Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Saturday, February 1, 2014

நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் கூட்டம்

வானகத்தில் ஜனவரி 16ம் தேதி முற்றிலும் ஒரு வித்தியாசமான கூட்டம் ....
( “ நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் கூட்டம் & அடுத்தகட்ட செயல் திட்டக் கூட்டம், ” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ ) வானகத்தில் ஐயா இல்லாமல் நடைபெற்ற முதல் கூட்டம். ( ஆனால், எப்போதும் நம்முள்ளே இருக்கிறார்). வானகத்திற்கு வந்த அனைவரின் முகத்திலும் ஒரு ஏக்கம். ஏனெனில் எப்போதுமே, வானகத்திற்கு வருபவர்கள் அனைவருமே ஐயாவைப் பார்க்க வேண்டும், ஐயாவுடன் இருக்க வேண்டும், ஐயாவிடம் நமது சந்தேகங்களைக் கேட்டு சரி செய்ய வேண்டும், என ஏதாவது எதிர்பார்ப்போடு வருபவர்கள் தான் அதிகம். வழக்கமாக ஐயாவின் பிறந்த நாளன்று மட்டுமே அதிகமான மக்கள் வானகத்திற்கு வருகை புரிவார்கள். அதில் அனேக பேரின் வருகைக்கு காரணம் ஐயாவின் ஆசிர்வதம் பெற வேண்டும் என்பதே. ஆனால் ” நம்மாழ்வார் ஐயாவின் நினைவேந்தல் “ கூட்டமான ஜனவரி 16 அன்று கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தார்கள். அதிலும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள். வந்திருந்த அனைவருமே “எந்தவித சுய நலமுமில்லாமல் நம்முடைய பங்களிப்பை ஏதாவது வகையில் ” வானகத்திற்கு அளித்து ஐயாவின் கொள்கைகளை அனைவருக்கும் கொண்டு சேர்த்து, ஐயாவின் ஆணையிட்டுள்ள பணிகள் எந்த சூழ்நிலையிலும் தடைபடாமல், அனைவருமே பயனடைய வேண்டும் “ என்கிற விவேகத்துடனே வந்திருந்தனர். முதல் நிகழ்வு : ..................... ஐயாவுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது. அனைவருமே ஐயாவின் முன்னால் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். ஐயாவின் மனைவி சாவித்திரி அம்மாள் மற்றும் அன்பு மகளான மீனா அக்கா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஐயாவின் தொண்டர்கள் உட்பட அனைவருமே ஐயாவின் நினைவிடத்தில் கூடி ஐயாவின் நினைவுகளை சிறிது நேரம் நினைத்துப் பின் ஐயாவுக்கு விருப்பமான சில உணவு வகைகளை படைத்து, வணங்கினோம். இரண்டாம் நிகழ்வு : ............................. பின் அடுத்த நிகழ்வை வானகம் ஒருங்கிணைப்பாளரான ”லெ.ஏங்கல்ஸ் ராஜா “ அவர்கள் நிகழ்வை தொடங்கினார். முதலில் ஐயாவின் பசுமை நினைவுகளையும், ஐயா செய்த வாழ்நாள் சாதனைகளையும் விளக்கினார். பின் ஐயாவின் லட்சிய பூமியான “ வானகம் “ உலக்ததார் அனைவரின் தவறான வாழ்க்கை முறையையும், அதை மாற்றுவதற்காக ஆரம்பிக்கப் பட்ட நோக்கத்தையும் , அதன் பணிகளையும் விரிவாக விளக்கினார். அந்த நோக்கங்களான : 1. உழவில்லாத வேளாண்மை 2. மருந்தில்லா மருத்துவம் 3. பள்ளிசார கல்வி 4. தேவைப்படும் பொழுது இயற்கைக் காக்க போராட வேண்டும். இந்த கொள்கைகளை ஐயா வெறும் எழுத்து வடிவில் மட்டுமே கூறாமல் , அந்த கொள்கைகளை பின்பற்றி அனைவருக்கும் வாழும் வழிகாட்டியாகவும் வாழ்ந்துள்ளார் எனக் கூறினார். அவர் கூறியது வந்திருந்த அனைவரையுமே ” நாமும் ஐயாவைப் போல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தைப் பலப்படுத்தியது” . மேலும் குரு என்பவர் “இந்த மண்ணுலகில் தான் இல்லவிட்டாலும், தன்னுடைய கொள்கைகளும், பணிகளும் தொடர்ந்து செயல்படத் தேவையான தளபதிகளை உருவாக்கிவிட்டு தான் செல்கிறார் “ என்பதற்கு சான்றாக நமது ஐயாவும் இவ்வுலகில் நமக்கு தேவையான அனைத்து கேள்விகளுக்குமே பதிலளை அளித்துவிட்டு தான் சென்றிருக்கிறார். அதற்கும் மேலாக ஐயா தன்னுடைய கொள்கைகளை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு துறையிலும் சரியான நபர்களையும், வழிகாட்டிகளையும் அடையாளம் காட்டிவிட்டு தான் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். இனி நம்முடைய வேலை அதை சரியான பாதையில் செயல்படுத்துவது மட்டுமே. மூன்றாம் நிகழ்வு (” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ ) : ...................................................................... ஐயாவின் மற்றுமொரு மாற்று சிந்தனை கல்வியின் மீது தான். இன்றைய ” மெக்காலே கல்விமுறையை ” அடிமைத்தனத்தை மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. மேலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு “ கூலிக்கு ஆட்களைத் தயார் செய்யும் “ clerical Job “ கல்வியாகவே மட்டுமே உள்ளது . மேலும் மெக்காலே இந்த கல்வித்திட்டத்தை செயல்படுத்தும் முன் இங்கிலாந்து ராணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த கல்வி முறையில் படித்தவர்கள் பிறப்பாலும் , நிறத்தாலும் இந்தியர்களாகவும், செயல்பாட்டில் ஆங்கிலேயர்களாகவும் இருப்பார்கள் என்றார். அதை அவர்கள் இத்தனை வருடங்களாக சாதித்தும் விட்டார்கள். எனவே இந்த அடிமைக் கல்வியை மாற்றவும் தன்னுடைய வாழ்நாளை தியாகம் செய்தவர் ஐயா. அதற்கான மாற்றுக் கல்வியை ஐயாவின் பயிற்சி அனைத்திலும் அந்த “ சுவரில்லா கல்வியை “ கற்றும் கொடுத்தார். எனவே முதல் செயல் திட்டமாக ஐயாவின் மாற்றுக் கல்வியை அனைவரும் கற்க ” நம்மாழ்வார் கல்வி திட்டம் “ என்ற பெயரில் வானகத்தில் ஐயாவின் பிறந்தநாள் விழாவில் தொடங்க வேண்டும் என்றும் அதற்காக அந்த கல்விமுறையில் ஐயா கூறிய ” வாழ்வியலுக்குத் தேவையான தொழிற்கல்வி உட்பட ” எப்படிப்பட்ட கல்வி இருக்க வேண்டும் என்ற விவாதமும் கருத்து கேட்பும், விவாதிக்கப் பட்டது. மேலும் இத்திட்டத்திற்குத் தேவையான பயிற்றுனர்களை உருவாக்குதலும், அதற்குத் தேவையான கட்டுமானம் ( குடில்), நிதி உட்பட அனைவற்றிலும் எல்லோருடைய பங்களிப்பை எப்படிப் பெறுவது, அனைவரும் இத்திட்டத்தில் எப்படி பங்களிக்கலாம், பயனடையாலாம் என்பது பற்றிய தொடர் கலந்தாய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே பசுமைக் காவலர்களே, மாற்றத்தை விரும்பும் விரும்பிகளே... ” நம்மாழ்வார் கல்வித் திட்டம் ” பற்றிய கருத்துகள், செயல்திட்டங்கள், பங்களிப்புகள், நடைமுறைகள் என அனைத்திலும் நீங்களும் பங்குபெறலாம். அதற்கு வயது, சாதி, மதம், மொழி என எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. உங்களுடைய கருத்துக்களை முழுவதும் அனுப்ப வேண்டிய முகவரி : வானகம், நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் - 621311 . மின்னஞ்சல் : vanagamnammalvarfoundation@gmail.com கைபேசி : 94435 75431, 94421 21473 நான்காம் நிகழ்வு ( செயல்திட்டக் குழுக்கள் அமைத்தல் ) : .................................................................................. மதிய உணவாக நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு, உண்ட மயக்கம்வராமலிருக்க “ அடுப்பில்லா சமையல் முறையில் “ இயற்கை உணவுகள் வழங்கப்பட்டது. பின்னர் ஐயாவின் கொள்கைகளை வேகமாக செயல்படுத்த “ செயல் திட்டக் குழுக்கள் “ உருவாக்கப் பட்டது. 15 செயல் திட்டக் குழுக்கள் : ......................................... 1. நம்மாழ்வார் கல்வி திட்டக்குழு 2. இயற்கை வேளாண்மை குழு ( பயிற்சிப் பண்ணைகள் ) 3. தொண்டர்கள் குழு 4. பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் குழு 5. சத்துமிகு தானிய உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதல் குழு 6. பாரம்பரிய கால்நடைக்குழு 7. ஒருங்கிணைபாளர் குழு 8. மூலிகை மீட்டெடுக்கும் மற்றும் பாரம்பரிய வைத்திய ( மருந்தில்லா மருத்துவம்) குழு 9. நிதிக் குழு 10. போராட்டக்குழு 11. செய்தி மற்றும் ஊடகக் குழு 12. கட்டுமானக் குழு 13. சட்டக் குழு 14. பாரம்பரிய கலைக்குழு 15. வாழும் கிராமங்களை உருவாக்கும் குழு என தற்போது வரை 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் விருப்பமான ஏதாவது ஒரு குழுவில் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். அவர்கள் மட்டுமல்ல எப்போதுமே செயல்பாட்டில் உள்ள ” ஐயா உருவாக்கிய தளபதிகளும்” தொண்டர்களும், பசுமை ஆர்வலர்களும், கல்லூரி மாணவர்களும் மற்றும் பலர்… என அனைவரும் இணைந்து செயல்பட்டு “ நம்மாழ்வார் ” ஐயாவின் கொள்கைகளை சிறிது சமரசம் செய்யாமல், அதை நாமும் வாழ்ந்து முன்னெடுத்து செல்வோம் என தொடர்ந்து இணைந்த கொண்டிருக்கின்றனர். இந்த ” செயல் திட்டக் குழுக்குகளை “ வலிமையாக கட்டமைத்து விட்டுப் பின், அது விரிவுபடுத்தப் படும். ஆகவே பசுமைக் காவலர்களே, மாற்றத்தை விரும்பும் விரும்பிகளே... அனைத்திலும் நீங்களும் பங்குபெறலாம். அதற்கு வயது, சாதி, மதம், மொழி என எந்தவித ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.

No comments:

Post a Comment