Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 26, 2014

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது – கோதபாய

எந்த காரணத்திற்காகவும் வடக்கு படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளா கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சில நாடுகள் இலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியான முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போதும் மேற்குலக நாடுகள் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன், இந்தியாவிற்கு விஜயம் செய்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளத் தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், நியூயோர்க்கில் கடமையாற்றி வரும் ஐக்கிய நாடுக்ள அமைப்பு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் இராணுவத்தை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் உயிரைப் பணயம் வைத்து போராடிய படைவீரர்களை எந்தவொரு புத்திசாதூரியமான அரசாங்கமும் வீட்டுக்கு அனுப்பி வைக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் எண்ணிக்கை குறைப்பானது பாரியளவில் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை உருவாக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். படைவீரர்களை வீட்டுக்கு அனுப்பி அதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பி;ன்னரான நல்லிணக்கப் பணிகளில் படைவீரர்கள் சிறந்த முறையில் பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதனை தடுக்கும் நோக்கில் வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment