Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, December 30, 2013
மன்னார் புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தோண்டும் நடவடிக்கை நேற்று இரண்டாவது தடவையாகவும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்றாம் ஆம் திகதி வரையில் புதை குழியைத் தோண்டும் பணி இடம் பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் மன்னார் நீதிவான் மற்றும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் குறித்த இடத்தைத் தோண்டும் பணிகள் கடந்த 22 ஆம் திகதி வரை நடைபெற்றன.
அங்கு 11 மனிதச் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பிலிருந்து விசேட நிபுணர் குழுவினர் வருகை தந்து, அவர்கள் முன்னிலையில் குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்காக டிசெம்பர் 28ஆம் திகதி வரை அகழும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
பின்னர் கொழும்பிலிருந்து வந்த விசேட நிபுணர் குழுவினர் முன்னிலையில் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமாகின.
மன்னார் நீதிவான், கொழும்பிலிருந்து சென்ற விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் நிலையைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்த மனிதப் புதைகுழி நேற்றுமுன் தினம் தோண்டப்பட்டபோது ஏற்கனவே மீட்கப்பட்ட 11 மனித எச்சங்களின் முழுமையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
அத்துடன் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மீண்டும் குறித்த புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று திடீரென்று தோண்டும் பணி இரண்டாவது தடவையாக நிறுத்தப்பட்டது.
புதுவருடத்துக்காகவே புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றும், எதிர்வரும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, அங்கு தோண்டத் தோண்ட மனித எச்சங்கள் காணப்படுவதால் அது மாபெரும் மனிதப் புதைகுழி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment