Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, October 26, 2013
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது; திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி , பதில் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, ஒரு தனி தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் கூறியிருப்பதாவது: 2009ம் ஆண்டு, இலங்கை உள்நாட்டு போர் உச்சகட்டத்தில் இருந்த நிலையில் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி, லட்சக்கணக்கான அப்பாவி இலங்கை தமிழர்களை கொன்று குவித்து ஒரு இன படுகொலையை இலங்கை அரசாங்கம் நடத்தியது. இதற்கு தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதில் இருந்தும் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டன. இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் 8.6.2011 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுநாள் வரை இந்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து 25.3.2013 அன்று பிரதமரை கேட்டுக் கொண்டேன். இது மட்டுமல்லாமல் 27.3.2013 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், இலங்கை நாட்டை ‘நட்பு நாடு‘ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும், தமிழர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்‘ குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்மீதும் மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காமன்வெல்த் நாடுகளின் முக்கியமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நிலைநிறுத்த முன்வராத இலங்கை நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழர்கள் மிகக் குறைவாக வசிக்கும் கனடா நாடே இது போன்றதொரு முடிவை எடுத்து பெயரளவில் ஒருவரை அனுப்பவுள்ள சூழ்நிலையில், எட்டு கோடி தமிழர்கள் வசிக்கும் இந்தியா இந்த மாநாட்டில் பெயரளவிலும் கலந்து கொள்ளாது என்று தீர்க்கமான முடிவை இன்னமும் எடுக்காதது துரதிர்ஷ்டவசமானது. தமிழர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும், பெயரளவிற்கு கூட ஒருவரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது; இதுபோன்ற நடவடிக்கை இலங்கை தமிழர்கள் மீது நியாயமான அணுகுமுறையை இலங்கை அரசு எடுக்க வழிவகுக்கும் என்றும் கோடிட்டுக்காட்டி ஒரு விரிவான கடிதத்தை பிரதமருக்கு 17.10.2013 அன்று எழுதியுள்ளேன். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்களின் உணர்வுகளை தெரிவிக்கும் வகையிலும், கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்றார். “தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை நாட்டில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநா ட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். பெயரளவிற்குக்கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநா ட்டில் கலந்து கொள்ளக் கூடாது. இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் இந்திய பேரரசை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’’ என்று தீர்மானத்தை முன்மொழிந்து ஜெயலலிதா பேசினார். இதையடுத்து தனபால் (பேரவை தலைவர்), பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக), மு.க.ஸ்டாலின் (திமுக), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு), கோபிநாத் (காங்கிரஸ்), ஜவஹருல்லா (மமக), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), சரத்குமார் (சமக), கதிரவன் (பார்வர்டு பிளாக்), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), செ.கு. தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து பேசினர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment