Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Tuesday, January 7, 2014
வங்கதேசத்தில் புதிய அரசாங்கம் அமையும்- இழுபறியும் தொடரும்
பிரதமர் ஷேக் ஹஸீனா, பிஎன்பி தலைவி காலிதா ஸியா (வலது பக்கம் இருப்பவர்) ஆகிய இரண்டு பெரிய தலைவர்களின் முடிவிலேயே மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்: ட்ரான்ஸ்பேரஸி இண்டர்நேஷனல்
வங்கதேசத்தில் நடந்துமுடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வென்றுள்ளது.
எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், வன்முறைகளுக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலின் முடிவு சந்தேகமின்றி எதிர்பார்க்கப்பட்டது தான்.மொத்தமாக உள்ள 300 நாடாளுமன்ற ஆசனங்களின் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியே இருக்கவில்லை. அதன்படி அவாமி லீக் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நாள் நடந்த வன்முறைகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர். இன்று திங்கட்கிழமை மேலும் மூவர் கொல்லப்பட்டனர்.
20- வீதத்துக்கும் சற்று அதிகளவுதான் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 2008-ம் ஆண்டுத் தேர்தலில் வாக்குப்பதிவு வீதம் 70 வரை இருந்தது.
வன்முறைகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வரவில்லை என்று அவதானிகள் கூறுகின்றனர்.
தேர்தல் முடிவுகள் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிரணி- வங்கதேச தேசியவாதக் கட்சியான பிஎன்பி கோரியுள்ளது. ஆனால், இந்தத் தேர்தல் வெற்றி நியாயமானது, சட்டப்படி செல்லும் என்கிறார் பிரதமர் ஷேக் ஹஸீனா.'மக்கள் ஜனநாயக விழுமியங்களை மதித்து, பயங்கரவாதத்தை புறந்தள்ளி வாக்களித்துள்ளார்கள். நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம்' என்று செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் ஷேக் ஹஸீனா தெரிவித்தார்.
ஆனால் இதனை ஒரு தேர்தலாகவே கருதமுடியாது என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் என்ற செயற்பாட்டு அமைப்பு கூறுகிறது.
'இதனை ஒரு தேர்தல் என்று கூறவே எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இரண்டு தரப்பினருக்கும் இடையிலான ஒரு அதிகாரத்துக்கான விளையாட்டாகத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். மிகவும் மோசமான சகித்துக்கொள்ள முடியாத, வன்முறைத்தனமான ஒரு அரசியல் விளையாட்டாக இது இருக்கிறது' என்றார் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வங்கதேச இயக்குநர் இஃப்திகார் ஸமான்.
'இந்தத் தேர்தலை முன்னிட்டு ஏற்பட்ட அரசியல் முடக்கநிலைமையை பார்க்கின்றபோது, இந்தத் தேர்தல் எந்தவகையிலும் பிரச்சனைக்குத் தீர்வுகாணவில்லை என்றே தெரிகிறது. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தை அமைத்து, புதிய நாடாளுமன்றத்தையும் அமைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்குச் சென்றாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் அந்தப் புதிய அரசாங்கத்தையும் பதவிவிலகக் கோரி போராட்டங்களை நடத்தத்தான் போகின்றனர்' என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வங்கதேச இயக்குநர் கூறினார்.
இரண்டு பெரிய தலைவர்களின் போட்டியில் வங்கதேச மக்களின் தலைவிதி பணையம் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment