Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, January 3, 2014
நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம்
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று சிறீலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்புவரும் எனத் தெரிய வருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து மார்ச் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்தக் குழுவின் பயணம் அமையவுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே தமது உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா.ஆணையர் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு அனுப்புகிறார் எனக் கூறப்பட்டாலும் இதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
அதேவேளை, சிறீலங்காவின் நிலைவரங்கள் தொடர்பில் நேரடியாக பேச்சு நடத்துவதற்கு தமக்கு நேரம் வழங்குமாறுகோரி சில மனித உரிமைகள் அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதன்படி, ஜெனிவாவில் நடைபெறும் உபமாநாடுகளின் போது பெரும்பாலும் இந்தச் சந்திப்புகள் இடம்பெறலாம் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. ஆணையாளருடன் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டுள்ளது.
அண்மையில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறீலங்காவின் மனித உரிமை நிலைவரம் தொடர்பிலும், தமது பயணத்தின் பின்னரான சிறீலங்காவின் செயற்பாடுகள் குறித்தும் அறிக்கை வெளியிடவுள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத தொடரில் அவர் வாய்மூல அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment