Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Friday, December 27, 2013
ஆசஷ் 4–வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 164/9
மெல்போர்ன், டிச. 27–
ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 4–வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது . முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சில் திணறியது. தொடக்க வீரர்கள் கேப்டன் கூக் 27 ரன்னிலும், கார்பெர்ரி 38 ரன்னிலும் அவுட் ஆனார்.
அதன்பின் ஜோரூட் (24), பெல் (27), ஸ்டோக்ஸ் (14), போர்ஸ்போ (10) ஆட்டமிழந்தனர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன் எடுத்து இருந்தது. பீட்டர்சன் 67 ரன்னுடனும், பிரிஸ்னன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டத்தின் 2–வது ஓவரில் முதல் பந்தில் பிரிஸ்னன் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஜான்சன் கைப்பற்றினார். அதன்பின் ஜான்சன் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. பீட்டர்சன் (71 ரன்), ஸ்டூவார்ட் பிராட் (11) ஆகய இருவரையும் வெளியேற்றினார்.
கடைசி விக்கெட்டை (பனேசர்) லயன் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 255 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ஜான்சன் 5 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி விளையாடியது.
தொடக்க வீரர் வார்னர் 9 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும், கேப்டன் கிளார்க் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் இருந்தது.
அதன்பின் ரோஜர்ஸ்– ஸ்டீவன் சுமித் நிதானத்துடன் விளையாடியது. சுமித் (19) ரன் ரோஜர்ஸ் (61) பெய்லி (0) ஜான்சன் 3 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. ஹடின் 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment