ஃபுகுஷிமா அணு மின் நிலயைத்துக்கு அருகில் முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகள் எண்ணிக்கை குறைவு
ஜப்பான் அந்நாட்டின் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகம் பிப்ரவரி 4-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அந்நாட்டின் ஃபுகுஷிமாவிலுள்ள முதலாவது அணு மின் நிலையத்தில் அணு கசிவு விபத்து நிகழ்ந்த பின், அந்நிலையத்துக்கு தெற்குப் பகுதி கடற்கரையில் இருக்கும் சங்கு உள்ளிட்ட முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பிரிட்டனின் Scientific Reports எனும் இதழில், இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2013ஆம் ஆண்டு ஜுன் திங்கள் வரை, ஜப்பான் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அந்த மின் நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலான கடற்பரப்பில் வாழும் முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், 2013ஆம் ஆண்டு மே, ஜுன் ஆகிய இரு திங்களில், அந்த மின் நிலையத்தின் தென் மற்றும் வட பகுதியிலுள்ள 7 கடற்பரப்புகளில், முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கை தொடர்பாகவும் ஆய்வுக் குழு ஆராய்ச்சி மேற்கொண்டது. ஆய்வு முடிவின்படி, ஃபுகுஷிமாவிலுள்ள முதலாவது அணு மின் நிலையத்திலிருந்து குறைவதுடன், முதுகெலும்பற்ற கடல்வாழ் விலங்குகளின் வகை மற்றும் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.
அணுக் கசிவு விபத்தில் கதிர்வீச்சுப் பொருட்கள் மற்றும் வேதியியல் பொருட்களின் வெளியேற்றம் தான் இதற்கு காரணமா என்பது, உறுதி செய்யப்பட்டவில்லை. இது குறித்து, அந்த ஆய்வுக் குழு அடுத்த கட்டத்தில் ஆய்வுப் பணியாக மாறும் என்று தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment