Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

செவ்வாய் கிரகம் ஓர் பார்வை

இந்தியா தனது விண்வெளித் திட்ட வரலாற்றில் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை நவம்பர் 5 -ஆம் தேதியன்று இந்திய நேரப்படி பிற்பகல் 02:38 மணிக்கு வெற்றிகரமாக ஏவியது. இது மங்கள்யான் என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் சுற்று கலன் திட்டம் (MOM-Mars Orbiter Mission) இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் முனைய துணைக்கோள் ஏவுகலம் (PSLV-Polar Satellite Launch Vehicle) மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிலிருந்து செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், செவ்வாய் கோளுக்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நாடுகளின் பட்டியலிலில் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான்) நான்காவது நாடாக இந்தியா இணையும். கடந்த 22-10-2008 ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை (PSLV-C11 ராக்கெட் மூலம்) வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை ஆச்சர்யப்படவைத்தது இஸ்ரோ. இந்த முறை மங்களயானை அனுப்பி வியக்க வைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருக்கின்றன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பார்வையும் செவ்வாய் கிரகம் மீது திரும்பியது. இதைத் தொடர்ந்து, ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் (மங்கள்யான்) அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது. செவ்வாய் கிரகம் ஓர் பார்வை நான்காம் நூற்றாண்டில் இத்தாலிலிய வானியல் ஆராய்ச்சியாளர் கலிலிலியோ கலிலிலிலி தொலைநோக்கி வழியாக செவ்வாய் கிரகத்தை உற்றுநோக்கி ஆராய்ந்தார். அந்த காலக்கட்டத்தில் மெல்ல மெல்ல செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனின் கவனம் திரும்பியது. அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஈடுபாடும் அதிகமானது. ஆராய்ச்சிகள் தொடர்ந்தன 21-ஆம் நூற்றாண்டில் விண்வெளி ஆய்வு களில் பெரும் புரட்சி ஏற்பட்டன. அவற்றில் முக்கியமான நாடுகள் அமெரிக்காவும் ரஷ்யாவும். இவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு தொடர்ந்து விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்துவரும் முக்கிய நாடு அமரிக்கா. இந்நாட்டை தொடர்ந்து ரஷ்யாவும் ஜப்பானும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் குறிப்பிட்டு கூறும்படியான எவ்வித வெற்றியும் பெறவில்லை. இருந்தாலும் செவ்வாய் மீதான மனிதனின் ஈர்ப்பு குறையவில்லை. அதற்கு முக்கிய காரணம், பூமிக்கும் செவ்வாய்க்கும் காணப்படும் ஒற்றுமைதான். இரண்டு கிரகங்களின் திட மேற்பரப்பு, பருவக்காலம், நாளின் கால அளவு, அச்சு, துருவ பனிக்கட்டி அமைப்பு, ஒருமுறை சூரியனை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நாட்கள் என பல்வேறு ஒற்றுமைகள் நிலவுகின்றன. இதற் கிடையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீரும் உயிரினங்களும் இருக்கலாம் என நம்பப்படுவது இன்னும் செவ்வாய் மீது மனிதனுக்கான ஆர்வம் அதிகரித்தவண்ணம் உள்ளது. செவ்வாய் கோள் வெள்ளி கோளுக்கு அடுத்து பூமிக்கு நெருக்கமான கோள் ஆகும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான அண்மை தூரம் 55 மில்லிலியன் கிலோ மீட்டர். இரண்டு கோள்களுக்கும் இடையே உள்ள தொலைவு இடைவெளி 400 மில்லிலியன் கிலோ மீட்டர். நமது சூரியக் குடும்பத்தில் எட்டு மிகப்பெரிய கோள்கள் உள்ளன. அவை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், பூமி, யுரேனஸ், நெப்டியூன். புளூட்டோ ஒரு நிழல் கிரகமாக 2006- இல் சர்வதேச வானியல் கூட்டமைப்பினால் (International Astronomical Union -IAU) உறுதிப்படுத்தப் பட்டதால் கோளுக்கான தகுதியை இழந்துவிட்டது. மொத்தமுள்ள எட்டு கோள்களில் செவ்வாய் மட்டுமே பூமியுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டது.
புதனை எடுத்துக்கொள்வோம். புதனுக்கு வானம் கிடையாது. இக்கிரகத்தில் பகல் நேர வெப்பநிலை 425 டிகிரி செல்சியஸ். இரவு நேர வெப்பநிலை 180 டிகிரி செல்சியஸாக குறைந்துவிடுகிறது. வெள்ளி கோள் பூமியை போல ஒரேமாதிரியான அளவு கொண்டிருந்தாலும் அதன் பகல் நேர வெப்பநிலை 450 டிகிரி செல்சியஸை விட அதிகம். இதன் மேற்பரப்பு அழுத்தமானது பூமியைவிட 90 முறை அதிகம். கார்பன்-டை ஆக்ஸைடால் ஆனது. வியாழன், யுரேனஸ், நெப்டியூன், சனி வாயு கோள்களாகும். இந்த கோள்களுக்கு திடமான மேற்பரப்பு கிடையாது. மனிதனால் இந்த மேற்பரப்பில் நடக்க முடியாது. அதனால் மனிதனால் இந்த கோள்களில் தரை இறங்க முடியாது. ஆனால் செவ்வாய் கோள் திடமான மேற்பரப்பை கொண்டது. பூமியை போன்றது. ஒருவர் செவ்வாய் கோளில் நின்று சுற்றி பார்த்தால் அவர் ஒரு பெரிய பாலைவனத்தில் நிற்பதை போன்று இருக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் செவ்வாயில் குளிர் பாலை வனம். இதன் வெப்பநிலை அண்டார்டிகாவை விட சிறிது குறைவானது. பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரம். செவ்வாயில் 24 மணி 39 நிமிடங்கள். புதனில் நமது 59 நாட்கள்தான் ஒரு நாள் ஆகும். வெள்ளியில் 243 நாட்களே அங்கு ஒரு நாள். அதேபோல வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் கோள்கள் அதன் அச்சில் வேகமான சுழற்சியை கொண்டவை. அதனால் அவற்றின் ஒரு நாள் 24 மணி நேரத்தை விட குறைவானவை. வியாழன், சனி, கோள்கள் அதனுடைய அச்சில் சுற்றிவர 10 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதேபோல யுரேனஸ், நெப்டியூன் சுற்றிவர 16 மணியிலிலிருந்து 18 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன. செவ்வாயின் வளிமண்டலமானது மொத்தமானது. இதன் வளிமண்டல அழுத்தம் பூமியின் வளிமண்டல அழுத்தத்தைவிட 1 சதவீதம் அதிகம். பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. செவ்வாய் 687 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. அதாவது இரண்டு மடங்கு காலத்தை செவ்வாய் எடுத்துக்கொள்கிறது. மேலும் பூமியானது அதன் அச்சிலிலிருந்து 230 பாகை சாய்வாக அமைந்துள்ளது. செவ்வாய் 250 பாகை சாய்வாக அமைந்துள்ளது. செவ்வாயிலும் பருவக்காலங்கள் உண்டு. இந்த காலங்கள் பூமியைகாட்டிலும் இரண்டு மடங்கு நீளமான காலங்கள். அதேபோல செவ்வாயில் தண்ணீர் உள்ளதாக நம்பப்படுகிறது. செவ்வாயில் நடத்தப்பட்ட மண் பரி சோதனைப்படி, செவ்வாய் மண்ணில் 2 சதவீதம் நீர்ம துகள் கொண்ட எடை காணப்படுவதாக தெரியவந்துள்ளது. முக்கிய வாயுக்களான கார்பன்-டை ஆக்ஸைட், ஆக்ஸி ஜன், சல்பர்டை ஆக்ஸைடு ஆகியவை நீர்ம துகள் களை வெளியிடுகின்றன. என்றாலும் நீர்மமான தண்ணீர் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விண்வெளி ஆய்வு மையம் 1963-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization - ISRO). இஸ்ரோ, இந்தியாவில் செயற்கைக் கோள்களையும் ராக்கெட்டுகளையும் வடிவமைத்து தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவி வருகிறது. உள்நாட்டுக்கு மட்டுமின்றி அவ்வப்போது வெளிநாடு களுக்குத் தேவையான செயற்கைக்கோள்களை தயாரித்து கொடுப்பதுடன் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இங்கு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் ஏவும் பணியையும் மேற்கொண்டு வருகிறது. வளர்ந்த நாடுகளே வியக்கும் வண்ணம் விண்வெளித் துறையில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது இந்தியா. கடந்த 1975-ம் ஆண்டு விண்வெளி தொழில்நுட்பத்தில் கால்பதிக்க ஆரம்பித்த இந்தியா, ஆர்யப்பட்டா, பாஸ்கரா தொடங்கி அனுசாட், ஸ்டுட்சாட், ஜுக்னு என மாணவர் செயற்கைக்கோள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட (நூறாவது செயற்கைக்கோள் 9-9-2012 அன்று பி.எஸ்.எல்.வி- சி21 ஏவப்பட்டதன் மூலம் சாதனை படைக்கப்பட்டது) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை பயன்படுத்தி அவை விண்ணில் செலுத்தப்பட்டன. நோக்கம் * இந்தியாவின் முதல் செவ்வாய் விண்வெளித் திட்டத்தின் முக்கிய நோக்கமானது, தொழில்நுட்ப ரீதியிலான கட்டமைப்பு, திட்டமிடல், மேலாண்மை, மற்றும் கோள்களுக்கிடையிலான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்திப் பார்ப்பது. * மங்கள்யான் விண்கலத்தை திறமையாக வடிமைத்து 300 நாட்கள் பயணம் செய்து செவ்வாய் சுற்றுப் பாதையில் செலுத்தி திறமையாக சுற்றவிடுவது. * ஆழமான விண்வெளித் தொடர்பு, வழிசெலுத்துதல், விண்வெளித்திட்டம், மேலாண்மை மேற்கொள்வது * செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வது, தாவர மற்றும் விலங்கு ஆகியவற்றின் அமைப்பு பற்றிய இயல், தரையமைப்பு, கனிமவியல்,மற்றும் செவ்வாய் பருவக் காலநிலை போன்றவற்றை அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்வது. * செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில்நுட்பத் திறன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் இருக்கிறதா என்பன உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவது. * விண்வெளிப் பயணங்களுக்குத் தூக்கிச் செல்லும் ராக்கெட் திறனை உறுதிப்படுத்துவது * விண்ணுளவி அமைப்பு, இயக்க நெறிகளைச் செயலாக்க முற்படுவது; அண்டவெளித் தேடல் பணி களைத் திட்டமிட்டு நிறைவேற்றுவது. * விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது. * செவ்வாய்க் கோள் சுற்றுளவியை அமைப்பது. அதை நெடுந்தூரப் பயணத்துக்குத் தயார் செய்வது. அது செவ்வாய்க் கோளில் இறங்கச் செய்வது. * செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து படமெடுப்பது. * செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் இருந்த சூழ் வெளி வாயு மண்டல இழப்பை ஆராய்வது
எதிர்பார்க்கப்படும் பயன்கள் * தன்னிறைவு: விண்வெளித் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு, இன்றையக் காலகட்டத்தில் தொலைத் தொடர்பு, தொலைக்காட்சி, பருவநிலை அறிதல், உட்பட பல்வேறு தேவைகளுக்கு ஒவ்வொரு நாடும் செயற்கை கோள்களை பயன்படுத்துகின்றன. இந்தியா போன்ற விரிந்து பரந்த பெரிய நாடு இந்தத் தேவைகளுக்காக வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை நம்பியிருந்ததால் அதன் இறையாண்மையும் வளர்ச்சியும் கேள்விக் குறியாகிவிடும். அதை மாற்றி விண்வெளித் தொழில் நுட்பத்தில் தன்னிறைவடையவும், அடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறவும் இது போன்ற முயற்சிகள் உதவும். * அறிவியல்: குறிப்பாக நமது செவ்வாய் பயணம் கோளில் இணைத்து எடுத்துச் செல்லும் ஐந்து கருவிகளும் ஒவ்வொரு அறிவியல் நோக்கத்திற்காக செயல்படும் திறன் கொண்டவை, அதாவது, செவ்வாயில் "மீத்தேன்' வாயு உள்ளதா? என ஆராயும் கருவி, வாயு மண்டலத்தை ஆராயும் கருவி, செவ்வாயை பல கோணங் களில் படம் பிடிக்கும் கருவி, ஆகியவற்றை சொல்லலாம். இந்தக் கருவிகள் செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ந்து, விஞ்ஞானிகளுக்குத் தேவையான செய்திகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டவை. அந்தச் செய்திகள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும். * வர்த்தகம்: இந்தியாவில் வெற்றிகரமான நிலவு மற்றும் செவ்வாய்ப் பயணங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திற்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும். வளர்ந்து வரும் நாடுகள் தங்களுக்குரிய செயற்கைகோள்களை தயாரிக்கவும், அவற்றை விண்ணில் செலுத்தவும் வர்த்தக ரீதியில் நம்மை அணுகும் வாய்ப்புகள் கிடைக்கும். அதன் மூலம் அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கவும், கூடுதல் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப வேலைகளை இந்தியாவில் உருவாக்கவும் முடியும். * மனித வளம் பேணல்: செவ்வாய்க் கிரக ஆய்வுகள் மூலம் அறிவியல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை நம்மால் உருவாக்க முடியும். அதையும் தாண்டி, நமது விஞ்ஞானிகளுக்கு இடையே மிக உயர்ந்த குழு மனப்பான்மையை வளர்க்கவும் இத்தகைய விண்வெளி ஆய்வுகள் கைகொடுக்கின்றன. ராக்கெட் விவரம் * இந்த PSLV ராக்கெட் PSLV-C25 என 25-வது டநகய ராக்கெட் ஆகும். அதேபோல லக வரிசையில் 5-வது ஆகும். இது செவ்வாய் சுற்றளவி செயற்கைக்கோள் (MOM-Mars Orbiter Mission) இதன் 1337 கிலோ நிறையை சுமந்துகொண்டு 250 கி.மீ. பு 23500 கி.மீ. நீள்வட்டப்பாதையில் பயணம் செய்துகொண்டுள்ளது. * PSLV- C25 ராக்கெட் உயரம் 44.4 மீட்டர்; துணைக்கருவிகளின் நிறை 1337 கிலோ. மங்கள்யான் விண்கலம் முதலில் புவி மைய நிலையிலிருந்து (Earth - Centerd Phase) சூரிய மைய நிலைக்கு (Heliocentic Phase) சென்று செவ்வாய் நிலையில் (Martian Phase) நிறுத்தப்படும். அங்கிருந்தபடியே செவ்வாய் சுற்றுப் பாதையில் சுற்றி வந்து செவ்வாய் கிரகத்தை பற்றிய தகவல்கள் சேகரித்து அனுப்பி வைக்கும். திட்டசெலவு மங்கள்யான் ஏவுத் திட்டத்துக்கு ஆன நிதிச் செலவு 450 கோடி ரூபாய். 5 ஆய்வுக் கருவி இதனுள் அடக்கம். இத்திட்டம் வெற்றி பெற்றால் உலகில் குறைந்த செலவில் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கைகோள் திட்டம் என இது புகழ்பெறும். பி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரிக்க 110 கோடியும்; மங்கள்யான் விண்கலம் தயாரிக்க 150 கோடியும்; ராக்கெட், விண்கலம் இணைக்க, கொண்டுச்செல்ல, கையாள, நிலைநிறுத்த, ஏவிடவும் 90 கோடியும் செலவிடப்பட்டது. ஏனைய செலவினங்கள் பின்னர் தெரியவரும். மங்கள்யான் செயல்பாடு பூமி, செவ்வாய் இரண்டுமே சூரியனைச் சுற்றி வரும் கோள்கள். ஆனால் இவை இரண்டும் வெவ்வேறு வேகத்தில், சூரியனை விட்டு வெவ்வேறு தூரங்களில் தங்களுக்குரிய நீள்வட்டப் பாதைகளில் சுற்றி வருகின்றன. பூமி சூரியனிலிலிருந்து அதிகபட்சம் 15,20,98,232 கி.மீ., குறைந்தபட்சம் 14,70,98,290 கி.மீ என்ற நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதற்கு 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது சராசரியாக விநாடிக்கு 29.78 கி.மீ. வேகத்தில் தினமும் சஞ்சரிக்கிறது. அதேமாதிரி செவ்வாய் சூரியனிலிலிருந்து அதிகபட்சம் 24,92,09,300 கி.மீ. குறைந்தபட்சம் 20,66,69,000 கி.மீ என்ற நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வர 687 நாட்களை எடுத்துக் கொள்கிறது. அதாவது சராசரியாக விநாடிக்கு 24 கி.மீ. வேகத்தில் தினமும் சஞ்சரிக்கிறது. இப்படிப்பட்ட பூமியும் செவ்வாயும் சூரியனைச் சுற்றி வரும் ஓட்டப்பந்தயத்தில், கிட்டதட்ட இரண்டரை வருடங் களுக்கு ஒருமுறை அவற்றிற்கு இடையே உள்ள இடைப் பட்ட தூரம் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங் களைப் பயன்படுத்தி, அந்த நேரத்தில் செல்லும் செவ்வாய்ப் பயணங்களுக்குக் குறைந்த எரிபொருள் போதும். இந்த உத்தேசத்தில் தான் 5-11-2013 அன்று, 250 கி.மீ 23,540 கி.மீ என்ற நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் ஏவப்பட்டாலும் சிறிது சிறிதாக நீள்வட்டப் பாதை உயர்த்தப்படும். டிசம்பர் 1-ம் தேதி செயற்கைகோளில் உள்ள மோட்டாரை இயக்கி செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அது உந்தப்படும். பின்னர் மங்கள்யான் செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி கிட்டத்தட்ட 9 மாதங்கள் பயணம் செய்து 11-9 -2014-ம் தேதி வாக்கில் செவ்வாயின் அருகில் செல்லும். அப்போது செயற்கைகோளில் உள்ள மோட்டாரை மீண்டும் ஒருமுறை இயக்கி அதன் வேகத்தை குறைக்க வேண்டும். அப்போது தான் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்த முடியும். மங்கள்யான் பணி 10 மாதங்கள் ஆகும். மங்கல்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி, வெற்றிகரமாகச் சுற்ற ஆரம்பித்தால், அது ஓர் அசுர விண்வெளிச் சாதனையாகப் போற்றப்படும். அப்போது செவ்வாய்க் கோளைச் சுற்றிய நான்காவது தேசமாக இந்திய ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும். ஆசிய பேராற்றல் நாடுகளான ஜப்பான், சீனா ஆகிய இரண்டும் முயன்று, அவற்றின் சுற்றுளவிகள் செவ்வாய் கோளைச் சுற்ற முடியாமல் தோல்வி அடைந்தன. இதுவரை உலக நாடு களில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சி களில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன. எதிர்காலத் திட்டங்கள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அடுத்த திட்டமானது, இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்கலத்தை அனுப்புவது. இப்போது இந்த திட்டம் 2015-க்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சந்திராயன்-2 வானது சந்திராயன்-1 விட பல முறைகளில் வேறுபட்டது. முதன் முதலில் சந்திராயன்-2 அணுக்கரு எரிசக்தியைப் பயன்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த வின்கலம் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத் தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர மேற்பரப்பில் தரை இறக்கும். விண்கலம் நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும். தளவுளவி, வாகன (Lunar Lander & Rover) அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2015 ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வுக் குழு இரண்டு அல்லது மூவர் இயக்கும் மனித விண்வெளிக் கப்பலைத் தயார் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆகும் செலவு 242 மில்லிலியன் டாலர் (1240 கோடி ரூபாய்). மூவர் இயக்கும் அந்த மனித விண்கப்பல் பூமியை 250 மைல் தணிந்த உயரத்தில் 7 நாட்கள் சுற்றி வரும். இந்திய அரசு மனிதப் பயணத் திட்டத்துக்கு 95 கோடி ரூபாய் நிதித் தொகையை அளித்துள்ளது. விண்வெளிப் பயண மனிதப் பயிற்சிக்கு 1000 கோடி ரூபாய்ச் செலவில் பெங்களூரில் பயிற்சிக் கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment