Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Saturday, February 1, 2014
இலங்கை மீது சர்வதேச விசாரணை உறுதி! நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்தாக கூறுகிறார் சுமந்திரன்:-
போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்இ கடந்த இரண்டு ஆண்டுகளைப் போன்றல்லாமல் இம்முறை மிகக் கடுமையான பிரேரணை கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயன்றளவு முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்றுக் கொழும்பில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்குஇ மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்இ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அமெரிக்கத் தூதரகத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இனப்பரம்பல் மாற்றியமைப்பு
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற சகல பிரச்சினைகளையும் விளக்கமாக அமெரிக்கச் செயலரிடம் தெரிவித்தோம். இராணுவப் பிரசன்னம்இ சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுஇ மக்களின் காணிகள் இராணுவ முகாம்களுக்காக சுவீக்கரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைஇ சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்பில் எடுது;துக் கூறியுள்ளதாக சுமந்திரன் தெரிவிவ்தார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைஇ மக்களின் மீள்குடியமர்வுஇ காணாமற்போனோர் தொடர்பிலும் இன்னமும் தீர்க்கப்படாமல் தொடரும் பிரச்சினைகளையும் அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்தோம். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகளாகி யும் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்படாமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினோம் எனவும் தெரிவிவ்த்தார்.
சர்வதேச விசாரணையே வழி
போர்க் குற்றம் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் இலங்கை அரசினால் கடந்த இரண்டு வருடங்களில் எந்த வொரு ஆக்கபூர்வமான விசாரணையும் முன்னெடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச விசாரணையே ஒரே வழி என்றும் குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்திஇ ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அமெரிக்கப் பிரேரணை அமைய வேண்டும் என்று எம்மால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நிஷாஇ கடந்த இரண்டு வருடங்களைப் போன்றல்லாமல்இ இம்முறை மிகக் கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா இயலுமானவரை முயற்சிக்கும் என்று பதிலளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.
அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலை மாத்திரம் நடத்தினால் போதாது. ஆதனைக் கொண்டு நடத்துவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.வடக்கு மாகாண சபையை முடக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிக்காட்டியதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment