Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, December 14, 2013

பொருளாதார உலகமயமாக்கல் என்பதில் ஆறு முக்கிய பொருளாதார நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளன

மான்டெக் சிங் அலுவாலியா பொருளாதார உலகமயமாக்கல் என்பதில் ஆறு முக்கிய பொருளாதார நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளன. அவை: 1. பொருட்கள் மற்றம் சேவைகளில் சர்வதேச வர்த்தகத்தைப் பெருக்குதல். 2. தொழில்நுட்பம் தடையின்றி கிடைக்கச் செய்தல். 3. வெளிநாட்டு நேரடி முதலீட்டை விரிவுபடுத்துதல். 4. இதர மூலதனங்கள் எளிதாக தடையின்றி கிடைக்கச் செய்தல். 5. தேச எல்லைகளைத் தாண்டி மக்கள் சுதந்திரமாகச் சென்று வருதல். 6. உலகமயமான புவியை நிர்வகிக்க உகந்த சர்வதேச நிறுவன அமைப்புகளை உருவாக்குதல். உலகமயமாக்கல் குறித்த மக்களின் உணர்வுகள் மற்றும் அதன் பலன்கள் கடந்த 10 ஆண்டுகளில் வேகமாக மாறிவருகின்றன. 1995-ஆம் ஆண்டு வாக்கில் இந்த அபிப்ராய சுழற்சியில் உச்ச கட்டம் ஏற்பட்டது எனலாம். அரசியல் ரீதியாக பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும் கம்யூனிச வீழ்ச்சியும் இந்த நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறைகளும் மற்றும் சந்தை அடிப்படை கொள்கைகளும் உலகமயமாக்கல் வெற்றிபெற உதவின. இதே சமயத்தில் அமெரிக்காவில் பொருளாதார வளர்ச்சி ஆரம்பமாகி, புதிய தொழில்நுட்ப மேம்பாடு, குறிப்பாக தகவல் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக விரைந்து வளரத் தொடங்கியது. உலகமயமாக்கல் வளரும் நாடுகளுக்கு தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில் தொடர்ந்த சந்தை வசதிகளையும், பொருளாதாரரீதியில் நன்கு நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கு தட்டுப்பாடில்லா மூலதனத்தையும் கிடைக்கச் செய்யும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வெற்றிப் பெருமித நம்பிக்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 1997-ஆம் ஆண்டில் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. அதற்கு அடுத்த ஆண்டு ரஷ்யாவின் பணம் பெரிய அளவில் மதிப்புக் குறைந்து சீரழிந்தது. அதே நிலை 1999-இல் பிரேசிலுக்கு அடுத்து துருக்கி அர்ஜென்டினா நாடுகளுக்கும் ஏற்பட்டது. இந்த நிகழ்வுகள் உருவாகி வளர்ந்துவரும் சந்தை அடிப்படை பொருளாதார நாடுகளின் எளிதில் பாதிப்படையும் தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின. மேலும் உலகமயமாக்கலின் அபாயத்தையும் உலகுக்கு உணர்த்தின. இத்தகைய அபாயங்களை உணரத் தவறியதாலும், அபாயநிலை ஏற்பட்ட பின்னர் அதிலிருந்து மீளும் வழிகளையும் நடைமுறைகளையும் பயன்படுத்த தவறியதாலும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்கள் நம்பகத் தன்மையை இழக்கத் தொடங்கின. தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் சில நிகழ்வுகளும் உலகமயமாக்கல் மீது முன்பு ஏற்பட்டிருந்த நம்பிக்கை தளர்ந்துபோகக் காரணமாயின. அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகம் 2000- ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. தொழில்நுட்ப அடிப்படையிலான பங்குகள் வீழ்ச்சியடைந்தன. பொருளாதார நடவடிக்கை எதிர்த்திசையில் மாறியது. வேலை இழப்புகள் தொடர்ந்து பெருகவே வளர்ச்சியடைந்த நாடுகளில் உலகமயமாக்கல் பின்னுக்குத் தள்ளப்பட்டது. 1990 தொடங்கி 10 ஆண்டுகளாக வெற்றிக்களிப்பு மாறி பயங்கரவாதம் பற்றிய கவலை வளர்ந்து அரசியல் சிந்தனையில் மாறுதல் தோன்றியது. கொள்கைகள் வகுப்பு உலகமயமாக்கல் முற்றிலும் மாறான வெளிச் சூழலை உருவாக்கியது என்ற நிலையில் அதிகபட்ச நன்மையடைய உதவும் கொள்கைகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும் உலகச் சூழலைக் கையாளும் திறனே நமது மேம்பாட்டுக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்று அர்த்தம் கொள்ள முடியாது. வெளிச் சூழலின் நன்மைகளைப் பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாத அதேசமயம் உயர் முன்னுரிமை பெறக்கூடிய உள்நாட்டுக் கொள்கை அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இத்தகைய மூன்று அம்சங்களாவன: அத்தியாவசியமான சமுதாய சேவைகளை வழங்குவது, வேளாண் முறைகளில் உத்வேகத்தை மீண்டும் உருவாக்குதல் மற்றும் அடிப்படை வசதி மேம்பாடு. இன்று முன்னேறுவது அத்தியாவசியம் என்றாலும் அடிப்படை வசதி மேம்பாடு இன்றியமையாதது. மேலும் உலக மயமாக்கலின் முழுப்பயனை கிடைக்கச் செய்வது. நமது பொருளாதாரத்தின் முன் உள்ள பிரச்சினைகளில் மிக முக்கியமானது கல்வி மற்றும் சுகாதார வசதிகளின் குறைபாடு. நம் நாட்டு எழுத்தறிவு நிலைமை, 25 ஆண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்த நிலையை விடவும் குறைவு என்பது நம்மை விழிப்படையச் செய்யவேண்டும். சுகாதாரத்துறையில் நமது நிலைமை மோசமாகவே உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் கல்வி, சுகாதார வசதிக்குறைவு கணிசமாகக் காணக்கிடக்கிறது. அனைவரும் ஆரோக்கியமான, எழுத்தறிவு பெற்ற மக்கள் என்ற நிலையே, சிறந்த குறிக்கோள்தான். எனினும் அத்தகைய மக்கள்தான் உற்பத்தி பெருக்கத்திற்கும், வருவாய் பெருக்கத்திற்கும் தேவையான முதல் நிபந்தனை என்பதையும் மறந்துவிடக்கூடாது. கல்வி, சுகாதார வளர்ச்சிக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்பது உண்மை. என்றாலும் நிதிப்பற்றாக்குறை என்பது இந்தப் பிரச்சினைகளின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. இவற்றை வழங்குவதற்கான அமைப்புகளை மேம்படுத்தி திறம்படச் செயல்படச் செய் வது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. செலவிடும் நிதியின் அதிகப்பட்ச நன்மைகளை நிறுவன மேம்பாடுதான் உறுதி செய்ய முடியும். இந்த துறைகளில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்தி, கண்காணிக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்குவது இதில் பெரிதும் உதவும். அதிக கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு முன்னுரிமைத் துறை வேளாண்துறையாகும். இத்துறையின் 4 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடையலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான் 10-வது ஐந்தாண்டுத் திட்ட இலக்கான 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம். ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் வேளாண்துறை வளர்ச்சி 4 சதவீத இலக்கை அடைய இயலவில்லை என்றே தெரிவிக்கின்றன. 1980 முதல் 1990 வரை 3. 4 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி பின்னர் 2 சதவீதமாக தேய்ந்து போனது. கிராமப் பகுதிகளில் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது என்ற அதிருப்தி நிலைக்கு வேளாண் வளர்ச்சி வீதக் குறைவே அடிப்படை. வேளாண் வளர்ச்சியில் உத்வேகம் திட்ட இடைக்கால மதிப்பீட்டில் இந்திய வேளாண் துறையை மீண்டும் உத்வேகம் அடையச் செய்வதற்கு உயர் முன்னுரிமை வழங்கப்படும். கிராமப்புற அடிப்படை வசதித்துறையில் குறைந்துவரும் முதலீட்டுப் போக்கினை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பாசனத் திட்டங்கள், கிராமப்புற சாலைகள், நில நீர்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் கூடுதல் முதலீடுகள் அவசியம். கிராம மக்களுக்கு கடன் வழங்கும் முறைகள் எளிதாக்கப்பட்டு விரைவுபடுத்தப்படுவதும், வளர்ச்சி சேவைகளை வலுப்படுத்துவதும், கவனம் செலுத்த வேண்டிய இதர அம்சங்கள். உணவு தானிய உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ள நமது வேளாண் நடைமுறைகள், மதிப்புக் கூட்டப்பட்ட தோட்டப்பொருள் உற்பத்தியை நோக்கியதாக அமைய புதிய அணுகுமுறைகள் உருவாக வேண்டும். பண்ணை முதல், வேளாண்பொருள் பதப்படுத்துதல் நுகர்வோருக்கு நேரடியான விற்பனை போன்றவை வரையிலான சுழற்சி முறைகள் உபயோகத்துக்கு வரவேண்டும். இதற்கு அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பம், குளிர்சாதன வசதியுடனான வேளாண்பொருள் போக்குவரத்து, தரப்பிரிப்பு, நவீன சந்தை யுக்திகள் ஆகியன அவசியம். இந்தத் துறைகளில் வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் ஈடுபட முன்வரவேண்டும். பொருளாதாரத்தை திறந்ததாகச் செய்வதில் உள்ள அபாயங்களை அறிந்திருப்பது அவசியம். அப்போதுதான் இந்த அபாயங்களைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க முடியும். நமது வளர்ச்சியை தடைப்படுத்தும் முக்கிய அம்சம் தரமான அடிப்படை வசதிகளின் குறைபாடுதான். பொதுவாக வளர்ச்சிக்கும் குறிப்பாக உலகச் சந்தைகளில் போட்டியிடுந் தன்மையை பெருக்கவும் தரமான அடிப்படை வசதிகளை உருவாக்கிப் பராமரிக்க வேண்டியது அவசியம். நம் நாட்டின் மின்சக்தித் துறையில் பயன்படும் அனைத்துக் கருவிகளும், உற்பத்திக்கு பயன்படுத்தும் தொகையில் 80 சதவீத அளவுக்கு மட்டுமே சக்தியை உற்பத்தி செய்கின்றன என்பதால் அவை கட்டுபடியாகாதவையாகவே உள்ளன. அதாவது சிலவகை நுகர்வோரிடம் மின்கட்டணம் மிகக் குறைவாகவே வசூலிக்கப்படுவதும், பெரிய அளவில் நடைபெறும் மின்திருட்டுமே இந்த நிலைக்கு காரணம். மின் உற்பத்தியிலும், மின்விநியோகத்திலும் போதுமான முதலீடுகள் இல்லாததும் கட்டுபடியாகத் தன்மைக்கு காரணங்கள். மின்துறையை சீரமைப்பது இன்றைய அத்யாவசியத் தேவை. 2000- ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் இத்தகைய சீரமைப்பு குறித்து விளக்குகிறது. இச்சட்டம் கட்டுபடியாகும் மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் என்றே சொல்லலாம். நமது சாலை, ரயில்வே வசதிகளில் போதுமானவை அல்ல. நமது துறைமுகங்கள் மணல்மூடி, நெரிசல் நிறைந்தனவாக உள்ளன. நமது விமான நிலையங்கள் பெருகிவரும் உள்நாட்டு, வெளிநாட்டு பயணி, சரக்கு போக்குவரத்துக்கு ஈடு கொடுக்க இயலாதவை. இவற்றை சரி செய்தாலன்றி நமது வளர்ச்சி வீதம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும். நகர்ப்புற அடிப்படை வசதித்துறையும் உதாசீனப் படுத்தப்பட்டதாகவே உள்ளது. நமது இலக்கான 7.8 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடைவதற்கு உரிய நடைமுறைகள் நாட்டின் பெரிய நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்யக்கூடியவை. பெருகிவரும் நகர கட்டமைப்பு வசதித் தேவைகளைச் சமாளிக்க எந்தப் பெரிய நகரமும் தயார் நிலையில் இல்லை. இந்தப் பிரச்சினைக்கு காரணம் நகர நிர்வாகம் போதுமான ஆற்றல் மேம்பாடு அடிப்படையில் அமையாமலும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமலும் இருப்பதேயாகும். அடிப்படை வசதி தொடர்பான பிரச்சினைகளுக்கு உயர்நிலை கவனம் செலுத்துவதற்கென பிரதமர் தமது தலைமையில் அடிப்படை வசதிக்கான அமைச்சரவைக் குழுவை ஏற்படுத்தியுள்ளார். இந்தக் குழு முக்கியத்துவம் மிகுந்த இத்துறையில், முடிவுகள் மேற்கொள்ளப்படுவதை விரைவுபடுத்தும். நாட்டின் அடிப்படை வசதிப் பற்றாக்குறையைப் போக்க நிதி மிகப்பெரிய அளவில் தேவைப்படும். இதனை சமாளிக்கத்தான் இத்துறையில் தனியார் துறையினரிட மிருந்து வரக்கூடிய முதலீடு குறித்து கற்பனைகளுக்கு இடம்கொடாமல், உண்மை நிலவரத்தை உணர்ந்து செயல் பட வேண்டும். தொலைதொடர்பு, விமான நிலையம், துறைமுகம் போன்றவற்றில் தனியார் முதலீடு உயருவது சாத்தியமே. சாலை அமைப்பிலும் இத்தகைய முதலீடுகள் இருக்கும். எனினும் இத்துறைகளிலும் பொதுத்துறையின் பெருமளவு ஆதரவு இருந்தே ஆகவேண்டும். பெருகிவரும் ஏற்றுமதிகள் உலகமயமாக்கலின் முக்கிய அம்சம் அது ஏற்றுமதி உயர்வுக்கு அளிக்கும் அபரிமிதமான சந்தர்ப்பங்களே ஆகும். தகவல் தொழில்நுட்பத்திலும் அது சார்ந்த சேவை களிலும் நமது ஏற்றுமதி பெருகியுள்ளதுபோல, உற்பத்தி பொருட்கள் துறைகள் உயரவில்லை. சிறந்த ஏற்றுமதியாளராகி, உலகமயமாக்கல் பலன்களைப் பெற முதலில் துடிப்பான அரசுக் கொள்கைகள் தேவை என்கின்றனர் அனுபவமிக்க ஏற்றுமதியாளர்கள். நமது உள்நாட்டு உற்பத்தி அமைப்பு உலகப் போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் அமையவேண்டும். சிறு தொழில்துறைக்கு என ஒதுக்கீட்டுப் பட்டியல் வைக்கும் நமது கொள்கை உலக சந்தை வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதாக உள்ளது. வேலைவாய்ப்புகளை பெருக்க இத்தகைய கொள்கை தேவை எனக் கருதப்பட்டது. ஆனால் ஏற்றுமதிகள் பெருகினால், உலக சந்தைகளைப் பயன்படுத்தினால், பெரிய அளவில் உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு பெருகும் என்பதை மறந்துவிடக்கூடாது. அடுத்தடுத்து வந்தம அரசுகள் ஏற்றுமதி திறனற்ற பொருட்களை அப்பட்டியலில் இருந்து நீக்கி வந்துள்ளன. இந்த நடைமுறை தொடர வேண்டியது அவசியம். உலகெங்கும் வளரும் நாடுகளில் வர்த்தக தாராளமயமாக்கல் நடைபெற்று வந்தாலும் இந்தியாவில் அதன் வேகம் குறைவுதான். நமது வரிகளை கிழக்காசிய நாடுகளில் உள்ளதுபோலக் குறைக்க அடுத்தடுத்து வரும் நிதியமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனையடைய நமது தற்போதைய வரி வீதங்கள் மூன்றில் ஒரு பங்காக குறைத்தாக வேண்டும். வரிக் குறைப்பு நடவடிக்கையிலும் நமது தகவல் தொழில் நுட்பத்துறை முன்னிலையில் உள்ளது. இதில் இடுபொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களின் மீதான வரி மிகவும் குறைவாகவே உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டுத்துறை சார்ந்த கொள்கைகளும் நமது போட்டியிடும் தன்மை மேம்பாட்டுக்கு அவசியம். சீனாவில் 50 சதவீத ஏற்றுமதிகள் அந்நிய நேரடி முதலீடு சார்ந்தவை என்பது நமக்கு பாடம் புகட்டுவதாக இருக்க வேண்டும். அந்நாடு சுமார் 6000 கோடி டாலர் நேரடி அன்னிய முதலீட்டைப் பெறுகிறது. ஆனால் இந்தியா பெறும் நேரடி அன்னிய முதலீடு வெறும் 500 கோடி டாலர்தான். நிதியமைச்சகத்தில் முதலீடு ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஆணையம் நம் நாட்டிற்கு தேவையான, ஏற்புடைய அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் வழிவகைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை கூறும். எதிர்வரும் அபாயங்கள் உலகமயமாக்கலும், பொருளாதாரத்தை திறந்ததாக மாற்றுவதும் ஆபத்து மிக்கவையா? என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆபத்துகள் என்ன எவ்வளவு என்று உணர்ந்து அவற்றைக் குறைக்க நாம் முயற்சி மேற்கொண்டாக வேண்டும். இன்றைய நிலையில் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சந்தை மற்றும் தொழில்நுட்ப ஆபத்துகள் உள்ளன. தொழில்நுட்பம் மாறுவது, மக்கள் விருப்பம் மாறுவது, புதிய மலிவான தொழில்நுட்பம் உருவாவது போன்றவை நமது ஏற்றுமதிகளை பாதிக்கும்தான். வர்த்தகம் உலகமயமாவதில் அபாயம் உண்டுதான். ஆனால் நன்மைகளின் அளவு கருதி அபாயத்தை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆபத்தை எதிர்கொண்டு பலனை அனுபவிக்கும் கூட்டணியில் நாம் இருக்க வேண்டுமா இல்லையா என நாம்தான் முடிவு செய்ய வேண்டும். உயர் அனுகூலங்கள் ஆபத்துடன் இணைந்தே உள்ளன. இந்தச் சூழலில் நிறுவனங்கள் வளைந்து கொடுக்கக்கூடியவையாக விரைந்து செயல்படக் கூடியவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிலைமையை சமாளித்து வெல்ல இயலும். எனவேதான் தொழிலாளர் சட்டங்களும் வளைந்து கொடுக்கக் கூடியனவானவாக இருக்க வேண்டும். திட்ட இடைக்கால மதிப்பீட்டின்போது இந்தப் பிரச்சினைகளை ஆராய மத்திய திட்டக்குழு திட்ட மிட்டுள்ளது. இந்தியாவின் பலம், பலவீனம், அதற்குக் கிட்டியுள்ள சந்தர்ப்பங்கள், அது எதிர்நோக்கும் அபாயங்கள் ஆகியன குறித்தும் திட்டக்குழு ஆராயும். இதன் விளைவாக நமது மேம்பாட்டு அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment