Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, January 7, 2014
எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” நூல்வெளியீடு எதிர்வரும் பங்குனியில் கனடாவில்…
அண்மையில் கனடா TSAR வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட “எங்கள் மொழிபெயர்ப்புலகத்தில்” என்னும் மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் பங்குனி மாதம் கனடாவில் நிகழவுள்ளது. இலங்கை இந்தியா சிங்கப்புர் மலேசியா மற்றும் புலம் பெயர்ந்த தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய இத் தொகுப்பு கடந்த மூன்று தசாப்த காலக்கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. தமிழ் கவிதைகளுக்குச் சமாந்தரமாக அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களையும் கொண்டதாக இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர்கள் மற்றும் கவிதைகளை வழங்கிய கவிஞர்கள் பற்றிய, அவர்களின் படங்களுடன் கூடிய சிறிய அறிமுகக்குறிப்பும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அங்கத்தவர்களினதும் ஆதரவாளர்களினதும் முயற்சியினாலும் ஒன்ராறியோ திரிலியம் பவுண்டேசனின் நிதியுதவியினாலும் திறமையான மொழிபெயர்பாளர்களின் கடும் உழைப்பினானாலும் திரு செல்வா கனகநாயகம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இத்தொகுப்பு உருவானதாக இத் தொகுப்பின் நன்றியுரையில் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் செயலாளர் திரு முத்துலிங்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment