Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 27, 2014
வடமாகாணம் வந்த ஜெர்மானிய தூதருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகள் பலவழிகளிலும் உதவிகள் புரிந்து வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அந்த நாடுகளைக் குறைகூறிவருவதாக இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மனியின் நிதி உதவியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்களையும் அபிவிருத்திப் பணிகளையும் பார்வையிடுவதற்காக இரண்டு நாள் விஜயமாக இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட் வடபகுதிக்கு விஜயம் செய்தபோது, யாழ்ப்பாணத்தில் தன்னைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மன் அரசின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டு அவற்றில் சிலவற்றை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அவர் வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
------------------------------------------------------------------------------------------
இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற உதவிகளைப் பலவிதங்களிலும் அரசாங்கம் கட்டுப்படுத்தி வருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளைப் போன்று ஏனைய பிரதேசங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகளிடம் அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------------
ஜெர்மன் தூதுவருடனான சந்திப்பின்போது அபிவிருத்தி விடயங்கள் பற்றியே பேசப்பட்டதாகவும், எனினும் அரசியல் ரீதியாக வடமாகாண சபை எந்த அளவில் செயற்பட்டு வருகின்றது என்பதை அவர் கேட்டறிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
வடபகுதிக்கான விஜயம் குறித்து செய்தியாளர்களிடம் விபரம் தெரிவித்த ஜெர்மன் தூதுவர் ஜோர்கன் மோஹாட், இலங்கையில் ஜெர்மனியின் பொருளாதார அபிவிருத்திப்பணிகள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
------------------------------------------------------------------------------------------
சமூக அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் பாடசாலைகளுக்கான கட்டிட வசதிகள் என்பவற்றை நாங்கள் ஜெர்மன் நிறுவனமாகிய GIZ நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 60 வருடங்களாக இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி அபிவிருத்திப் பணிகளில் ஜெர்மனி உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment