Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, February 19, 2014
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யும் அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ
சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிட்டத்தட்ட 23 வருடங்களாக சிறையில் வாழும் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர்களது விடுதலைக் குறித்து மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அம்மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
-----------------------------------------------------------------------------------------------
அதில், ‘குற்றவியல் சட்டத்தின் பிரிவு 432-ஐ பயன்படுத்தி மாநில அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பதையும் கூட நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். ஆயுள் தண்டனை என்பதால், ஆயுள் முழுதும் அவர்களை வைத்திருக்க தேவையில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மூவரையும் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
அப்போதுதான் இந்த நிரபராதிகளுக்கு உண்மையான நீதி முழுமையாக கிடைக்கும்' என அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது சிறையில் வாழும் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, ‘அவர்கள் தங்களின் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்டனர். அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது' என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment