Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, January 2, 2014

சென்னைக் கூட்டம் : இலங்கை மீனவர்களுக்குத் தெரியுமா ?

இலங்கையில் பெரும்பாலான மீனவர்கள் சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்று அங்கு அண்மையில் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார். கடந்த பல நாட்களாக இலங்கைச் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை சந்திப்பதற்காகவும், அவர்களது விடுதலை குறித்து விவாதிப்பதற்காகவும் இலங்கை சென்று வந்த நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார். இருநாட்டு மீனவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சென்னையில் சந்தித்துப் பேசுவார்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதை சந்தித்த பிறகு இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ இக்கூட்டம் குறித்த தகவல்களை கடந்த வாரம் தெரிவித்திருந்தார். எனினும் இது குறித்த செய்திகள் இலங்கை ஊடகங்களில் வெளியாகியிருந்தன என்றாலும், அரச தரப்பில் தமக்கு சென்னைக் கூட்டம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கூறப்படவில்லை என்று இலங்கை மீனவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அருளானந்தம் கூறுகிறார். படகுகளை விடுவிப்பதில் சிக்கல் இதேவேளை இருநாட்டு சிறைகளிலும் உள்ள மீனவர்கள் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும், உணவுப் பிரச்சினையால் சிரம்மப்படுகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைச் சிறைகளிலுள்ள மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், பிடிக்கப்பட்ட படகுகளை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது என்றும் அவர் கூறினார். பிடிபட்ட படகுகளின் உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தால் மட்டுமே, படகுகளை விடுவிப்பது தொடர்பிலான வழக்கு அடுத்த கட்டத்துக்கு நகரும் என இலங்கையில் வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்கள் தெளிவாகக் கூறிவிட்டன எனவும் அருளானந்தம் சுட்டிக்காட்டினார். சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கு இதுவரை தமது தரப்புக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறினார்.

No comments:

Post a Comment