Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 10, 2014

3 பேரை கொன்ற விலங்கு எது? கும்கி யானை உதவியுடன் தேடும் பணி தீவிரம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்ட வனபப்குதியில் கடந்த 5 நாள்களில் 3 பேரைக் அடித்துக்கொன்ற ஆள்கொல்லி வனவிலங்கைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணியில் 4 கும்கி யானைகளுடன், அதிரடிப்படையினரும், வனத் துறையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி அருகே உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா, அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்த சின்னப்பன், குந்தசப்பை பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய மூன்று பேரையும் கடந்த 5 நாள்களில் அடையாளம் தெரியாத ஒரு வனவிலங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவ்விலங்கை நேரில் பார்த்தவர்களில் சிலர் சிறுத்தை என்றும், கால் தடங்களை வைத்து பார்த்ததில் அது புலியெனவும் கூறி வருகின்றனர். இந்நிலையில், அவ்விலங்கை உயிருடன் பிடிக்கவோ, சுட்டுக் கொல்லவோ உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து ஜான் என்ற கும்கி யானை வியாழக்கிழமை காலை பட்டர்கம்பை பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் யானைகள் நலவாழ்வு முகாமிலிருந்து சாடிவயல் பகுதியைச் சேர்ந்த பாரி என்ற கும்கியும், முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வாசிம், விஜய் ஆகிய கும்கி யானைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாத வனவிலங்கைப் பிடிப்பதற்காக, பட்டர்கம்பை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிலிருந்து தலா 11 பேர் கொண்ட மூன்று வேட்டைத்தடுப்பு குழுக்கள் அந்த விலங்கை தேடும் வேட்டையில் ஈடுபடுபட்டுள்ளனர். மேலும், உதகை தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி, வடக்கு வனக்கோட்ட அலுவலர் சுகிர்தராஜ் கோயில்பிள்ளை மற்றும் உதவி வனப் பாதுகாவலர் சிவமணி ஆகியோர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவிலுள்ள அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, சுற்றுச் சூழலியலாளர் நைஜில் ஒட்டேர் தலைமையில், பயிற்சி பெற்ற 6 நாய்களும் கும்கி யானைகளுடன் இணைந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. இக்குழுக்களில் அதிரடிப்படை வீரர்கள், வனத் துறையினருடன் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், திருமுருகன், விஜயராகவன், கார்த்திக், ராஜேஷ்குமார், பூன் ஆல்வின் ஆகியோருடன், கர்நாடகத்திலிருந்து வந்துள்ள பிரபல கால்நடை மருத்துவர் டாக்டர் அருண்ஷாவும் ஈடுபட்டுள்ளார். இப்பணிகளை தமிழக தலைமை வன உயிரினப் பாதுகாவலர் லட்சுமி நாராயணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவை மண்டல வனப் பாதுகாவலர் கந்தசாமி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோரும், டபிள்யு.டபிள்யு.எஃப். அமைப்பின் சார்பில் பிரபல வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய், மோகன்ராஜ், சாதிக், இவர்களுடன் வனவிலங்கு உயிரியல் துறை மாணவர்களும், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment