Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 20, 2014

தினமலர்' நாளிதழுக்கு, காங்கிரஸ் - எம்.எல்.ஏ., விஜயதரணி அளித்த சிறப்பு பேட்டி:

'ராஜிவ் கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட, ஏழு பேர் விடுதலை செய்யப்படுவர்' என, அமைச்சரவையில் முடிவெடுத்து, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தது பற்றி தங்கள் கருத்து?
-------------------------------------------------------------------------------------- இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தினத்தை, தமிழக மக்களின், கறுப்பு தினமாக பார்க்கிறேன். ஏனென்றால், அவர்கள் ஏழு பேரும், குற்றமற்றவர்கள் என, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லை. இன்றைக்கும் அவர்கள் குற்றவாளிகள் தான். ராஜிவ் கொலை என்பது கொடூரமான படுகொலை; பயங்கரவாத நடவடிக்கை. 'அவர்கள் விடுதலை செய்யப்படுவர்' என, சட்டசபையில் அறிவித்துள்ளனர். இதை, ஒட்டுமொத்த, தமிழக மக்களின் குரலாக பார்க்க முடியாது. இது, மக்களுக்கு எதிரான முடிவாகவே தென்படுகிறது. குற்றம் செய்தவர்களை, தமிழக அரசு விடுவிக்குமானால், இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். கொலை செய்து விட்டு, 10 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டால் போதும், அரசாங்கம் விடுதலை செய்து விடும் என்ற நம்பிக்கை, ஒவ்வொரு குற்றவாளிகளின் மனதிலும் உருவாகி விடும். தமிழகத்தில் குற்றங்கள் செய்தால் விடுதலை ஆகி விடலாம் என, கருதி, மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள், தமிழகத்திற்கு வந்து, குற்ற செயல்களில் ஈடுபடுவதும் அதிகரிக்கும்.பழிக்கு பழி கொலைகளும், சர்வ சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விடும். நியாயம் கிடைக்காதவர்கள் எல்லாரும், கொலையாளிகளாக மாறி விடும் சூழ்நிலை ஏற்படும். ஆதாயத்திற்காகவும், முன்விரோத கொலைகளும் அதிகரிக்கும். ஏற்கனவே, தமிழகத்தில் ஆதாயக் கொலைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்துள்ளன. ராஜிவ் கொலையாளிகளை அவசர அவசரமாக விடுதலை செய்வதற்கு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என, பொதுமக்கள் பரவலாக பேசிக் கொள்கின்றனர். தமிழகத்தில் இனி பாதுகாப்பாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.

1 comment:

  1. காங்கிரஸ் ஆட்சில் தான் கொலை , கொள்ளை ,பாலியல் , கொடுமை INDIA மட்ரும் ஈழத்தில் இன்னும் ...! உங்கள் தவறான ஆட்சினால் தான் இப்படி நடக்கிறது முதல அங்கப்பேசு அப்பறம் இங்கவந்து வந்து மேக்கப் போட்டு பேசலாம்

    ReplyDelete