Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, January 10, 2014
புதியநீதிபதிகள் நியமன தடை ஜனவரி 21 தேதிவரை நீடிப்பு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனப்பிரச்சினை தொடர்பில், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் 12 பேர் அடங்கிய நீதிபதிகளின் பட்டியலின் மீது நேற்று புதன்கிழமையன்று விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையினை எதிர்வரும் ஜனவரி 21ஆம் நாள்வரை நீட்டித்து நீதிபதிகள் வி தனபாலன் மற்றும் கே கே சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று வியாழன் உத்திரவிட்டது.
பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பட்டியல் ஒரு சில தரப்பாருக்கு ஆதரவாக இருக்கிறது, வேறு சில பிரிவினர் ஒதுக்கப்பட்டிருக்கின்றனர், இது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டுமென வலியுறுத்தி வழக்கறிஞர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.
அப்பட்டியல் திரும்பப்பெறப்படவேண்டும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுநெறிகளின்படி அது திருத்தி அமைக்கப்படவேண்டும் எனக் கோரி மூத்த வழக்கறிஞர் காந்தி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இரண்டாவது நாளாக வியாழனன்றும் தொடர்ந்து நடந்தது.
மேலும் மூன்று வழக்கறிஞர்கள் பட்டியலுக்கெதிராக மனு தாக்கல் செய்திருக்கின்றனர். ஒருவர் ஆதரித்து மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்நிலையிலேயே இடைக்காலத் தடையை நீட்டித்தும் வழக்கு விசாரணையினை ஒத்திவைத்தும் உத்திரவிடப்பட்டிருக்கிறது.
அதேசமயம், இது போல உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும், collegium of judges எனப்படும் நீதிபதிகள் குழு ஒன்று, நீதிபதிகளாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை பரிசீலித்து இறுதியாக நியமனத்துக்குப் பரிந்துரைக்கும் நடைமுறை சரியாக இயங்கவில்லை என்று கூறப்படுவதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்கிறார் இந்திய சட்டக்கமிஷனின் முன்னாள் தலைவரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியுமான, ஏ.ஆர்.லக்ஷ்மணன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment