Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, February 1, 2014
சிரியா சொந்த மக்கள் மேல், உயிரியல் ஆயுதங்களை உபயோகித்தது- ஜேம்ஸ் கிளப்பர்: ஐரோப்பிய செய்தியாளர்:-
சிரியா நாட்டு அரசு, யுத்த காலத்தில் தன் சொந்த நாட்டு மக்கள் மேல், உயிரியல் ஆயுதங்களை (Biological weapons) உபயோகித்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறையின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் கிளப்பர் (James Clapper) தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட அளவிலான உயிரியல் ஆயுதங்களை சிரியா தயாரித்துள்ளதெனவும், அதிலொரு பகுதி அந்த ஆயுதங்களின் செயற்திறனை வலுப்படுத்தும் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் இடம்பெறும் போரை நிறுத்தி அங்கு அமைதியைத் தோற்றுவிக்குமுகமாக, சம்பந்தப்பட்ட இரு குழுக்களின் பிரதிநிதிகளுக்கிடையில் கென்வ்(F) (Genf) நகரில் பேச்சுவார்த்தை இடம் பெறும் சமயம் அமெரிக்கா இத்தகவலை வெளியிட்டுள்ளது. சிரியா தன் மக்கள் மேல் பல முறை இரசாயன ஆயுதங்களை உபயோகித்த கொடூரத்தையும் குறிப்பிடத் தவறவில்லை.
Genf 1 ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டது போல் எதிரணியினரின் பங்களிப்போடு இடைக்கால ஆட்சி முறையைத் தோற்றுவிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், அஷார் அலி அசாத் அரசின் நேரடிப் பெண் பிரதிநிதியான புதைன ஷாபன், (Buthaina Shaaban) அந்த ஒப்பந்தத்தில் இருப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாதெனக் குறிப்பிட்டமை, முழுப் பேச்சு வார்த்தைகளையும் சரித்து விழுத்துவது போலாகுமென, பேச்சுவார்த்தையை நடாத்தும் முக்கிய ஜ-நா பிரதிநிதி பிரஹிமி குறிப்பிட்டுள்ளார்.
இருந்தும் Genf 1 ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தாகவும், ஒப்பந்தம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் சிரியா அரசு சார்ந்த தொலைக்காட்சிகள் சிரியாவில் செய்திகளை ஒலிபரப்புகின்றன. அசாத்தில்லாத இடைக்கால அரசை அரசதரப்பினர் ஏற்கவில்லை.
Homs நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களும், குழந்தைகளும் அங்கிருந்து வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி போதுமானதல்ல என்றும், பாதுகாப்பளிக்கப்பட்ட வாகன வசதிகளில் அவர்கள் ஏற்றிச் செல்லப்படல் வேண்டுமென்றும், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுத் தெரிவிக்கிறது. உணவும், மருந்து வசதிக்களுமற்று இருந்த குழந்தைகளும், பெண்களும், நடக்க முடியாத அளவிற்கு மிகவும் வலுவிழந்து இருப்பதாக அமைச்சின் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அங்கு நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளைத் துருக்கி, ஈரான் அரசுகள் பொறுப்பேற்று செயற்படுத்த முன்வந்துள்ளது.
ஐரோப்பிய செய்தியாளர் - மகேந்தி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment