Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, February 18, 2014

வட கொரியக் கொடுமைகள்: ஐ.நா அறிக்கை வருகிறது

வட கொரியப் பிரஜைகள் அவர்களின் அரசினால் படும் கொடுமையான , வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சித்ரவதைகளைப் பற்றியது என்று கூறப்படும் நிலைமகள் பற்றிய ஒரு அறிக்கையை ஐ.நா மன்றம் இன்று வெளியிடவிருக்கிறது. ------------------------------------------------------------------------------------------------- வட கொரியாவில் நிலவும் நிலைமைகள் குறித்து ஓராண்டு காலமாக விசாரணை ஒன்றை நடத்திய வல்லுநர்கள் , தாங்கள் அங்கு பரவலான மற்றும் அமைப்பு ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் நடப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும், இவை மிகவும் பாரிய அளவில் மோசமானவை என்றும், இவை குறித்து உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறியிருக்கின்றனர். ------------------------------------------------------------------------------------------------- சிறை முகாமில் இருந்த ஒரு பெண் தனது குழந்தையைத் தானே தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டதாகச் சாட்சியம் கூறியிருக்கிறார். குழந்தைகள் பிறந்ததிலிருந்தே சிறைவைக்கப்பட்டு, பட்டினி போடப்பட்டதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. ------------------------------------------------------------------------------------------------- மக்களை அச்சுறுத்தலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது, ஒரு தேசிய அளவிலான கொள்கையாக இருப்பதைக் காட்டும் ஆதாரங்கள் இருப்பதை இந்த அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment