Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, October 26, 2013

பொதுநலவாய மாநாட்டில் விக்கி பங்கேற்கக்கூடாது

பொதுநலவாய மாநாட்டில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது. அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment