Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Sunday, February 23, 2014

அழைப்பு வருமென காத்திருந்த மகிந்த: ஏமாற்றிய மைத்துனர் – மனைவியை பிரிந்தார் ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் -

இந்தியாவில் எதிர்வரும் மே மாதம் நடைபெறும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் என நம்பப்படும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மைத்துனரான கோடிஸ்வர வர்த்தகர் திருகுமார் நடேசன் வெறுங்கையுடன் நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்தியப் பயணத்திற்கு முன் ஜனாதிபதியை சந்தித்துள்ள நடேசன், பாஜக தலைவர்களுடன் தனக்கு சிறந்த தொடர்புகள் இருப்பதாக கூறியுள்ளதுடன் அவர்களை சந்தித்த பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்வதாக தெரிவித்துள்ளார். பாஜகவின் எந்த தலைவர்களை சந்திக்க போகிறீர்கள் என ஜனாதிபதி எழுப்பிய கேள்வி பதிலளித்துள்ள திருகுமார் நடேசன், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், தென்னிந்தியாவின் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்க போவதாக குறிப்பிட்டுள்ளார். நேரடியாக கேரளாவின் கொச்சினுக்கு சென்று நிர்மலா சீத்தாராமன் வீட்டில் தங்கியிருந்து அவருடன் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க போவதாகவும் அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் சந்திக்க முடியும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். நடேசன் இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற நாளில் தொலைபேசி அழைப்பு வரும் என ஜனாதிபதி எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். சில தினங்களின் பின்னர் ஜனாதிபதியே அவருடன் தொடர்பு கொண்டுள்ளார். பாஜக தலைவர்கள் சகலரும் பணிகளில் பிஸியாக இருப்பதாகவும் தான் வந்த பின்னர் தகவல்கள் தெரிவிப்பதாகவும் நடேசன் அப்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். எனினும் சில தினங்களுக்கு பிறகு அவர் இந்தியாவில் இருந்து வெறுங்கையுடன் திரும்பியுள்ளார். ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி பாஜக தலைவர்களின் அருகில் கூட நடேசனுக்கு செல்ல கிடைக்கவில்லை என தெரியவருகிறது. பாஜக தலைவர்கள் அவருடனான சந்திப்பை தவிர்த்து கொண்டதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனாதிபதி உத்தியோகபூர்வ பிரதிநிதியாக பாஜக தலைவர்களை சந்திக்க சென்ற ஜனாதிபதியின் ஆலோசகர் மிலிந்த மொரகொடவை சந்தித்த நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ஒருவர், இலங்கை சம்பந்தமாக அடல் பிஹாரி வாஜ்பாய் கடைபிடித்த கொள்கையையே நரேந்திர மோடியும் கடைப்பிடிப்பார் என கூறியுள்ளார். இந்த நிலையில், அடுத்த இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், இலங்கைக்கு வழங்கப்படும் சகல ஆயுதப் பயிற்சிகளும், உதவிகளும் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது. மனைவியை பிரிந்தார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்கவின் மனைவியான திலக்ருக்ஷி விக்ரமசிங்க அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிஷாந்த விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா விமான சேவையில் பணியாற்றும் விமானப் பணிப்பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதே இந்த பிரிவுக்கு காரணம் என தெரியவருகிறது. விக்ரமசிங்கவின் மனைவியும் ஒரு விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியவர். இலங்கை அரச விமான சேவையானது எயார் சிலோன் என்ற பெயரில் இயங்கிய காலத்தில் அவர் விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அவரது கணவருக்கு விமானப் பணிப்பெண்ணுடன் தொடர்பிருக்கும் செய்தி வெளியானதை தொடர்ந்து தில்ருக்ஷி கணவருடன் கோபித்து கொண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள அவரது மகனிடம் சென்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment