Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 31, 2013
பர்மாவில் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: 5 பேர் விடுதலை
பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மார் அரசாங்கம் ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது.
நாட்டின் கடைசி அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்துவிடுவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்துவரும் அதிபர் தெயின் செய்ன், இந்த ஆண்டின் இறுதிக்குள் எல்லா அரசியல்கைதிகளையும் விடுதலை செய்துவிடுவதாக உறுதியளித்திருந்தார்.
ஐம்பது பேர்வரையில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் அடுத்துவரும் நாட்களில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் யார் விடுதலைக்குள் அடங்குவார்கள் என்ற பட்டியலை அரசாங்கம் அறிவிக்கவில்லை.
ஆனால், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்களும் அரசியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளவர்களும் இந்த பொதுமன்னிப்பு நடைமுறைக்குள் அடங்குவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இராணுவ பின்புலத்தைக் கொண்ட அரசாங்கத்தால் 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த பொதுமன்னிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment