கு அனுப்பவும், கணக்கெடுப்பிற்கு உதவியாக இருக்கும். இணைந்து நின்று களம் காணுவோம். உங்களின் பங்கேற்பு இல்லாமல் எப்போராட்டமும் சாத்தியமில்லை.. பங்கேற்பு நிதிஉதவியுடன் நின்றுவிடாது.
--------------------------------------------------------------------------------------
அது ஒரு துவக்கப்புள்ளியாக இருக்கலாம்.. இணைந்து நில்லுங்கள்...
--------------------------------------------------------------------------------------
பெயர் - P .A . PRAVEEN KUMAR Indian Overseas Bank, Savings Account No. 129601000017929
--------------------------------------------------------------------------------------
Velacherry Branch, Chennai. IFS Code : ioba0001296 SWIFT Code: IOBAINBB001
--------------------------------------------------------------------------------------
உதவி பற்றிய விவரங்களை தவறாமல் contact.may17@gmail.com-- என்னும் மின்னஞ்சலிலும் -Ph- 9600781111, என்னும் எண்ணிலும் தெரிவியுங்கள்.
May 17 Thirumurugan on Ealam Issue
ரஷ்ய ஜனாதிபதி பூட்டீன் மேற்கு ரஷ்யப் பகுதியில் ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளார்-
ரஷ்ய ஜனாதிபதி பூட்டீன் மேற்கு ரஷ்யப் பகுதியில் ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளார். ரஷ்யாவின் மேற்குப் பகுதியானது, உக்ரைனில் ரஷ்யப் பூர்வீகக் குடியினர் வாழும் கிழக்குப் பகுதியை அண்மித்த பகுதியென்பது குறிப்பிடத்தக்கது. ஆயுத்த நிலையில் கடமையிலிருக்கும் ராணுவத்திற்கு, யுத்த தந்திரங்களைப் பரிசோதித்துப் பயிற்சிக்கும் படி, பூட்டீன் கட்டளையிட்டுள்ளாரென மொஸ்கோ அலுவலகம் தெரிவிக்கிறது.
----------------------------------------------------------------------------------------
உக்ரைனின் கிழக்குப் பகுதிகளிலும் அதன் குடாநாட்டுப் பகுதியான கிறிமிலிலும், ரஷ்ய இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உக்ரைனில் வருங்காலங்களில் ரஷ்ய மொழியுரிமை பறிக்கப்படுமெனும் வதந்தி மேற்கு உக்ரைனில் பரவி வரும் நிலையானது, ரஷ்யா ராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பதற்கான தனிக் காரணமாகாது.
----------------------------------------------------------------------------------------
உக்ரைனின் முன்னைய ஜனாதிபதி பதவி விலக்கப்பட்டதும் ரஷ்யா உக்ரைன்மேல் செலுத்திய அதிகாரம் பாதிப்படைந்ததும், உக்ரைனிலிடம் பெற்ற அரசியற் பலப் பரீட்சையில் ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு வெற்றி கிட்டாமையும் கூட ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டமைக்குக் காரணங்களாக அமைந்துள்ளது.
----------------------------------------------------------------------------------------
ஜானுகோவிற்சின் வீழ்ச்சிக்கு முன்னான புரட்சிக்காலத்தில், உக்ரைனில் சட்ட ஒழுங்கும் அரசியல் உறுதி நிலையும் தளராதிருக்கும் வகையில் ஐரோப்பியப் பாதுகாப்பிற்கும் ஒற்றுமைக்குமான அமைப்பு (Organization for security ard Cooperation in Europe) உறுதுணையாக அமைய வேண்டுமென பூட்டீனின் அரசியல் அபிலாஷை, உக்ரைனின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னும் தொடருமென்பது நிச்சயமற்றதாகவுள்ளது.
----------------------------------------------------------------------------------------
உக்ரைனின் அரசியல் விவகாரம் ரஷ்ய, ஐரோப்பிய உறவில் பதட்ட நிலையை ஏற்படுத்தி ரஷ்யாவைப் போர்க்கோலம் பூண வைத்திருக்கும் வேளை, உக்ரைனின் சமாதானத்திற்கும், அமைதியைத் தரும் ஒற்றுமைக்குமாக Nato முழுமையாக உதவத் தயாரென அறிவித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------
உக்ரைன் Nato வின் நீண்ட கால அங்கத்துவ நாடென்று கூறும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டெர்ஸ், ரஷ்யாவுடனான தோழமையும் அதன் ஒத்துழைப்பும் தொடர்ந்து பேணிப் பராமரிக்கப் படுவதையே விரும்புவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வடமாகாணம் வந்த ஜெர்மானிய தூதருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகள் பலவழிகளிலும் உதவிகள் புரிந்து வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அந்த நாடுகளைக் குறைகூறிவருவதாக இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மனியின் நிதி உதவியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுவதற்காக இரண்டு நாள் விஜயமாக இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் வடபகுதிக்கு விஜயம் செய்தபோது, யாழ்ப்பாணத்தில் தன்னைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மன் அரசின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டு அவற்றில் சிலவற்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
------------------------------------------------------------------------------------------
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற உதவிகளைப் பலவிதங்களிலும் அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளைப் போன்று ஏனைய பிரதேசங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளிடம் அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மன் தூதுவருடனான சந்திப்பின்போது அபிவிருத்தி விடயங்கள் பற்றியே பேசப்பட்டதாகவும், எனினும் அரசியல் ரீதியாக வடமாகாண சபை எந்த அளவில் செயற்பட்டு வருகின்றது என்பதை அவர் கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
வடபகுதிக்கான விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விபரம் தெரிவித்த ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட், இலங்கையில் ஜெர்மனியின் பொருளாதார அபிவிருத்திப்பணிகள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
சமூக அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள் என்பவற்றை நாங்கள் ஜெர்மன் நிறுவனமாகிய GIZ நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 60 வருடங்களாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி அபிவிருத்திப் பணிகளில் ஜெர்மனி உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீன மீனவர்களின் வருகையால் வாழ்வாதாரம் பாதிக்கிறது: வட இலங்கை மீனவர்கள்
இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற் பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உள்ளுர் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கின்ற போதிலும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய தொல்லை யாழ் குடாநாட்டின் வடமராட்சி கடற்பகுதியிலேயே ஏற்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை கூறுகின்றார்.
அண்மையில் சீன மீனவர்களுடன் மீன் பிடிப் படகொன்றை இலங்கை கடற்படையினர் பிடித்திருந்தனர்.
----------------------------------------------------------------------------------------------------
"முப்பது வருட கால யுத்தத்தின் முடிவில் கடற்பரப்பில் தொழில் செய்ய செல்லும் எமது மீனவர்கள் சீன மீனவர்களின் அத்துமீறல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். வடமராட்சி கடற்பரப்பின் ஆழ் கடற் பிரதேசத்திலேயே சீன மீனவர்களின் பெரிய கப்பல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றது. இதனால் கடற்கரையை அண்டிய பகுதிக்குள் மீன்கள் வருவதில்லை. எமது மீனவர்களுக்குத் தொழில் பாதிப்பு ஏற்படுகின்றது."
----------------------------------------------------------------------------------------------------
சீனதேசத்து மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்து தொழில் செய்வது குறித்து நீர்கொழும்பில் இருந்து செயற்படுகின்ற தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் கூட முறையிட்டிருக்கின்றது.
----------------------------------------------------------------------------------------------------
சீன தேசத்து மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பினுள் அனுமதிக்கக் கூடாது என்று தாங்கள் அரசாங்கத்திடம் கோரியிருப்பதாக அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கூறுகிறார்.
----------------------------------------------------------------------------------------------------
இது குறித்து, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமால் ஹெட்டியாரச்சி அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு சீன தேசத்து மீனவர்கள் இங்கு வந்து தொழில் புரியவில்லை என்று மறுத்துரைத்தார்.
----------------------------------------------------------------------------------------------------
"இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கென, எமது கடற்தொழில் திணைக்களத்தில் எந்தவொரு சீன கம்பனியும் பதிவு செய்யப்பட்டிருக்;கவில்லை. அவ்வாறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவுமில்லை. ஆனால், கடலுணவு பதனிடுகின்ற சீன கம்பனி ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தொழில் செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. எமது தேசிய கடற்பரப்பில் இந்தக் கம்பனிக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. சர்வதேச கடற்பரப்பிலேயே தொழில் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெளிவாகக் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது"
போர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு: தடுக்க உச்சி மாநாடு
பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை எப்படித் தடுப்பது என்பது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்று லண்டனில் வரும் ஜூன் மாதத்தில் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்திருக்கிறார்.
------------------------------------------------------------------------------------------
இந்த மாநாட்டில் 140 உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் , ராணுவ , போலிஸ் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று ஹேக் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
இந்த மாநாடு மோதல் நடக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்து கவனம் செலுத்தும் மிகப்பெரும் ஒரு கூட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------
பாலியல் வன்முறைக்கு எதிராக வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், இந்த நெறிமுறைகள் சர்வதேச அமைதி நடவடிக்கைகள் உட்பட, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் சித்தாந்தத்தில் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
----------------------------------------------------------------------------------------------------
பாலியல் வன்முறைகள் நடப்பதை ஒழிப்பதை உலக நாடுகள் நீண்ட காலமாகவே தவிர்த்து வந்திருக்கின்றன என்றும் அவர் வாஷிங்டனில் கூறினார்.
யுக்ரெய்னில் விசேட அதிரடி பொலிஸ் படை கலைப்பு
யுக்ரெய்னில் நாட்டின் நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள இடைக்கால அதிகாரிகள் அந்நாட்டின் விசேட கலவரக் கட்டுப்பாட்டு பொலிஸ் படையைக் கலைப்பதாகக் கூறுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------
தலைநகர் கியெவ்வில் சென்ற வாரம் நடந்த வீதிக் கலவரங்களில் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த பொலிஸ் படையே காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
------------------------------------------------------------------------------------------------
வீதிக் கலவரங்களில் கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------------
பெர்குட் என்று அழைக்கப்படுகின்ற இந்த விசேட பொலிஸ் பிரிவு இனிமேல் இல்லை என்று தற்காலிக உள்துறை அமைச்சர் ஆர்சென் வகொவ் அறிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------
புதிய அரசாங்கத்தில் யார் யார் பங்கெடுக்கப்போகிறார்கள் என்று தீர்மானிக்க அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் பிடிக்கிறது என்றும், அமைச்சரவை உருவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பை வரும் வியாழக்கிழமைவரை நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளது என்றும் கியெவ்வில் உள்ள பிபிசி முகவர் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------------
அந்த வாக்கெடுப்புக்கு முன்பாக புதனன்று பின்னேரம் புதிய அமைச்சர்களாக முன்மொழியப்பட இருப்பவர்கள் மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக கியெவ்வின் சுதந்திர சதுக்கத்தில் கூட்டத்தினர் முன்பு தோன்றவிருக்கின்றனர்.
துபாய் தங்கம் இறக்குமதியாளர் விதிமீறல்
துபாயின் மாபெரும் தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனமான கலோட்டி, யுத்தம் நடக்கும் பகுதியில் கிடைக்கும் தங்கம் உலக சந்தைக்குள் உட்புகாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட விதிகளை தீவிரமாக அத்துமீறி இருப்பதாக விஷயம் தெரிந்த உள் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------
கலோட்டி நிறுவனத்தில் தணிக்கையை மேற்கொண்ட எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன குழு ஒன்றின் தலைவரான அம்ஜத் ரிஹான் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர்கள் மேற்கொண்ட சோதனையில் கலோட்டி நிறுவனம் முறையான சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
கலோட்டி நிறுவனத்தில் கண்டறியப்பட்ட தகவலை துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்த பின்னர், அந்த மையமோ, தணிக்கையில் கண்டறியப்பட்ட தீவிர தாக்கம் உடைய விஷயங்களை மறைக்கும் வகையில் அதனுடைய தணிக்கை முறைகளை மாற்றியமைத்து கொண்டதாக அம்ஜத் ரிஹான் கூறியுள்ளார். அதே போல எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனமோ இவ்விஷயத்தில் கண்ணை மூடி கொண்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------------------
உலக தங்க சந்தையில் துபாய் மிக முக்கியமான மையமாக இருக்கின்றது, உலகில் நடக்கும் ஐந்தில் ஒரு பங்கு தங்க வர்த்தகம் துபாயில் நடைபெறுகிறது. தங்கமானது ஆபரணங்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்டுக்கு சுமார் 300 டன் தங்கம் மின்னணு பொருட்களை செய்யவும் பயன்படுகிறது.
------------------------------------------------------------------------------------------------------
யுத்தங்களுடன் தொடர்புடைய தங்கம் விற்பனை செய்வதற்கான மிக பெரிய மையமாக துபாய் இருக்கின்றது என குளோபல் விட்னஸ் தன்னார்வ அமைப்பு மற்றும் ஐ.நா வின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையம், எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் கலோட்டி நிறுவனம் ஆகியவை தாங்கள் முறையாகவே செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.
இந்தியக் கடற்படைத் தளபதி ராஜிநாமா
இந்தியக் கடற்படை சமீப காலத்தில் சந்தித்த விபத்துக்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்தியக் கடற்படைத் தளபதி டி.கே.ஜோஷி பதவி விலகியிருக்கிறார்.
---------------------------------------------------------------------------------------------
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் இன்று ஏற்பட்ட விபத்தை அடுத்து இந்த பதவி விலகல் வருகிறது.
---------------------------------------------------------------------------------------------
அவரது இந்த ராஜிநாமாவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதாக, கடற்படையின் பத்திரிக்கைக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.
---------------------------------------------------------------------------------------------
கடற்படையின் துணைத் தளபதி ஆர்.கே.தோவான் தற்காலிகமாக கடற்படைத் தளபதியின் பொறுப்புக்களை கவனிப்பார் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – பிரித்தானியா:-
இலங்கை குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் என்பதில் நம்பிக்கை கிடையாது என பிரித்தானியா அறிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள், காணாமல் போனதல்கள் தொடர்பான விசாரணைகள் போன்றன தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பகமானதும் சுயாதீனமானதுமான விசாரணைக்ள நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
யுத்த நிறைவின் பின்னர் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பிரித்தானியா பல தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
எதிர்வர் மார்ச் மாதமளவில் நம்பகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக விசாரணைகளுக்கு அழுத்தம்; கொடுக்க பிரித்தானியா முனைப்பு காட்டும் என குறிப்பிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதனை ஏனைய நாடுகளுடன் இணைந்து வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)