Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, August 28, 2014
குல தெய்வம் என்பது என்ன பிரிவு??
------------------------------------------------------------
பிரும்மன் படைத்த உயிரினங்களைக் காக்க விஷ்ணுவும், சிவபெருமானும் பலவேறு அவதாரங்களையும், ரூபங்களையும் படைத்தார்கள் என்று கூறினேன் அல்லவா. அந்த உயிரினங்களைப் படைத்தப் பின் அவற்றை கோடிக்கணக்கான பல்வேறு பிரிவுகளாக பிரித்து உலகின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு குணங்களுடன் படைப்புக் கொடுத்தார். அந்த பல்வேறு குனங்களுடம், பலவேறு இடங்களிலும் பரவிக் கிடந்த படைப்புக்களை பாதுகாக்க, வழிப்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பரமாத்மன் முடிவு செய்து இருந்ததினால்தான் விஷ்ணு மற்றும் சிவபெருமானின் மூல அவதாரங்கள் மூலம் கோடிக்கணக்கான துணை அவதாரங்களை படைக்க வழி செய்யப்பட்டு இருந்தது. அவர்களால் அப்படியாக படைக்கப்படும் ஒவ்வொரு அவதாரத்துக்கும் சில பொறுப்புக்களும் அதிகாரங்களும் தரப்பட்டது. அவர்கள் பிரும்மாவினால் படைக்கப்பட்டு கோடிக்கணக்கான பிரிவுகளில் இருந்த ஒவ்வொரு பிரிவையும் பாதுகாத்து வழிகாட்டும் பொறுப்புக்களைப் பெற்றது.
--------------------------------------------------------------------------
பிரும்மாவினால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும் 13 ஜென்ம காலங்களைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது. படைப்பின் தத்துவப்படி ஒரு ஆத்மாவின் 13 ஜென்ம காலம் எனப்படுவது சுமார் 781 ஆண்டுகளைக் கொண்டதாம். ஒவ்வொரு ஆத்மாவும் படைக்கப்பட்டவுடன் அதை நல்வழிப்படுத்தி பாதுகாக்க எந்தெந்த தேவதை அல்லது தெய்வங்களுக்கு அதிகாரம் தரப்பட்டு இருந்ததோ அந்த தெய்வங்களும், தேவதைகளும் அந்த ஆத்மாக்களை தம்முடன் இணைத்துக் கொண்டு விடுவதினால் அந்த அந்த தெய்வத்தையே காக்கும் கடவுளாக அந்த ஆத்மாவும் ஏற்றுக் கொண்டு விடுகிறது. அதுவே அந்த ஜீவனின் குல தெய்வமாகி விடுகிறது. அந்த ஜீவனை சார்ந்த அனைத்து ஜீவனுக்கும் வம்சாவளியாக அதே தெய்வமும், தேவதையும் குல தெய்வமாகி விடுகிறது. இப்படியாக அமைந்ததே குல தெய்வம் என்பது. அவரவர் தமது குல தெய்வத்தை வணங்க வேண்டும் என்று இதனால்தான் கூறப்படுகிறது.
------------------------------------------------------------------
ஒரு ஆத்மாவானது ஜனனம் எடுத்தப் பின் அவர்கள் தங்கி உள்ள இடங்களில் ஏதாவது ஒரு காரணத்தினால் உந்தப்பட்டு தமக்கு பாதுகாப்பைத் தர அவர்கள் மனதில் தோன்றும் தெய்வம், தேவதை அல்லது ஏதாவது ஒரு உருவத்தை மானசீகமாக வணங்கத் துவங்குவார்கள். இந்த செயலும் தெய்வ நிர்ணயித்தின்படியே நடைபெறத் துவங்குகிறது. அதுவே அவர்களது குல தெய்வமாகி விடும். இப்படியாக துவங்கும் அந்த குல தெய்வ வழிபாடு என்பது அவர்கள் குடும்பத்தில் துவங்கி அவர்கள் மூலம் அவர்களது வம்சத்தில் தொடரும்.
------------------------------------------------------------------------------
ஒரு வம்சம் என்பது எத்தனை ஆண்டுகள் அல்லது எத்தனை குடும்பத்தினர்வரை பொருந்தும்? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே ஒரு வம்ச கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் கூட 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். நம்மில் யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சந்ததியினர் யார் என்பது தெரியுமா? யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது. மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
-------------------------------------------------------------------------
எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.
-------------------------------------------------------------------
இப்படியாக மூன்று தெய்வங்களும் தமது சார்ப்பிலே லட்சக்கணக்கான அணுக்களைப் படைத்து தமது அவதார தூதர்களாக, தெய்வங்களாக, தேவதைகளாக கிங்கணர்களாக உலகெங்கும் அனுப்பி வைத்து உள்ளார்கள். அவை அனைத்தும் பல்வேறு ரூபங்களில் அங்காங்கே குடி கொண்டுள்ளன. அப்பொழுது அங்கு குடி கொள்ளும் தெய்வங்களையும், தேவதைகளையும் அந்தந்த இடங்களில் உள்ளவர்கள் ஆராதிக்கத் துவங்குவார்கள். அப்படி தம்மை ஆராதிக்கத் துவங்கும் வம்சத்தை அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் தமது பாதுகாப்பில் தத்து எடுத்துக் கொள்ளும்.
---------------------------------------------------------------------
ஒருமுறை ஒரு தேவதையோ அல்லது தெய்வமோ ஒரு வம்சத்தினரை தத்து எடுத்துக் கொண்டு விட்டால் அதன்பின் அந்த வம்சத்தின் ஏழேழு தலை முறைக்கும் அவர்களே பாதுகாப்பாக இருந்தவாறு அந்த வம்சத்தினரின் குல தெய்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அந்த வம்சத்தினரின் வீடுகளில் நடைபெறும் நல்லவை மற்றும் கெட்டவை என்ற அனைத்து அம்சங்களிலும் சடங்குகளுக்கும் அந்தந்த தேவதைகளும் தெய்வங்களும் மட்டுமே பொறுப்பு ஏற்பார்கள். அந்த வம்சத்தை மற்ற தேவதையோ அல்லது தெய்வமோ ஏழேழு தலை முறை முடியும் வரை பாதுகாக்க முன்வராது. இதுவே அவற்றை படைத்த மூல தெய்வங்களின் சட்டமாகும்.
-------------------------------------------------------------------------------------
இப்படியாக நிர்ணயிக்கப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறி ஏழேழு தலை முறை முடியும்வரை ஏற்கனவே ஒரு தேவதை அல்லது தெய்வம் தத்து எடுத்துக் கொண்ட வம்சத்துக்கு வேறு தேவதை அல்லது தெய்வம் அடைக்கலம் கொடுக்க முன்வந்தால் அப்படி தடம் பிழன்று வேறு தெய்வ ஆராதனை செய்யும் வம்சத்தினரின் பிராத்தனைகளை அவற்றைப் படைத்த மூல தெய்வம் ஏற்காது. மாறாக அப்படிப்பட்ட வம்சத்தினர் ஏராளமான பிரச்சனைகளை தத்தம் வாழ்க்கையில் சந்தித்தபடி இருப்பார்கள். ஆகவே குல தெய்வம் என்பது தெய்வத்தின் ஒரு பிரிவே என்றாலும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் வணங்கித் துதிப்பதற்காக, அவர்களது வம்சங்களைப் பாதுகாக்கவே படைக்கப்பட்டவை.
------------------------------------------------------------------------------
குல தெய்வங்களுக்கு சில குறிப்பிட்ட காரியங்கள் தரப்பட்டு உள்ளன. அவற்றை செய்தப் பின் அவர்கள் தாம் செய்ததையும், அவற்றுக்கான காரணங்களையும், முறையான வழிப்பாதை மூலம் அவரவர்களைப் படைத்தவர்கள் மூலம் பரப்பிரும்மனிடம் அனுப்பும். அங்குதான் ஒரு கம்பியூட்டர் போல அனைவரது கணக்குகளும் வைக்கப்பட்டு அடுத்தப் பிறவி நிர்ணயிக்கப்படுகின்றது. ஆகவே குலதெய்வ வழிபாடு என்பதும் இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்ம வழிபாடே என்பதினால்தான் குலதெய்வத்தை அவமதிப்பது என்பது பரப்பிரும்மனை அவமதிப்பது என்பதினால் அந்தக் குற்றம் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்பட்டு ஆறு ஜென்மங்களுக்கு தண்டனைக் கிடைக்கின்றது. மனிதர்கள் பெற்றுள்ள ஆறு அறிவும் இந்த ஆறு நிலைக் கடவுள் தத்துவத்தினாலேயே அமைந்து உள்ளது
ஜீவ ஸமாதி
ஜீவ ஸமாதி
நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.
சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.
ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் வாதிடுவோர் உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.
இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.
இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.
சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.
கர்மம் என்பது
கர்மம் என்பது முற்ப்பிறப்பிற்கு நாம் செய்யும் பரிகாரம்
தர்மம் என்பது வரும் பிறப்பிற்கு நாம் செய்யும் உபகாரம் கிழிந்த உடையையும் மிஞ்சிய உணவையும்
தருவது மட்டும் தர்மம் ஆகாது
உயர்ந்த உதவியையும் சிறந்த நன்மையையும்
செய்வதே நல்ல தர்மமாகும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் பிறரின் மதிப்பில் சவாரி செய்ய மாட்டார்கள். தங்களுக்கு எது தெரியுமோ, எதைச் செய்ய விரும்புகின்றார்களோ அதையே செய்வார்கள்
இத்தாலியில் ஒரு மரத்தில் வளரும் மற்றொரு மரம்
இத்தாலி நாட்டின் பியத்மாந்து பிரதேசத்திலுள்ள இரு சிறிய நகரங்களுக்கிடையே எல்லைப் பகுதியில் வியப்பான இயற்கைக் காட்சி காணப்படுகிறது. செர்ரி வகை பழ மரம் ஒன்றின் வேர்ப்பகுதி, மற்றொன்று முசுக்கொட்டை பழ மரத்தின் மேலே வளர்ந்து வருகிறது. இந்த செர்ரி மரம், மிகவும் செழிப்பாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு நகரத்தின் பெயர், கசோர்ஸோ. எனவே, உள்ளூர் மக்கள், இந்த வியப்பான காட்சிக்கு கசோர்ஸோ இரட்டை மரங்கள் என பெயரிட்டுள்ளனர்.
உலகிலேயே மிக காரமான உணவு
பிரிட்டனின் லிங்கல்ன் மாவட்டத்தில் சமையல்காரர் முகமத் கரிம், உலகிலேயே மிக காரமான சுவைக் கூட்டு ஒன்று தயாரித்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனை கொண்டு உணவுப் பொருட்களை சமைத்தபோது, சமையல்காரர் வாயுத் தடுப்பு முகமூடியை அணிந்திருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்கள் இந்த காரமான உணவு வகையை சாப்பிடும்போது, 2 கையுறைகளையும் அணிய வேண்டும்.
இந்த காரமான சுவைக் கூட்டை உட்கொள்வது, அணுக்குண்டு வெடிப்பது போன்றது. வாடிக்கையாளர்கள் இதைப் பரிசோதிக்க விரும்பினால், அதற்கு முன்பு பொறுப்பு விலக்குரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரமான சுவைக் கூட்டு, ஆயுதம் போல பயன்படுத்தப்படலாம் என உணவகத்தின் தலைவர் தெரிவித்தார். தற்போது இந்த உணவகத்தில் ஒரு சிறப்புப் போட்டி நடைபெற்று வருகிறது. அதாவது, 15 நிமிடத்துக்குள் இந்த காரமான சுவைக் கூட்டு கலப்பில் 10 கோழிக்கால்களைச் சாப்பிட்டால் அவருக்கு 100 பவுண்டு, சுமார் 10ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும். ஆனால், இதுவரை 20பேர் மட்டும் இதில் பங்கேற்றுள்ளனர். 2 கோழிக்கால்களை மட்டுமே சாப்பிட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.
கடல் நீரில் மூழ்கிய கப்பலிலிருந்து 28கிலோகிராம் தங்கம்
150 ஆண்டுகளுக்கும் மேலாக கடல் நீரில் மூழ்கிய கப்பல் ஒன்றில் இருந்து சுமார் 28.3 கிலோகிராம் தங்கம் கிடைத்தது என்று அமெரிக்காவின் ஒடிசி கடல் ஆய்வு நிறுவனம் மே திங்கள் 5ஆம் நாள் அறிவித்தது. இந்த மூழ்கிய கப்பலில் இருந்து முதல் தொகுதி தங்கம் தான் கிடைத்துள்ளது. ஒடிசி கடல் ஆய்வு நிறுவனம், கடலில் தொலைந்த செல்வங்களைத் தேடிக் கண்டறிவதில் மிகவும் புகழ்பெற்றது.
இந்த கப்பலில் மொத்தம் 19 டன் எடையுள்ள தங்கம் இருக்க கூடும் என கருதப்படுகிறது. மேலும், 400க்கும் மேற்பட்ட பயணிகளின் தனியாருக்கு சொந்தமான தங்கமும் கப்பலில் இருந்துள்ளது. 1857ஆம் ஆண்டே அதன் மதிப்பு குறைந்தது 12லட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டாலர் என்று கருதப்படுகிறது. மத்திய அமெரிக்கா என்ற பெயருடைய கப்பல் 1857 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க்கிற்கு தங்கத்தை ஏற்றிச்சென்றது. ஆனால், வழியில் பெரும் புயலைச் சந்தித்ததால், அது, தென் கரோலினா கடற்பரப்பில் மூழ்கியது. 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மூழ்கிய கப்பல் கண்டறியப்பட்டதாக தெரிய வருகிறது.
2000 ஆண்டு பழமையான மட்பாண்ட துண்டுகள் கண்டுபிடிப்பு
இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொட,கிரிமகுல்கொல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராச்சியின் போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன.
களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜா சோமதேவ உள்ளிடட குழுவினர் இந்த அகழ்வாராச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்த பண்டைய கால மட்பாண்ட துண்டுகள் கிடைத்துள்ளன
வறட்சியில் வடமாகாணம்,
வறட்சியில் வடமாகாணம், 'தண்ணீர் அரசியலில்' கட்சிகள்
இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
இந்த விஷயத்தில் மத்திய அரசு 'தண்ணீர் அரசியல்' செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார்.
அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார்.
ந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது
படம்: மகிந்த ராஜபக்ஷ, சரத் சில்வா முன்னிலையில் முதலாவது தவணைக்கு பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோது)
-------------------------------------------------------------------------------------
இலங்கையில் கூடிய விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஊகங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
அந்தத் தேர்தலில் தனது மூன்றாவது தவணைக்காக மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்பதே இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடாக இருந்தது.
எனினும், இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷ, 2010-ம் ஆண்டில் மீண்டும் வெற்றிபெற்ற பின்னர், ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம் என்பதற்கு வசதியாக புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டார்.
ஆனால், அந்த புதிய திருத்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொருந்தாது என்று, முதல் தவணையின்போது அவரை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துவைத்த முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா கூறுகின்றார்.
'அரசியலமைப்பின் பிரிவு 31 (2) இன்படி, மக்களால் 2 தடவைகள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நபரும், அதன்பின்னர் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதி அற்றவர் என்று கூறப்பட்டுள்ளது...,அப்படியென்றால் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்தன்றே அந்த தகுதியீனமும் உருவாகிவிடுகின்றது' என்றார் முன்னாள் தலைமை நீதியரசர்.
தப்பியோடும் யாஸிடி மக்கள் இராக் வன்முறையிலிருந்து
யாஸிடி இன மக்கள் ஆயிரக்கணக்கானோர் சிரியா எல்லைக்கருகே உள்ள சிஞ்சார் மலையின் வறண்ட முகடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். சிலர் நடந்தே சிரியா எல்லையைக் கடந்திருக்கின்றனர். தங்கள் சொந்த ஊரான சிஞ்சாரைப் பிடித்த, இராக்கின் கிளர்ச்சிக்குழுவான இஸ்லாமிய அரசு என்ற அமைப்பின் தீவிரவாதிகள் செய்யும் வன்முறையிலிருந்து தப்ப அவர்கள் இவ்வாறு இடம்பெயர்கின்றனர். வார இறுதியில் சுமார் 20,000லிருந்து 30,000 பேர் வரை இராக்கிய-சிரியா எல்லையைக் கடந்துவிட்டதாக குர்டிஷ் பிராந்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்
அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசுகள், இந்த சிஞ்சார் மலைப் பகுதியில் சிக்கியிருக்கும் யாஸிடி அகதிகளுக்கு உதவ உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை விமானத்திலிருந்து போட்டு வருகின்றன. பலர் தங்கள் வீடுகளிலிருந்து அவசரத்தில் வெளியேறிய நிலையில், அவர்களுக்கு இந்த 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் குடிநீர் இல்லை.
Subscribe to:
Posts (Atom)














