Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, April 11, 2014
கோபியின் மனைவிக்கு நான்காம் மாடியில் கருச்சிதைவு
இலங்கை இராணுவத்தால் தேடபப்ட்டுவரும் கோபி மற்றும் கஜதிபனின் துணைவியர்கள் மற்றும் தாயார் ஆகியோர்கள் நான்காம் மாடியில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
இந்த சித்திரவதைகளின்போது கோபியின் துணைவியார் கருச்சிதைவிற்குள்ளாகியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி கடந்த மாதம் திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணியான அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்தநிலையிலேயே அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீளுருவாகின்றனர் என்றும், அவர்களை மீளிணைக்கும் முயற்சிகளில் கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் என்பவர் ஈடுபட்டார் என்றும் தெரிவித்து அவரைத் தேடப்படுபவராக அறிவித்தது பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவு. அதைத் தொடர்ந்து வடபகுதி முழுவதும் இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டதுடன், கோபியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று கூறியும், சந்தேகத்தின் பேரிலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------
அந்த வரிசையில் கடந்த மாதம் 11ஆம் திகதி கோபி என்று கூறப்படும் கஜீபனின் மனைவி சர்மிளா (வயது 26) பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். தேடப்படுவரான கோபியின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்ணான அவர் மறுநாள் 12ஆம் திகதி ரயில் மூலமாகக் கொழும்பில் உள்ள குற்றப் தடுப்புப் பிரிவுக்கு (நாலாம் மாடி) கொண்டு செல்லப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------------
இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரணமாக மூன்று மாதங்களான சர்மிளாவின் கர்ப்பம் 14 ஆம் திகதி காலை கலைந்தது என்று கூறப்படுகின்றது. எனினும் அப்போது அவருக்கு சாதாரணமாக வழங்கப்பட வேண்டிய மருத்துவ உதவிகள் கூட வழங்கப்படவில்லை. மாறாக அதன் பின்னரும் அவர் கொழும்பில் இருந்து பூஸாவுக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment