Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, December 31, 2013
என்னைப்போல யாரும் கஷ்டப்படக் கூடாது! பூரண மதுவிலக்கு கோரி 4ம் வகுப்பு மாணவி உண்ணாவிரதம்!
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 4ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
மதுரையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி ஜோதிமணி. இவர், தனது தந்தை மோகன் ராஜ் உடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
உண்ணாவிரதம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் மாணவி ஜோதிமணி கூறியதாவது,
"எனது அப்பா குடிபழக்கத்துக்கு ஆளானார். அவர் அந்த பழக்கத்திற்கு ஆளானபோது எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. எனக்கு ஸ்கூல் பீசு கூட கட்டமுடியல. ஸ்கூல் படிப்ப நிறுத்தலாமா என்ற நிலைமைக் கூட வந்தது.
இப்ப எங்க அப்பா நல்லாயிட்டாரு. எங்க அப்பா குடிக்கிறதில்ல. எங்க குடும்பத்தைப் போல வேறு எந்த குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்னைப்போல எந்த பசங்களும், யாரும் கஷ்டப்படக் கூடாது. எந்த பசங்களும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அதுக்காகத்தான் இந்த உண்ணாவிரதம்.
எங்க அப்பா போல மற்ற அப்பாக்களும் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு என்னைப் போன்ற குழந்தைகளை நன்றாக பாத்துக்கனும். தமிழக அரசும் தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்" என்றார்.
மோகன் ராஜ் கூறுகையில், நான் குடிப்பழகத்தில் இருந்து மீண்டுள்ளேன். என்னைப்போல அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீளவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மதுவிற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது, அரசே குடி குடி என்று சொல்வதைப்போல இருக்கிறது, குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழக அரசும் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறும் தமிழக முதல் அமைச்சர், இந்த மதுவிலக்கையும் அமுல்படுத்தவேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment