Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 18, 2014

இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ இலங்கையின் நட்பு நாடுகளினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. ------------------------------------------------------------------------------------------ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. ------------------------------------------------------------------------------------------ இந்த தீர்மானத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, ------------------------------------------------------------------------------------------ இவ்வாறான தீர்மானம் சமர்ப்பிக்கப்பட உள்ளமை பற்றி தமக்கு தெரியும் எனவும், அது இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------ நட்பு நாடுகளினால் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கு அரசாங்கத்தின் தொடர்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ------------------------------------------------------------------------------------------ ஏற்கனவே, சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், இந்தோனேஷிய போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு உயர் மட்ட இலங்கை ராஜதந்திரிகள் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment