Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Wednesday, January 22, 2014
ந்தியப் புலிகளுக்கு புதிய நோய் ஆபத்து
இந்தியாவில் சட்டவிரோத வேட்டையால் புலிகள் அழிந்து விடலாம் என்கிற தொடரும் அபாயத்துக்கு மத்தியில், இந்திய புலிகளின் உயிர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக, நாய்களிடம் இருக்கும் ‘டிஸ்டம்பர்’ என்ற வைரஸ் கிருமி தற்போது புலிகளுக்கும் பரவியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் இந்த டிஸ்டம்பர் வைரஸ் கிருமி தாக்கியதால் குறைந்தது ஒரு புலியாவது இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து புலிகள் சரணாலயத்திலிருக்கும் புலிகளுக்கும் டிஸ்டம்பர் பரிசோதனை நடத்தப்படும் என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் புலிகளை இந்த வைரஸ் கிருமி தாக்குவதிலிருந்து தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க கோரியும் அனைத்து புலிகள் சரணாலயத்திற்கும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. சரணாலயங்களைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள நாய்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு தடுப்பூசி அளிப்பதும் ஒரு முன்னெச்சரிக்கை முயற்சியாகும்.
காரணம் "டிஸ்டம்பர்" வைரஸ் தொற்றிய நாய்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டால் இந்த வைரஸ் கிருமி புலிகளுக்கு பரவுவதற்கு வாய்ப்பு உண்டு. பசியால் புலிகள் இந்த டிஸ்டம்பர் வைரஸ் தாக்கிய நாய்களை உண்டால் அந்த நோய் புலிகளுக்கும் தொற்றிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
மூளையை தாக்கும் வைரஸ்
இந்த வைரஸ் முதலில் புலிகளின் மூளையைத்தான் பாதிக்கும் என்று தெரிவித்தார் இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குனர் கயா பிரசாத்.
"இந்த வைரஸ், புலிகளின் நரம்பு மண்டலத்தைத்தான் முதலில் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படுவதால் அவை முதலில் தனது பாதையை மறந்துவிடும். பின் காட்டுக்குள் செல்வதற்கு பதிலாக அவைகள் கிராமத்திற்குள்ளும் அதன் வீதிகளிலும், விவசாய நிலங்களிலும் அவை சென்றுவிடுகின்றன," என்றார் கயா பிரசாத்.இவ்வாறு மூளை பாதிக்கப்பட்ட புலிகள் தான் மனிதர்களைக் கொல்கிறதா என்று அவரிடம் கேட்டபோது, தன்னிடம் அதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டார். "நரம்பு மண்டல பாதிப்புகளால் அதன் மூளையில் அவைகளின் முடிவெடுக்கும் செயல்திறனை அவை இழந்துவிடுகின்றன. எனவே இந்த டிஸ்டம்பரினால் அவை காட்டை விட்டு வெளியேறி, வேறு இடங்களுக்கு செல்கின்றன. மனிதர்களை அவை கொல்வதற்கு இந்த வைரஸும் ஒரு காரணமாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு’ என்றார் கயா பிரசாத்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் டிஸ்டம்பர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல சரணாலயங்களில் நோய்த் தடுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் தாங்கள் இந்த நோய்த் தடுப்பு திட்டத்தை ஜபல்பூரின் கால்நடை பல்கலைகழகத்துடன் சேர்ந்து துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"முதலில் எங்களின் சரணாலயத்தில் ஒரு புலி மர்மமான முறையால் இறந்ததலிருந்து இது துவங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புலி இறந்ததில் எங்களின் சந்தேகம் சிறு பூச்சிகளின் மீது தான். அந்த புலி மீது அதிக பூச்சிகள் இருந்தது", என்றார் பன்னா புலிகள் சரணாலயத்தின் இயக்குநர் ஆர் எஸ் மூர்த்தி.
கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்காவின் ஒரு புலியிடமும், மேற்கு வங்காளத்தில் ஒரு காண்டா மிருகத்திடமும் இந்த டிஸ்டம்பர் வைரஸ் முதலில் கண்டறியப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் தொடர்பான எச்சரிக்கை அதிகரித்துவருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment