தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று 21 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் ஆரம்ப சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
தமிழர் தாயகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சில இடங்களில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் இந்த மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். ஆனால், தொடர்ந்து அந்த இடங்களில் வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாமையால் அந்த இடங்களில் ஆரம்ப நிகழ்வாக சுடரேற்றல் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஒன்றுகூடிய மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வுகளில் தீபமேற்றியுள்ளனர். இந்த ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் எத்தகைய இடர்கள் வந்தாலும் மாவீரர்களை நினைவுகூருவார்கள் என்று நம்பிய படையினர் இவற்றை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக புலனாய்வுத் துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் என்ன தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை தாங்கள் அனுஸ்டிப்போம் என்று சபதமெடுத்துள்ள தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நேற்றைய ஆரம்ப வணக்க நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியின் சில இடங்களிலும் தீவகம் மற்றும் வலிகாமத்தின் சில இடங்களிலும் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதேவேளை, தென்மராட்சியில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு சமீபமாக நேற்று மாலை ஒன்றுகூடிய சில இளைஞர்கள் மாவீரர்களின் நினைவாக மலர்தூவி வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற படையினர் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது பிள்ளைகளான வீர மறவர்களை நினைத்து வீடுகளில் தீபமேற்றி ஆரம்ப வணக்க நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணம் எங்கணும் நேற்று பெரும்பாலான மக்கள் தமது வீடுகளில் நேற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா படையினர் எத்தகைய தடைகளைப் போட்டாலும் தமிழர் தாயகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு தமிழ் மக்களின் நேற்றைய மாவீரர் தின தொடக்க நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா படையினரின் நடமாட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழுவதும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா படையினர் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். வீதிகளில் சென்ற இளைஞர், யுவதிகள் மறிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
- தாயகத்திலிருந்து செந்தமிழன்
Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 22, 2013
தாயகத்தில் மாவீரர் வாரம் ஆரம்பம் - படையினரின் கெடுபிடிகளும் அதிகரிப்பு
தாயக விடுதலைக்காக போராடி வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் ஒருசேர நினைவு கூருகின்ற தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று 21 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் ஆரம்ப சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
தமிழர் தாயகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட சில இடங்களில் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் இந்த மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை நடத்தியிருந்தனர். ஆனால், தொடர்ந்து அந்த இடங்களில் வணக்க நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாமையால் அந்த இடங்களில் ஆரம்ப நிகழ்வாக சுடரேற்றல் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திலும் ஒன்றுகூடிய மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வுகளில் தீபமேற்றியுள்ளனர். இந்த ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் எத்தகைய இடர்கள் வந்தாலும் மாவீரர்களை நினைவுகூருவார்கள் என்று நம்பிய படையினர் இவற்றை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக புலனாய்வுத் துறையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் என்ன தடைகள் வந்தாலும் மாவீரர் தினத்தை தாங்கள் அனுஸ்டிப்போம் என்று சபதமெடுத்துள்ள தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு நேற்றைய ஆரம்ப வணக்க நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியின் சில இடங்களிலும் தீவகம் மற்றும் வலிகாமத்தின் சில இடங்களிலும் இந்த ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதேவேளை, தென்மராட்சியில் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு சமீபமாக நேற்று மாலை ஒன்றுகூடிய சில இளைஞர்கள் மாவீரர்களின் நினைவாக மலர்தூவி வணக்கம் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற படையினர் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் நேற்றிரவு தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது பிள்ளைகளான வீர மறவர்களை நினைத்து வீடுகளில் தீபமேற்றி ஆரம்ப வணக்க நிகழ்வுகளைத் தொடங்கியுள்ளனர். இதேபோன்று வடக்கு கிழக்கு மாகாணம் எங்கணும் நேற்று பெரும்பாலான மக்கள் தமது வீடுகளில் நேற்று மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
சிறிலங்கா படையினர் எத்தகைய தடைகளைப் போட்டாலும் தமிழர் தாயகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு தமிழ் மக்களின் நேற்றைய மாவீரர் தின தொடக்க நிகழ்வு எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமிழீழ தேசிய மாவீரர் தினம் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியதைத் தொடர்ந்து தமிழர் தாயகம் எங்கும் சிறிலங்கா படையினரின் நடமாட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முழுவதும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சிறிலங்கா படையினர் சோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர். வீதிகளில் சென்ற இளைஞர், யுவதிகள் மறிக்கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர்கள் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
- தாயகத்திலிருந்து செந்தமிழன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment