Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 10, 2014

வடக்கிலும் தமிழை இரண்டாம் மொழியாக்க முயற்சி

தமிழர்களின் ஆட்சி மலர்ந்துள்ளதாகக் கூறப்படுகின்ற வடக்கின் ஆட்சி அதிகாரங்கள் உருவாக்கப்படுகின்ற வடக்கு மாகாண சபையில் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இங்கு ஆட்சி மொழி ஆங்கிலமாக இருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு மாகாண சபையில் ஆங்கில மொழிக்கு முதன்மையளிக்கப்பட்டிருக்கின்றது. இங்குள்ள கட்டடங்களில் இடங்களையும் முக்கிய பதவியில் உள்ளோரையும் அடையாளப்படுத்தும் இடங்கள் “ஆங்கில மொழியால் மட்டும்” அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் தமிழர் தாயகத்தை விட்டுச் சென்று 66 வருடங்களாகின்றன. ஆனால், இன்றுவரை அவர்களின் மொழி தமிழர் தாயகத்தில் நிலைத்திருக்கின்றதென்றால் அது அவர்களின் மொழிச் சிறப்பையும் மொழி வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றது. இந்த மொழியைப் போன்று எமது தமிழ் மொழியையும் வளர்ப்பதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டவேளை மாகாண சபை கட்டடங்களை அடையாளப்படுத்துவதற்கு தனியே ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டுள்ளமையை முதுகெலும்புள்ள தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக ஆங்கில மொழி தேவையில்லை என்பது அர்த்தம் அல்ல.வடக்கு மாகாண சபையில் தமிழ் மொழிக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் மொழிக்கு முதன்மை கொடுக்காத வடக்கு மாகாண சபை எப்படி தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு முதன்மை கொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தன்னை ஒரு தமிழ்ப் பித்தர் என்றும் சைவப் பழம் என்றும் காட்டிக்கொண்டிருக்கின்ற முதலமைச்சரோ, இவரின் நான்கு அமைச்சர்களோ, உறுப்பினர்களோ இந்த விடயங்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றமையும் வியப்பாகவுள்ளது. முதலமைச்சராயினும் அமைச்சர்களாயினும் உறுப்பினர்களாயினும் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஏனையோரைத் திருத்த முற்பட வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment