Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, December 26, 2013

பிரான்சின் மருத்துவ சாதனை - உலகில் முதல் முறை செயற்கை இருதயம்

பிரான்ஸ் தலைநகர் பரிசிலுள்ள Georges Pompidou மருத்துவமனை நிபுணர்கள் செயற்கை இருதயத்தை தயாரித்து, அதனை 75 வயது முதியவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
கடந்த வாரம் நடந்த சத்திரசிகிச்சையின் பின் இப்போது செயற்கை இருதயம் சிறப்பாக இயங்கி வருகிறது என்று மருத்தவ நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு முன்பும் செயற்கை இருதயம் தயாரித்து பொருத்தப்பட்டுள்ளது. அது ஒரு தற்காலிக மாற்றாகத் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகில் முதன் முறையாக இப்போது தான் வாழ் நாள் 5 ஆண்டு நீடிக்கும் வகையில் செயற்கை இருதயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஏற்க வேண்டும் என்பதால், இந்த செயற்கை இருதயமும், அதற்கு தேவையான திசுக்கள் உட்பட துணை பொருட்களும் கால்நடை உயிரினங்கள் மூலமாக எடுக்கப்பட்ட திசுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கும் குறைவான நிறையில் செயற்கை இருதயம் உள்ளது. இயற்கை இருதயத்தை விட அதிக நிறைதான். எனினும் உயிரின திசுக்கள் மூலம் தசைகள் உட்பட எல்லாம் பொருத்தப்படுவதால் இருதயத்துக்கு இரத்தம் பாய்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

No comments:

Post a Comment