Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, January 30, 2014
பன்குவியில் இடம் பெறும் இனக் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஜேர்மன் முனைய வேண்டும்-
மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலை நகரான பன்குவியில் (Banqui) இடம் பெறும் இனக்கலவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜேர்மன் நாடும் அங்குள்ள துருப்பினரைப் பலப்படுத்தும் வகையில் நேரடியாகச் செயற்பட வேண்டுமென, ஜேர்மனின் பெண் பாதுகாப்புச் செயலர், உர்சுலா (Ursula) கூறியுள்ளார்.
தினமும் இடம்பெறும் கொலைகளையும், வன்முறைகளையும் தொடர்ந்து சகித்த வண்ணம் இருப்பது தவறு என்றும், மனிதாபிமான அடிப்படையில் அவற்றைத் தடுக்க நேரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய ஆபிரிக்காவில் கடமையிலிருக்கும் பிரெஞ்சுப் படையினருக்குப் பக்கபலமாக ஜேர்மன் துருப்பினர் தரையிறக்கப்பட வேண்டுமென்கிறார்.
ஏற்கனவே நூறு ஜேர்மன் துருப்பினர் மாலி (Mali) தேசப்படையினருக்குப் பயிற்சி அளிக்குமுகமாக அங்கு செயலில் அமர்த்தப்பட்டுள்ளனரென்றும், அவர்களைப் பலப்படுத்த வேண்டிய தேவை பற்றித் தற்போது பேசப்படுவதாகவும் கூறினார்.
ஜரோப்பிய ஒன்றியம் அங்கு வருகின்ற February மாதத்தில் 600 துருப்பினரை அனுப்ப இருப்பதாகவும், பிரெஞ்சு (French) அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் ஜேர்மன் துருப்பினரையும் அங்கு அனுப்புவதற்கான நிலையை ஏற்படுத்துதல் அவசியமென்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் உலக மகாயுத்த முடிவிற்குப் பின்னான காலப்பகுதிகளில், ஜேர்மன் அரசு உலகில் எங்கும் எக்காரணம் கொண்டும் துருப்பினரைப் போருக்குப் பயன்படுத்தக் கூடாதெனும் அமுலில் இருந்த சட்டம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் சக்தியிழக்கச் செய்யப்பட்டிருந்த போதிலும், ஜேர்மன் போரில் கலந்துகொள்ளாத கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தமையைக் கருத்திற் கொண்ட ஒரு சில ஆளும் கட்சிப் பாராளுமன்ற அங்கத்தவர்களும், தற்போதைய கூட்டாட்சியில் இடம் பெறும் SPD கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்
பலம் வாய்ந்த ஜரோப்பாவைக் கட்டியெழுப்பப் படையினரின் கூட்டு உழைப்பு முக்கியமெனத் தான் கருதுவதாகப் பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். ஜேர்மன் படையினர் தரை இறக்கப் போவதில்லை என ஏற்கனவே கூறிய முதல் மந்திரி அங்கலா மேக்கல் மெளனமாக உள்ளார். அம்மெளனத்தின் அதிகார அர்த்தம் புரியவில்லையெனப் பத்திரிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி-
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment