Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Thursday, December 26, 2013
வாக்காளர்களாகப் பதிவு செய்துவிட்டீர்களா..? தாமதிக்க வேண்டாம்...
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் உள்நாட்டு அரசியலில் பங்கேற்பது ஒவ்வொருவரதும் கடமையும் கூட. எமது கோரிக்கைகளை அரசியல் தலைவர்களின் அக்கறைக்குரிய விடயமாக மாற்றுவதற்கு எவ்வளவு துரத்துக்கு மக்கள் தேர்தல்களில் ஆர்வமாகப் பங்கேற்கிறார்களோ அதனைப் பொறுத்தே அது சாத்தியமானது. இன்று கனடாவும் பிரித்தானியாவும் எமக்குச் சார்பாகக் குரல் கொடுப்பதன் பின்னணியல் அங்கு வாழும் நம் உறவுகள் ஒரு வலுவான அரசியல் சக்தியாக இயங்குவதே காரணம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆகிய நாம் இந்நாட்டில் சகல உரிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் நாம் வாழும் நகரத்தில், அதன் வளர்ச்சிக்காக, கல்வி, தொழில் என்று பல வழிகளிலும் நமது உழைப்பினை வழங்கி நாட்டின் வளர்ச்சியில் பங்காளர்களாக இருக்கிறோம். அவற்றோடு மட்டும் நாம் நின்று விடமுடியாது. இந்நாட்டு அரசியலில் பங்கேற்று தமிழர்களின் பிரச்சனை இந்தத் தேசத்தின் பிரச்சினையின் ஒரு பகுதி என்பதாக மாற்றம்பெறச் செய்ய வேண்டும்.
எமது சொந்த தாயகத்தில் உரிமையை இழந்த நாங்கள், வாழும் தேசங்களிலும் எமது உரிமைகளை இழந்து விடக்கூடாது. இருக்கக்கூடிய உரிமைகளை பயன்படுத்தத் தெரியாமல் இருப்பது கண்ணிருந்தும் குருடர்களாக வாழ்வது போன்றதே! இந்த தேர்தல்களில் பங்கு பற்றுவதன் மூலம், நாமும் எம்மை ஆளப்போகிறவர்களை தெரிவு செய்வதில் எமது கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக வாக்காளர்களாக எம்மை நாம் பதிவு செய்து கொள்ளவேண்டியது அவசியமானது.
பிரான்சு நாட்டு பிரசையான நாங்கள் வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன், நாம் வாழும் நகரங்களில் உள்ள மாநகர சபைகளில் எம்மையும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம். எமது உரிமைகளை நாம் தான் பாதுகாக்க முடியும்! எமது பிரதிநிதிகளை நாமே தெரிவு செய்வோம்.
நாம் செய்யும் இந்தத் தேசிய கடமை- எமது தாயகத்த்தில் இருக்கும் மக்களுக்கும் உதவும் கடமைகளாக மாறும். வரும் தேர்தல்களின் முக்கியத்துவத்தை தமிழ் மக்களுக்கு விளக்கவும் தமிழர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கும் அதற்குரிய படிவங்களை நிரப்புவதற்கு உதவி செய்வதற்கும், அதற்கும் மேலாக எமது மக்களுக்கு பிரான்சு மொழியில் அவர்களுக்கு தேவையான சகல உதவிகளை செய்யவும் இந்த பணிமனை செயல்படும்.
ஈழத் தமிழ் மக்கள் தாம் பிரான்சில் எல்லா மக்களையும் போல சகல உரிமைகளுடன் வாழுவாதற்கான சகல சட்ட ஆலோசனைகளை வழங்க எம்மாலான உதவிகளையும் நாம் செய்வோம். தமிழர்களாக தலை நிமிர்வோம்! தமிழர்களாக எழுவோம், உரிமை மறுக்கப்பட்டுக் குரல் இழந்த எம்மக்களின் குரலாக நாம் இருப்போம் என்ற எமது அடிப்படை சிந்தனைக்கு அமைய எமது பணிமனை செயல்படும்.
தொடர்புகளுக்கு : 06 52 72 58 67, 06 52 72 58 67 ,
mte.france@gmail.com
தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment