Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Wednesday, January 22, 2014

பதினோராயிரம் உயிர்களைப் பலி கொண்டிருக்கலாம் என நம்பப்படும் சிரியா யுத்தத்தம் முடிவுக்கு வருமா?

மூன்று வருட காலத்தில் பதினோராயிரம் உயிர்களைப் பலி கொண்டிருக்கலாம் என நம்பப்படும் சிரியா யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில், ஆட்சியாளரையும் எதிரணியினரையும் பேச்சுவார்த்தை மேசையில் வருகின்ற புதன் கிழமை அமரவைக்கும் செயலிற்கான அழைப்பு ஜ. நா. சபையின் பொதுச் செயலர் பன்கி மூனால் ( Ban - Ki Moon ) விடுக்கப்பட்டுள்ளது, அவுஸ்திரேலியா, கிரேக்க நாடு, லக்ஸம் பேர்க் ( Luxemburg ) போன்ற நாடுகள் தங்கள் பிரதி நிதிகளை அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளது. சிரியா நாட்டு இரத்தைப் பெருக்கை நிறுத்த இந்த நாடுகளால் என்ன செய்ய முடியுமென்பது புரியாத புதிரக உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை Genf II எனப் பெயரிடப்பட்டது, சுவிஸ் நாட்டிலுள்ள ( Montreux ) மொன்றுவா இல் இடம் பெறவுள்ளது. உலகின் முப்பது நாடுகள் பங்கு கொள்ள விருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவுவது ( Transitional Goverment ) முக்கிய நோக்கமாயுள்ளது சிரியாவின் சர்வாதிகாரி பஷார் அல் அசாத் ( Bascha Al - Asaad ) உடன் மிகநெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் ருஷ்யாவும், ஈரானும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தன. ஈரான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் பற்றி அமெரிக்காவும் ருஷ்யாவும் மாதக் கணக்கில் திரைக்குப் பின்னால் வாதங்களில் ஈடுபட்டன. மற்றைய நாடுகள்போல், Gen I இல் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆதரிக்கப் போவதாக. ஈரானின் வெளிவிவகாரச் செயலர் Sarif தனக்குக் கூறியதாக Ban ki Moon வெளியிட்டிருந்த செய்தி ஈரானின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஈரான் ஜனாதிபதி ஹசான் ரொஹானி ( Hasan Rohani ) உள்நாட்டு அரசியற் பிரச்சனைகளுக்கு ஆளாகவேண்டி வருமென அதிருப்தி ஈரானில் நிலவுகிறது. இது தவிர சிரியா நாட்டு சர்வாதிகாரி தான் எந்த விலை கொடுத்தும் Demaskus ஆட்சியில் தொடர்ந்து இருக்க விரும்புவதாகவும், June மாதத்தில் இடம் பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். சிரியாவின் ஒரு பகுதியிற் தன்னும் போர் நிறுத்தத்திற்கான வழியை இப்பேச்சு வார்த்தை மூலம் சாதிப்பது கடினமாக அமையக் கூடுமென Bascha Al - Assad இன் அறிக்கையையும், ஈரான் பேச்சு வார்த்தையிலிருந்து அமெரிக்காவின் எதிர்ப்பால் விலத்தப்பட்டமையையும் கவனித்த விமசகர்கள் கருதுகின்றனர். அத்தோடு Iran இன் உள் நாட்டு அரசியல் நிலைமையானது மிகவும் திடகாத்திரமற்ற நிலையை அடைந்துள்ளது. அல்கொய்டா ( Al - Quida ) சுனிற் ( Sunniti ) முஸ்லீம்களைப் பலப்படுத்தி ஈரானிற்கு பிரச்சனயைத் தருவதும், லெபனானின் மிகவும் ஆயுதப்பலம் பொருந்திய Hisbollah, 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் போரில் இழந்த போராளிகளை விட அதிகளவில் சிரியாப் போரில் இழந்தமையும் ஈரானின் செல்வாக்கை அதன் பிராந்தியத்தில் பலமிழக்கச் செய்துள்ளது. ஈரான் தன் பலத்தை உலகிற்கு மீண்டும் புதுப்பித்துக் காட்டும் வகையில் இரண்டு போர்க் கப்பல்களை Atlantic கடலிற்கு அனுப்பியுள்ளது. இது வெறும் பயிற்சி முறைகளிலொன்றென அதன் கப்டன் கூறுகிறார். .அமெரிக்கக் கரையோரப் பகுதியை அண்மித்த சர்வதேச கடற் பரப்பில் தன் கப்பலை நிறுத்தப் போவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஈரான் குறிப்பிட்டிருந்த்து.. அரசியல் என பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்குப் பதில் அதன் தோற்றங்களை மாற்றியமைத்து உவகை கொள்ளும் அதிகாரக் கலை உலகில் அரசியல் எனப்படுகிறது. ஐரோப்பிய செய்தியாளர் மகேந்தி:-

No comments:

Post a Comment