Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, October 28, 2013

சனல் 4 க்கு அனுமதி மறுப்பு

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு தொடர்பான செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெருமளவில் வெளியிட்டு முடிக்கப்பட்டுள்ளன. எனினும் மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க கொழும்புக்கு வருவதற்கு விண்ணப்பித்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கமெரா கலைஞருக்கு மட்டுமே இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி தெரிவித்தது. ஊடகங்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்தின் டுவிட்டாரில் வழங்கியுள்ள தகவலுக்கு பதிலளித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோனத்தன் மில்லர் இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று வினவியுள்ளார். தமது விண்ணப்பம் இன்னும் நிராகரிக்கப்படவில்லை என்றாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி ஊடக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள ஒரே பிரித்தானிய ஊடக வலையமைப்பு தமது வலைமைப்பே என்று சனல் 4 தொலைக்காட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment