Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, February 20, 2014

தென்- ஆப்பிரிக்காவிடம் பாடம் படிக்கச் செல்லும் இலங்கைத் தூதுக்குழு

தென்னாப்பிரிக்காவிடம் பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அந்நாட்டுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்பவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ----------------------------------------------------------------------------------------- நிறவெறி ஆட்சிக் காலத்துக்குப் பின்னரான உண்மை கண்டறியும்- நல்லிணக்க ஆணைக்குழு பற்றி கற்றறிந்துகொள்வதற்காக இந்தத் தூதுக்குழுவினர் அங்கு செல்லவுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. தொடர்புடைய விடயங்கள் ----------------------------------------------------------------------------------------- ஐந்துபேரடங்கிய இந்தத் தூதுக்குழுவினர் தென்னாப்பிரிக்காவில் இரண்டு நாட்கள் தங்கியிருப்பர். ----------------------------------------------------------------------------------------- இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று சர்வதேச நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுத்துவருகின்றன. ----------------------------------------------------------------------------------------- இலங்கையின் போரில் நடந்துள்ள கொடூரங்கள் பற்றி முறையான விசாரணை நடத்தத் தவறியுள்ளமை தொடர்பில் இலங்கை மீது தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்ற அமெரிக்கா தயாராகிவருகிறது. ----------------------------------------------------------------------------------------- ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு தூதுக்குழு அனுப்பும் இந்தப் புதிய நகர்வில் இலங்கை இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment