Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 2, 2014

இலங்கையில் இதுவரை இந்தியாவால் கட்டப்பட்ட பத்தாயிரம் வீடுகள்

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் 2013 ஆம் ஆண்டின் இரண்டாவது கட்டத்தில் 10,250 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கூறியிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடும். கலந்தாய்வோடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 43 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் 2013 ஆம் ஆண்டில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கின்றது என்று இந்திய துணைத்தூதரகம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் 10,184 வீடுகளும், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 வீடுகளும் கடந்த வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக இரண்டரை இலட்ச ரூபா செலவில் திருத்தியமைப்பதற்காக 100 வீடுகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இது வரையில் பயனாளிகளுக்கு இலங்கை ரூபா 7.8 பில்லியன் (ஏறத்தாள இந்திய ரூபா 355 கோடி) நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. பிறந்துள்ள 2014 இல் மேலும் 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுதி 17,000 வீடுகளும் 2015 இல் பூர்த்தியாக்கப்படும் என இந்திய துணைத்தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத் திட்டம் உத்தியோகபூர்வமாக 2013 வைகாசி 22 இல் தான் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இம் மாகாணத்தில் முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 66 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும் 400 வீடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் மற்றைய மாவட்டங்களில் விரைவில் திட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் வடமாகாணத்தில் 39,000 வீடுகளும், கிழக்கு மாகாணத்தில் 4,000 வீடுகளும் கட்டி முடிக்கப்படும். மலையக வீடுகள் இந்திய வீடமைப்புதிட்டத்தின் மூன்றாவது கட்டம், மத்திய, ஊவா மாகாணங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் மூலம் நடைமுறைப்படுத்தும் முறையில் 4,000 வீடுகள் கட்டும் பணி சம்பந்தப்பட்ட தோட்ட கம்பனிகளினால் காணிகள் விடுவிக்கப்பட்டு, தேவையான காணி பண்படுத்தல் முடிவடைந்ததும் 2014 ஏப்பிரல் மாதமளவில் ஆரம்பிக்கப்படும். இந்திய அரசாங்கத்தால் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிபுணர் ஒருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார். நான்காவது கட்டம், முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தாங்களே வீடுகளை கட்ட முடியாத நிலையிலுள்ள உள்ளுரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான 4,000 வீடுகளை 2014 இல் நிர்மாணித்தலைக் உள்ளடக்கியது. முகவர்களினால் செயற்படுத்தும் முறை மூலம் வடமாகாணத்தில் 1000 வீடுகள் கட்டும் பரீட்சார்த்தமான திட்டம் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணிகளில் 2012 ஜுலை மாதத்தில் செய்து முடிக்கப்பட்டது. இம் முழுத்திட்டமும் இந்திய அரசின் முழுமையான மானிய உதவித்திட்டத்தின் கீழ் இந்திய ரூபா 1372 கோடியில் (இலங்கை ரூபா 30 பில்லியன்), நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது இந்திய அரசாங்கத்தால் ஏனைய நாடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி உதவியுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய திட்டமாகும் என்றும் இந்தியத் துணைத் தூதரகம் கூறியிருக்கின்றது.

No comments:

Post a Comment