Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, February 19, 2014
ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் அளித்தவர்களை இலங்கை படைத்தரப்பு அச்சுறுத்துகிறது-
யாழ்.மாவட்டத்தில் மஹிந்தவின் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களை இலங்கை படைத்தரப்பு அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
---------------------------------------------------------------------------------------------
அத்தகைய வாக்குமூலங்களை அளித்த குடும்பங்களது வீடுகளிற்கு சிவிலுடையில் சென்று வாயை மூடிக் கொண்டிருக்குமாறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
உங்கள் பிள்ளைகளோ கணவர்மாரோ உயிரோடில்லை. அர்களது கணக்குகள் முடிந்துவிட்டது. இனியும் அலைந்து திரிந்து நடப்பது எதுவுமில்லை. எஞ்சிய பிள்ளைகளையும் பறிகொடுக்காமல் நீங்களும் காணாமல் போகாமல் வீடுகளுள் இருங்களென மிரட்டப்படுவதாக குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------------------
படை அதிகாரிகள் மட்;டத்திலேயே இத்தகைய அச்சுறுத்தல்கள் நாசுக்காக விடுக்கப்படுவதாக அக்குடும்பங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
---------------------------------------------------------------------------------------------
இதனிடையே மஹிந்தவின் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களது விவரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு எதிராகச் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை அவர்கள் கேட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
---------------------------------------------------------------------------------------------
காணமற்போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அமர்வுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதில் 175 பொதுமக்கள் சாட்சியமளித்திருந்தனர். இவ்வாறு சாட்சியமளித்த மக்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியத்தை முன்வைத்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் விவரங்களை இராணுவ அதிகாரிகள் அவ்வப்பகுதி பிரதேச செயலகங்களிடம்; குறித்த விவரங்களைக் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment