Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, October 25, 2013

வைகோ ஏமாற்றம்; ராமதாஸ் வரவேற்பு

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் உரையையும், தீர்மானத்தையும் மேலோட்டமாகக் கவனித் தால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் நடவடிக்கை போன்ற தோற்றத்தை தருவதால், அதனை வரவேற்கத் தோன்றும். அந்த தீர்மானத்தில் ஒன்றுபட்ட இலங்கைக்குள், சிங்களவர்களோடு தமிழர்கள் சமமாக வாழ, இலங்கை அரசு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைதான் இந்த தீர்மானத்தில் அடங்கி இருக்கிறது. இது, புண்ணுக்குப் புனுகு பூசுகிற வேலை மட்டும் அல்ல, இனக்கொலைக் குற்றத்திற்கு, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை என்ற கோரிக்கையை, நீர்த்துப் போக வைக்கின்ற செயல் ஆகும். பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரி க்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மன நிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது. வரவேற்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை பாமக வரவேற்கிறது. அனைவரின் உணர்வை மதித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது மனதிற்கு ஓரளவு நிறைவை அளிக்கிறது. தீர்மானத்தை நிறைவேற்றியதுடன் தமிழக அரசு நின்றுவிடக்கூடாது. தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, தீர்மானத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்த வேண்டும். அப்போது தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு ஓரளவாவது பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment