பெருகி வரும் மக்கள் தொகைக்கு புவியில் உள்ள வளங்கள் போதவில்லை என்பதால், ஆஸ்டிராய்டு எனப்படும் குறுங்கோளில் உள்ள வளங்களையும் தோண்ட சிந்தித்துக் கொண்டுள்ளது மனித இனம். சமீபத்தில், 2011 யு.டபள்யு.-158 என்ற பெயர் கொண்ட குறுங்கோள் புவியை சுமார் 1.5 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் என்று கூறப்பட்டது. இது, புவிக்கு அருகில் உள்ள கிரகத்தைவிட 30 மடங்கு குறைவான தூரம் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இப்போதுவிட்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அந்தக் கோள் புவிக்கு அருகில் கடந்து செல்லாது என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அவர் கூறுகையில், 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வானியல் கொள்கையின்படி, வானில் உள்ள பொருள்களை எந்த நாடும் சொந்தம் கொண்டாடக் கூடாது. அதில், நாடு என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, தனியார் நிறுவனங்கள் என்று எதுவும் கூறப்படவில்லை. அதனால், அந்தக் கோளை அடையும் முயற்சியில் தனியார் நிறுவனங்கள் இறங்கியுள்ளன என்று தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சமீபத்தில் ஏவுகணை ஒன்றை பிளானிடரி ரிசோர்சஸ் அனுப்பியது. அந்த நிறுவனம் முதலில் பிளாட்டினத்தை மையமாகக் கொண்டுதான் அனுப்பினாலும், தற்போது நீர் இருப்பதற்கான கூறுகள் குறித்தும் ஆராய ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் பெர்மன் கூறினார்.
இந்தக் குறுங்கோள் குறித்து பத்திரிக்கையாளர் சாரா க்ருடாஸ் கூறுகையில், இந்த கோளின் மூலம் புவியில் உள்ள ஒவ்வொருவரையும் ட்ரில்லியனிரியாக்க முடியும் என்றார். எப்படியோ, விண்வெளியிலும் தனியார் நிறுவனங்கள் போட்டிபோடும் சூழல் உருவாகாமல் இருந்தால் சரி.
No comments:
Post a Comment