Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, December 31, 2013
வடக்கில் மீண்டும் சீனி தனியார் கம்பனி99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்
கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஏக்கர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஏக்கர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது.
கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment