Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, February 28, 2014
இலங்கையில் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்': வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை- வைகோ
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் திவாகர் என்பவர் சூப்பர் சிங்கர் சீசன்-4 பட்டம் வென்றுள்ளார். இவர்கள் ஐந்து பேரும் வருகிற மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் இலங்கை கொழும்புவில் உள்ள செயின்ட் ஜோசெப் கல்லூரியில் நடைபெறவுள்ள இசைக் கச்சேரியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர் --
ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது.
-------------------------------------------------------------------
படுகொலையை மறைக்க --ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள விஜய் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் இந்த இருநாள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------
இலங்கையில் கலைவிழா-- விஜய் தொலைக்காட்சி இசைக்குழுவினரும், இலங்கைக் கலைப்படைப்பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ஆம் தேதி கொழும்பு மருதாணை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 2-ஆம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இனப்படுகொலை ---
-----------------------------------------------------------------------------------
ஈழத்தில் ஏற்பட்ட தமிழினப் படுகொலையை நினைக்கும்போதே நமது மனம் வேதனையால் துடிக்கிறது. கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் மண்ணிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் ஒரு காணொளி வெளிவர இருக்கிறது.
------------------------------------------------------------------------
இசை நிகழ்ச்சி எதற்கு--
இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.
---------------------------------------------------------------------------
நெருப்பு மூட்டும் செயல்---- ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.
------------------------------------------------------------------------------
விஜய் டிவிக்கு கண்டனம்---- மார்ச்1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
---------------------------------------------------------------------------
கொழும்பு செல்லக்கூடாது --உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன் இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
கத்தரில் கேரள தூதரகம்?
இந்தியாவில் அரசு மற்றும் அதிகார வட்டத்தில் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் எவ்வளவு அதிகமோ அதற்குச் சிறிதும் குறைவின்றி, இன்னும் கூறினால் "கேரளா தான் இந்தியா" என்று அரபிகள் நினைக்கும் அளவுக்கான ஆதிக்கம் வளைகுடா நாடுகளில் உண்டு!
-----------------------------------------------------------------------------
எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி, அரசுப் பணிகளாக இருந்தாலும்சரி அதில் குறைந்தது ஒரு மலையாளியையாவது பார்த்துவிட முடியும்!
-----------------------------------------------------------------------------
"நாடு எது? மலபாரியா?", வளைகுடா நாடுகளில் வேலைக்கு வரும் புதியவர்களிடம் பெரும்பாலான அரபிகள் கேட்கும் பொதுவான கேள்விகளுள் ஒன்று இது! "இந்தியா எவ்வளவு பெரிய நாடு; அதில் கேரளா எவ்வளவு சிறிய மாநிலம்; வடகேரளத்தின் ஆறு மாவட்டங்கள் இணைந்த பகுதியே மலபார் என்பது; இவன் மலபார்தான் இந்தியா என்று நினைத்துள்ளானே" எனத் தோன்றும். வளைகுடா நாடுகளின் முன்னேற்றத்தில் வெளிப்படையாகத் தெரியும் கேரள மாநிலத்தவரின் பங்கினைக் குறித்து ஆய்வு செய்தால், அரபிகளின் இந்த எண்ண ஓட்டத்திற்கான காரணம் ஓரளவு புரியும்!
-----------------------------------------------------------------------------
ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அச்சமூகம் வாழும் பகுதியின் முன்னேற்றத்துக்கு எவ்வகையில் பங்களிப்பு செய்கிறது என்பதைப் பொறுத்து அமையும். பயன்பெறும் சமூகம் என்பதைத் தாண்டி, கொடுக்கும் சமூகமாக மாறுவது மட்டுமே அச்சமூகத்தினை முன்னேற்றப் பாதைக்குச் சீராக வழிநடத்திச் செல்லும். அவ்வகையில் கேரள மாநிலத்தவர்களிடமிருந்து படிக்கவும் தெரிந்து கொள்ளவும் பல விசயங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளன!
-----------------------------------------------------------------------------
ஆனால், அவர்களின் இம்முன்னேற்றம் இந்தியாவிலுள்ள பிற மாநில மக்களின் உரிமைகளையும் களவாடும் வகையில் தனி ஆதிக்கமாக வளர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல! அதற்கு இந்திய அரசும் துணைபோகுமெனில் அது மிகப்பெரிய அநியாயம்!
-----------------------------------------------------------------------------
இப்பதிவின் மூலம் கேரள மாநிலத்தவரின் அத்தகையதொரு அநியாய ஆதிக்கத்தினை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தரிலுள்ள இந்திய தூதரகத்திலும் கேரள மாநிலத்தவரின் ஆதிக்கம் மிகைத்துள்ளதன் அடையாளமாக, தூதரக தினசரி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரின் புரிதலுக்காக வைத்துள்ள எல் சி டி ஸ்க்ரீன் அறிவிப்பினைக் கூறலாம்.
-----------------------------------------------------------------------------
அறிவிப்புப் பலகை ஆங்கிலம், அரபி மற்றும் மலையாள மொழிகளில் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
இந்திய நாட்டு மக்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்திய தூதரகத்தில் பயன்பெறுவோராக இருப்பதால் அறிவிப்புப் பலகையில் ஆங்கிலம் இடம்பிடித்துள்ளது சரியானது!
-----------------------------------------------------------------------------
கத்தர் நாட்டின் மொழி அரபி என்பதாலும் அரபு நாட்டுக் குடிமகன்களுள் பெரும்பாலோருக்கு அரபியன்றிப் பிற மொழிகள் தெரியாது என்பதாலும் அறிவிப்புப் பலகையில் அரபி இடம்பிடித்துள்ளதும் சரியானது!
-----------------------------------------------------------------------------
இந்திய நாட்டின் மிகப் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாக இருக்கும் இந்தி எங்கே போனது?
-----------------------------------------------------------------------------
ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே பேசும் மலையாளத்தை மட்டுமே அறிவிப்புப் பலகையில் இந்திய தூதரகம் வைத்திருப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறது? "இந்தியா என்றால் மலபார்தான்" என்ற அரபிகளின் தவறான எண்ணம் சரியானதுதான் என சொல்ல வருகிறதா?
-----------------------------------------------------------------------------
கேரளம் மட்டுமன்றித் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா முதல் வடமாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் என அநேகமாக எல்லா மாநில மக்களுமே கத்தரில் வேலைபார்க்கும் நிலையில், அவர்கள் அனைவருமே ஒன்று ஆங்கிலம் படிக்கவேண்டும்; அல்லது அரபி படிக்கவேண்டும்; அல்லது ஒரேயடியாக எல்லோரும் மலையாளியாக மட்டும்தான் இருக்கவேண்டுமென விரும்புகிறதா? அல்லது மலையாளிகள் மட்டும்தான் இந்தியாவிலிருந்து அங்கே பணிபுரிகின்றனர் என்று நினைக்கிறதா?
-----------------------------------------------------------------------------
ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்தியத் தூதரகம் செயல்படுகிறது எனில், அதனைத் தெளிவாக "கேரளா தூதரகம்" என அறிவித்துவிடலாமே?
-----------------------------------------------------------------------------
- கத்தரிலிருந்து அப்துல் ரஹ்மான்
திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: பாஜக
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, திருச்சி அதிமுக வேட்பாளராக அறிமுகமாகும் கே.பரசுராமன் ,மீண்டும் களமிறங்குகிறார் குமார்
தஞ்சையில் எம்.பி வேட்பாளராக அறிமுகமாகும் கே.பரசுராமன்
----------------------------------------------------------------------------------------------------
திருச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் குமார்
புதிய வர்த்தக யுக்திகள் வேண்டும்: நரேந்திர மோடி
இந்திய வர்த்தகர்கள் தமது வர்த்தகக் கொள்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------
அனைத்து இந்திய வர்த்தகர்கள் அமைப்பின் இரண்டு நாள் தேசிய மாநாட்டில் முதல் நாளான வியாழனன்று அதில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, இந்திய வர்த்தகர்கள் புதிய வியாபார யுத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.உலகளாவிய சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றும் சக்தியைப் பெற புதிய தொழில்நுட்பம் உதவி செய்யும் என்றும், ஆகையால் வணிகர்கள் தங்களது தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த தயங்கக்கூடாது எனவும் அவர் பேசினார்.
---------------------------------------------------------------------------------------
காலமாற்றத்திற்கு தேவையான மாற்றங்களை உணர்ந்து செயல்படவேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், வணிகர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே உலக அளவில் வணிகத்தை பெருக்கி கொள்ளும் வாய்ப்பு தற்போது பெருகியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
---------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இளைஞர்கள் கணினி மென்பொருள் துறையில் உலகளாவிய சாதனை புரிந்து அவற்றை உலகம் முழுக்க பரப்பியுள்ளதாக கூறிய அவர், அவற்றை வர்த்தக துறையினரும் தங்களது வியாபார யுத்திகளுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
---------------------------------------------------------------------------------------
வர்த்தகக் கொள்கை மற்றும் காப்புரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை குறிப்பிட்ட நரேந்திர மோடி, விவசாயிகளும், உற்பத்தியாளர்களும், வணிகர்களும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் செயல்பட வேண்டியதும் அவசியம் என்றார்.
---------------------------------------------------------------------------------------
இணைய வர்த்தக நிறுவனங்கள் குறித்து குறிப்பிட்ட மோடி அவற்றை கண்டு இந்திய வணிகர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அவற்றின் வளர்ச்சி இந்திய வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும், வணிகப் பெருக்கத்திற்கும் பெரிதும் பயனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------
வணிகர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாம் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றும் நரேந்திர மோடி அப்போது உறுதியளித்தார்.
---------------------------------------------------------------------------------------
முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, வணிகர்களுக்கு மிகவும் அவசியமான சட்டத்திருத்தங்கள் அனைத்துக்கும் அக்கட்சி ஆதரவு அளிக்கும் என வாக்குறுதி அளித்தார்.
தமிழக வணிகர் சங்கத் தலைவர் கருத்து
---------------------------------------------------------------------------------------
இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மோடி ம்ற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் உரை குறித்து பிபிசியிடம் கருத்து தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ரத்து செய்யப்படும் என்ற வர்த்தகர்களின் கோரிக்கையை ஏற்பதாக முரளி மனோகர் ஜோஷி வாக்குறுதி அளித்ததாக விக்கிரமராஜா குறிப்பிட்டார்.
---------------------------------------------------------------------------------------
உணவுப் பாதுகாப்பு சட்டம் மறு ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதாக ஜோஷி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.
---------------------------------------------------------------------------------------
இணைய வழி வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமது கோரிக்கையை பாரதீய ஜனதா முழுமையாக ஏற்றுக்கொள்வதாக மோடியின் கருத்து அமையவில்லை என தமிழக வணிகர் சங்க தலைவர் கூறினார்.
சக சிப்பாய்கள் 5 பேரை சுட்டுக்கொன்று இந்திய சிப்பாய் தற்கொலை
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில், இந்திய சிப்பாய் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து படையினர் பலியானார்கள்.
--------------------------------------------------------------------------------------------------
தலைநகர் ஸ்ரீநகருக்கு சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு ராணுவ முகாமில் புதன் கிழமை இரவு இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கியால் சுட்ட சிப்பாயும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக ராணுவம் தெரிவிக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஒன்றுக்கு ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் காஷ்மீர் பகுதி, இந்திய மற்றும் பாகிஸ்தான் பகுதிகளாகப் பிளவுண்டு கிடக்கிறது. இரு நாடுகளும் தத்தம் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரப் பகுதியின் எல்லையில் துருப்புகளை நிலை நிறுத்தியிருப்பதால், அங்கு ஒரு பதற்ற நிலை நிலவுகிறது.
--------------------------------------------------------------------------------------------------
இந்திய சிப்பாய்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்றும், மோசமான பணி நிலைமைகள் நிலவுவதாகவும், விடுப்பில் செல்ல எளிதாக அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அடிக்கடி கூறுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்தவின் தனிப்பட்ட வைத்தியரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு:-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட வைத்தியரான டொக்டர் எலியந்த வைட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை எலியந்த வைட்டின் மோட்டார் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
தாக்குதல் சம்பவத்தில் மோட்டார் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
எனினும், சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் டொக்டர் வைட் காரில் பயணம் செய்யவில்லைஎ னவும் அவரது சாரதி மட்டுமே காரில் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகுpறது,
---------------------------------------------------------------------------------------
மிரிஹான எதிரிசிங்க வீதியில் இன்று அதிகாலை 4.30 அளவில் இந்த சம்பவம் இட்மபெற்றுள்ளது.
---------------------------------------------------------------------------------------
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.
---------------------------------------------------------------------------------------
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
பெல்லன்வில விஹாரையில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளுக்கு தேவையான சில பொருட்களை டொக்டர் வைட்டின் தாயாரது வீட்டிலிருந்து எடுத்துச் செல்வதற்காக சாரதி காரில் சென்றுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
---------------------------------------------------------------------------------------
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை அவுஸ்திரேலிய கடற்படையினர் கூட்டு பயிற்சி:-
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------
ஹமாஸ் மெல்பர்ன் (HMAS ‘Melbourne’) என்ற அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பலில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
----------------------------------------------------------------------------------------------
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த கப்பல் இலங்கையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
இரு நாடுகளினதும் கடற்படையினர் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் மற்றும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை – ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்ழ நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
மொரட்டுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
கியூபா போன்ற நாடுகள் இவ்வாறான பல தீர்மானங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்களே இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
ஜெனீவா பிரச்சினை தொடர்ந்தும் ஓர் தலைவலியாக அமைந்துள்ளது எனவும் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------
கியூபாவிற்கு எதிராக இவ்வாறான அறுபது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டள்ளதாகத் தெரிவத்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
கியூபாவிற்கு விஜயம் செய்திருந்த போது இவ்வாறான தீர்மானங்களை பெரிதுபடுத்த வேண்டாம் என கியூப ஜனாதிபதி ராவல் கஸட்ரோ ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவத்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
30 ஆண்டுகளாக போரை எதிர்கொண்ட இலங்கைக்கு இவ்வாறான அழுத்தங்களை வெற்றிகொள்வது சவாலாக அமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
7 பேர் விடுதலை- பிரச்சினைக்கு ஒரு வாரத்தில் தீர்வு' இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்:
இந்திய முன்நாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதில் தமிழக மத்திய அரசுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள சட்ட முரண்பாடுகள், இருதரப்பு வாதங்கள் தொடர்பாக தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரனைக்கு எடுக்கப்பட்ட போது கருத்து வெளியிட்ட அவர் 'எங்களது தீர்ப்பில், மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடை முறைகளை பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.
----------------------------------------------------------------------------------------
அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை கோர வேண்டும். அதன்பின்னரே உரிய முடிவு எடுக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------
குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அதைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு காரணம் நாங்கள்தான். இதற்கு இன்னும் ஒரு வாரத்தில் தீர்வு காண்போம்' என தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தார்.
----------------------------------------------------------------------------------------
மேலும் மத்திய அரசின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
----------------------------------------------------------------------------------------
இதனைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை 4 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
ஈ.பி.டி.பிக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு:-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
ஈ.பி.டி.பி. கட்சி வடக்கில் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------
கடத்தல்கள், காணாமல் போதல்கள், கப்பல் கோரல்கள், அடக்குமுறைகள் என பல்வேறு வழிகளில் ஈ.பி.டி.பி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமை விவகார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
ஈ.பி.டி.பி. போன்ற துணை இராணுவக் குழுக்களுக்கும் அரசாங்கப் படையினருக்கும் தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினருடன் இணைந்து செயற்பட்ட துணை இராணுவக் குழுக்கள், யுத்த நிறைவின் பின்னரும் துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும், பிரதேசத்தில் ஆதிக்கத்தை செலுத்தவும் இவ்வாறு துணை இராணுவக் குழுக்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
வட மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற காலத்தில் வேட்பாளர் அனந்த சசிதரனின் வீட்டின் மீது ஈ.பி.டி.பி.யினர் இராணுவ சீருடையில் சென்று தாக்கியிருந்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபடும் - அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி-
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்காத நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
எனவே எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய அடிப்படை கோரிக்கைகளுக்கு கூட இன்னமும் இலங்கை அரசாங்கம் தீர்வு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
துரதிஸ்டவசமாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மையினர் போன்ற தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
இந்தக் காரணிகளை கருத்திற் கொண்டு அமெரிக்கா மற்றுமொரு தீர்மானத்தினை நிறைவேற்ற முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
மனித உரிமைகளை முடக்க முற்படும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------------------------------------------------------------------
கடத்தல்கள், காணாமல் போதல்கள், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
--------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தார் அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதியின் இரண்டு சகோதரர்கள் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய பொறுப்புக்களை வகித்து வருவதுடன் மற்றமொரு சகோதரர் பாராளுமன்றின் சபாநாயகராகக கடமையாற்றி வருவதாக இலங்கை குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்கள் பலர் மிக முக்கியமான பதவிகளை வகித்து வருகின்றனர் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை வழிமுறைகளை பின்பற்றி தமது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
ஊடகவியலளார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் தரப்பினருக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)