Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, January 30, 2014
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்:-
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:-மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகpன்றது.
இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்டுப் பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இதேவேளை பதாதைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்களை அகற்றும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளையும் அண்மித்து விசேட பொலிஸ் நடவடிக்கைப் பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெரும்பாலான முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை என்று ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவை:-
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தலை நடத்த 1200 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைக்கப் போவதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29.01.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ´இம்முறை மாகாண சபைத் தேர்தலை ஒரு சனிக்கிழமையில் நடத்த தீர்மானித்துள்ளோம். 14.7 மில்லியன் வாக்காளர்கள் நாடு முழுவதும் உள்ளனர். அதில் மேல், தென் மாகாண தேர்தலில் கிட்டத்தட்ட 60 லட்சம் பேர்வரை இம்முறை வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல்கள் செயலகத்தால் எந்த வேட்பாளரினதும் வேட்பு மனு அநாவசியமாக நிராகரிக்கப்பட மாட்டாது. வேட்பு மனு முறையாக பூர்த்தி செய்யப்படாதிருப்பின் மாத்திரமே நிராகரிக்கப்படும்.
கொழும்பில் 1400 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் கம்பஹாவில் 1315 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் களுத்துறையில் 615 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் காலியில் 704 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் ஹம்பாந்தோட்டையில் 405 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் மாத்தறையில் 440 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் 7 - 17 வரையான உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு 55 ஆயிரம் உத்தியோகத்தர்களை கடமைக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம்.
கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாக்குப் பெட்டிகள் இம்முறையும் பயன்படுத்தப்படும்.
வேட்பு மனுவில் போலி பெயர்கள் இடம்பெறாதிருக்க தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழை சமர்பிப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது´ என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் காலம் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். முன்னர் விண்ணப்பங்களை ஏற்பதற்கான கடைசி நாள் பெப்ரவரி 7ஆம் திகதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த மாகாண சபை தேர்தலில் பிளாஸ்ரிக் வாக்குப் பெட்டிகளையும் சில இடங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
'மரத்தாலான வாக்குப் பெட்டிகள் செலவு கூடியவை. இதனால் மீள்சூழற்சிக்குள்ளான பிளாஸ்ரிக் கழிவை பயன்படுத்தி செய்யப்பட்ட பெட்டிகளை பயன்படுத்துவோம். இது செலவு குறைந்தாக இருக்கும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment