Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, November 11, 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடிய மக்களின் வேண்டுகோள்!

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடிய அவலத்தை தடுத்துநிறுத்த முடியவில்லை அனைத்து தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாட்டு தமிழர்களும் உலகத்தமிழர்களும் ஒன்று பட்டு போரடவேண்டும்.. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது தஞ்சையில் முத்துக்குமார் திடலில் பாலச்சந்திரன் அரங்கதில் காலை தொடக்கம் மாலை வரை இந்த இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது இதில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டுள்ளது உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் அந்த பிரகடனத்தை வாசித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடியுள்ள தமிழர்களின் வேண்டுகோள்.. தொன்மைச்சிறப்பும் வரலாற்று பெருமையும் மிக்க தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும் அறைகூவலையும் எதிர்நோக்கியுள்ளது இலங்கையில் பூர்வீகக்குடிகளான ஈழத்தமிழர்களைச் சிங்களவெறியர்கள் திட்டமிட்ட இனஅழிப்பு செய்து வருகின்றார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன தமிழர்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் அழிக்கப்படுகின்றன.அவை சிங்களவரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்படுகின்றது தமிழர் தாயகமண்ணில் சிங்களக்குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு மனிதஉரிமை மீறல்கள் மீறப்படுகின்றன. இந்தகொடுமைகளும் அநீதிகளும் எதிராக ஈழத்தமிழர்கள் 30ஆண்டுகாலம் அறவளியிலும் 30ஆண்டுகாலம் மறவளியிலும் போராடினார்கள் கடந்த 60 ஆண்டுகாலத்தில் சுமார் 3இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்ட்டார்கள். 10இலட்சத்திற்கு மேலான தமிழர்கள் சொந்த மண்ணில் வாழவழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலகநாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.உள்ளநாட்டில் 5இலட்சம் தமிழர்கள் சொந்த வீடுகள் இருந்தும் ஊர்களிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தங்கள் தாயகமண்ணிலேயே ஏதிரிகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இளம் பெண்கள் சிங்கள படையினரால் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் பட்டுள்ளார்கள்.தமிழர்கள் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன.சிங்களகுடியேற்றங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் நிலமை திட்டமிட்டு உருவாக்கப்ட்டுள்து. சுருங்கக் கூறின் ஈழத்தமிழர்களின் ஒரு தனித்தேசம் என்தையும் அவர்கள் இறைமை உள்ள மக்கள் என்பதையும் அவர்களுக்கு சுய நிர்ணயஉரிமைஉண்டு என்பதையும் அடைளாயம் தெரியாமல் அழிக்கவேண்டும் என்பதே சிங்களஅரசின் நோக்கம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் ஈழத்தமிழர்களின் மொழி,பண்பாடு,வரலாறு,வாழ்விடம்,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை அடியோடு துடைத்து அழிப்பதற்காக கட்மைப்பு சார்இனஅழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழினம் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் தனித்துவம் பெற்ற தேசமாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு இன்று ஏற்பட்ட கதி நாளை மலேசியாவிலும்,தென்னாபிரிக்காவிலும்,பிற நாடுகளிலும் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் ஏற்படலாம்.எனவே தமிழகத்தில் ஏழுகோடிக்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தும் எமக்கு மிக அண்மையில் உள்ள இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடிய அவலத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை அனை;து தமிழர்களுக்கும் அரணாகவும் அவர்களின் வாழ்;வுரிமையை பாதுகாக்கவும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் தொடர்ந்தும் ஒன்று பட்டு போராடவும் கை கோத்து நிற்க வேண்டும் இந்தியாவிலும் உலகநாடுகளிலும் உள்ள ஜனநாயக சக்திகள் சமத்துவ சிந்தனையாளர்கள் மனிதஉரிமை ஆர்வலர்கள் ஆகியோரை நம்முடன் இணைந்து குரல்கொடுக்க அவர்கள் அனைவரையும் நமக்கு ஆதரவாக ஒன்று திரட்டியாக வேண்டும். உலகத்திமிழர்கள் தமது கடமைப்பொறுப்பபுக்களையும் எதிர்காதலத்தில் எதிர்கொள்ள இருக்கின்ற அபாயங்களையும் உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும் என முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திறப்பு நிகழ்ச்சியில் கூடியுள்ள தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் இதுவாகும் என்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற கொள்கைப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment