Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, March 5, 2014
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் இங்கிலாந்து ஆதரவுடன் அமெரிக்கா கொண்டு வந்தது
ஜெனீவா,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் ஆனது.
----------------------------------------------------------------------------------------------
மனித உரிமை மீறல்
இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது, சிங்கள ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித உரிமைகள் மீறப்பட்டன. மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை இதை ஏற்க மறுக்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா சார்பில் ஏற்கனவே இரு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
--------------------------------------------------------------------------------------------------
ஐ.நா. மனித உரிமை கவுன்சில்
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் மீண்டும் நேற்று முன்தினம் தொடங்கியது.சமீபத்தில் இலங்கை சென்று விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார். அதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. நவி பிள்ளை நேற்று முன்தினம் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். இதேபோல் கனடா, இங்கிலாந்து நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் இலங்கை நிலவரம் தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
--------------------------------------------------------------------------------------------------
அமெரிக்கா தீர்மானம் தாக்கல்
இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவிலான விசாரணை நடத்த கோரும் அமெரிக்காவின் வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இங்கிலாந்து, மான்டனெக்ரோ, மாசிடோனியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது.இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பயனுள்ளதாக இல்லை என்றும், எனவே அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச அளவில் சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் நவி பிள்ளை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள சிபாரிசை வரவேற்பதாக அமெரிக்க தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-------------------------------------------------------------------------------------------------
மாகாண அரசுக்கு அதிகாரம்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். போர்க்குற்றங்களுக்கு காரணமான நபர்களை கண்டறிந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டப்படி அவர்களை அந்த குற்றங்களுக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும். மத சிறுபான்மையினர், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.13–வது அரசியல் சட்ட திருத்தத்தின்படி, இலங்கையின் வடக்கு மாகாண முதல்–மந்திரிக்கு ஆக்கபூர்வமான வகையில் அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதோடு, அந்த மாகாணத்துக்கு உரிய நிதி ஆதாரங்களையும் இலங்கை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.இந்த வரைவு தீர்மானத்தின் மீது இந்த மாத இறுதியில் ஓட்டெடுப்பு நடைபெறும்.
-------------------------------------------------------------------------------------------
ஆதரவு திரட்டும் இலங்கை
இந்த தீர்மானம் தொடர்பான இலங்கையின் பதிலை அந்த நாட்டு வெளியுறவு மந்திரி ஜி.எல்.பெரீஸ் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்ய இருப்பதாக இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம் பெற்றுள்ள நாடுகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் இலங்கை மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment